டெஸ்லா ரோட்ஸ்டர்: இந்தியாவில் தொடங்கியாச்சு முன்பதிவு..!! அடேங்கப்பா.. விலை இவ்ளோவா..!!
இவை அனைத்தும் வெறும் முன்பதிவுக் கட்டணங்களே. இறுதி விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
அமெரிக்க மின்சார வாகன நிறுவனமான டெஸ்லாவின் அடுத்த தலைமுறை ரோட்ஸ்டர் ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் முன்பதிவுக்குத் திறக்கப்பட்டுள்ளது. ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்தக் காரின் வணிகரீதியான உற்பத்தி 2028-ஆம் ஆண்டில் தொடங்கும் என நிறுவனம் அறிவித்துள்ளது. ஆரம்பத்தில் இடது கை ஓட்டுநர் மாதிரிகளே தயாரிக்கப்படும் என்பதால் இந்தியாவில் வலது கை ஓட்டுநர் பதிப்பு எப்போது கிடைக்கும் என்பது இன்னும் தெளிவாகவில்லை.
டெஸ்லா இந்தியா இணையதளத்தில் பெர்ஃபார்மன்ஸ் மற்றும் த்ரஸ்ட் ஆகிய இரண்டு மாடல்களுக்கு முன்பதிவு செய்யலாம். இரு மாடல்களுக்கும் ஆரம்பக் கட்டணம் ரூ.5.01 லட்சம். இது முழுமையாகத் திரும்பப் பெறக்கூடியது. அடுத்த 10 நாட்களுக்குள் மீதமுள்ள தொகையைச் செலுத்த வேண்டும். இல்லையெனில் முன்பதிவு ரத்து செய்யப்படலாம்.
பெர்ஃபார்மன்ஸ் மாடலுக்கு கூடுதலாக ரூ.45.05 லட்சம் செலுத்தி மொத்தம் ரூ.50.06 லட்சம் ஆகும். த்ரஸ்ட் மாடலுக்கு அதே ஆரம்பக் கட்டணத்துடன் ரூ.2,45,24,000 செலுத்த வேண்டும். இதனால் மொத்த முன்பதிவுத் தொகை சுமார் ரூ.2.50 கோடியாக உயர்கிறது. த்ரஸ்ட் மாடலை ஒரு நபர் ஒரு காருக்கு மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். இவை அனைத்தும் வெறும் முன்பதிவுக் கட்டணங்களே. இறுதி விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இதையும் படிங்க: TRAI உத்தரவு எதிரொலி.. ஏர்டெல் அறிமுகப்படுத்திய 3 புதிய ரீசார்ஜ் திட்டங்கள்!! அடடே..!!
மூன்று மாடல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பெர்ஃபார்மன்ஸ் மாடல் சாதாரண சாலை ஓட்டத்திற்கு ஏற்றது. இதில் த்ரஸ்டர்கள் இல்லை. ஆனால் செயலில் உள்ள ஏரோடைனமிக்ஸ் மற்றும் சக்ஷன் சிஸ்டம் மூலம் அதிக பிடிப்புத் திறன் பெறப்படுகிறது. 0 முதல் 60 மைல் வேகத்தை 1.6 வினாடிக்குள் எட்டும் எனக் கூறப்படுகிறது.
த்ரஸ்ட் மாடலில் பின்புறத்தில் குளிர் வாயு த்ரஸ்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது அதிவேக முடுக்கம் அளிக்கும். டெமோவில் 0.81 வினாடியில் 60 மைல் வேகத்தை எட்டியதாகக் காட்டப்பட்டது. ராக்கெட் மாடல் ஒற்றை இருக்கை கொண்டது. முழு பறக்கும் வசதியுடன் 10 த்ரஸ்டர்கள் உள்ளன. இது சிறப்பு வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அழைப்பின் பேரில் கிடைக்கும். பொதுச் சாலைகளில் பறக்கும் வசதியைப் பயன்படுத்த சட்ட அனுமதி இல்லை.
SR-71 மற்றும் F-35 விமானங்களின் வடிவமைப்பைப் பின்பற்றி உருவாக்கப்பட்ட இந்தக் கார், ஸ்பேஸ்எக்ஸ் தொழில்நுட்பத்தை இணைத்துள்ளது. இந்திய வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி தேதி, இறுதி விலை மற்றும் வலது கை ஓட்டுநர் பதிப்பு குறித்த விவரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. மின்சார ஸ்போர்ட்ஸ் கார்களில் ஆர்வமுள்ளோர் இதை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.