×
 

அடேய்ய்.. யார்ரா நீங்க.. புதுசு புதுசா யோசிக்கிறீங்கப்பா.. சீனாவில் வந்தாச்சு தங்க ஏடிஎம்..!

புதிய தொழில்நுட்பமாக சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தங்க ஏடிஎம் இயந்திரத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொழில்நுட்பத்தில் எப்போதுமே அட்வான்ஸாக செல்லும் நாடு என்றால் கண்ணை மூடிக்கொண்டு அனைவரும் சொல்லும் ஒரே பெயர் என்றால் அது சீனா தான்... எங்கிருந்து பா இப்படி யோசிக்கிறீங்க என்ற அளவிற்கு அவர்களது தொழில்நுட்பம் மற்ற நாடுகளை திரும்பி பார்க்க வைக்கிறது என்றே சொல்லலாம். 

ஏற்கனவே சீனாவில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளில் தங்களது உள்ளங்கையை நீட்டினால் மட்டும்போதும், அதுவாகவே ஸ்கேன் செய்து தங்களது அக்கவுண்ட்டில் இருந்து பணத்தை எடுத்துக்கொள்ளும் ஒரு புதிய தொழில்நுட்பத்தை சீனா கண்டுபிடித்தது. அப்போது அதற்கும் ஒருபடி மேலே சென்று அந்த நாட்டில் தங்க ஏடிஎம் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அது தங்கத்தால் செய்யப்பட்ட ஏடிஎம் இயந்திரம் அல்ல, அதன் செயல்பாடே வேறு... அது என்ன என்பது பற்றி விரிவாக பார்க்கலாம் வாங்க... 

இதையும் படிங்க: 22 நாள் பேட்டரி.. AMOLED டிஸ்ப்ளே.. மாஸ் லுக்குடன் வரும் Vivo Watch 5.. விலை எவ்வளவு?

தங்கத்தின் விலை தற்போது விண்ணைமுட்டும் அளவிற்கு உயர்ந்துகொண்டே வருகிறது. ஒரு சவரன் தங்கம் விரைவில் ஒரு லட்சம் ரூபாயை தொடும் என்று கூறுகின்றனர் நகை வல்லுநர்கள். இதை கேட்கும்போதே சாமானிய மக்களின் வயிற்றில் புளியைக் கரைப்பதுபோல் உள்ளது.  

தங்கத்தை விலை ஒருபக்கம் ஏறிக்கொண்டே இருக்க, மறுபக்கம் பழைய நகைகளை விற்கும் முடிவு மக்களிடையே அதிகரித்துள்ளது. இதை யோசித்த சீனாவின் கிங்ஹூட் குழுமும், சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள ஒரு மாலில், புதிய வகை ஏடிஎம் ஒன்றை நிறுவியுள்ளது. இந்த ஏடிஎம்மின் சிறப்பம்சம் என்னவென்றால், அதில் நீங்கள் உங்கள் தங்க நகைகள், தங்கக் காசுகள், தங்கக் கட்டிகள் போன்றவற்றை வைத்தால், அரை மணி நேரத்தில் அந்த தங்கத்திற்கு நிகரான பணத்தை உங்களுக்கு கொடுக்குமாம்.  இதனால், மக்கள் தங்கள் பழைய நகைகளை விற்பனை செய்வது எளிதாகிறது. மேலும் இதற்கு எந்த ஆவணமும் தேவையில்லை என்று சொல்லப்படுகிறது. 

இந்த இயந்திரத்தில் வைக்கப்படும் தங்க நகைகளை அது ஸ்கேன் செய்து, பின்னர் அதை சுமார் 1200 டிகிரி வெப்ப நிலையில் உருக்கி, எடை போட்டு, பியூரிட்டியை சரிபார்க்கிறது. அதைத் தொடர்ந்து, அன்றைய தங்கத்தின் விலை என்ன என்பதை கணக்கிட்டு, சர்வீஸ் சார்ஜை மட்டும் எடுத்துக்கொண்டு, தங்கம் வைத்தவரின் வங்கிக் கணக்கிற்கு பணத்தை மாற்றுகிறது. இந்த தங்க ஏடிஎம், குறைந்தபட்சம் 3 கிராம் எடையும், 50 சதவீத தூய்மையையும் கொண்ட தங்க பொருட்களை பெற்றுக்கொள்ளுமாம். 

இந்த தங்க ஏடிஎம்மிற்கு சீன மக்கள் நலன் வரவேற்பு கொடுத்து வரும் நிலையில், இதன் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://x.com/SimonDixonTwitt/status/1914358622684958779?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1914358622684958779%7Ctwgr%5E0f85476fda0aaa4f4b7ec8ee25ea6bfaf71d3206%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftamil.abplive.com%2Fnews%2Fworld%2Fchina-gold-atm-user-can-sell-gold-jewellery-receive-money-in-30-mins-221882

இதையும் படிங்க: 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஆப்பு.. இன்ஸ்டாகிராம் டீன் ஏஜ் கணக்கு.. யாரும் ஏமாத்த முடியாது!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share