×
 

கம்மி விலையில்.. வருகிறது புது மேக்புக் மாடல்..!! சிறப்பம்சங்கள் என்னென்ன தெரியுமா..??

ஆப்பிள் நிறுவனத்தின் முற்றிலும் புதிய குறைந்த விலை மேக்புக் மாடல் வரும் மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் தனது மேக்புக் தொடரில் முற்றிலும் புதிய, குறைந்த விலை கொண்ட மாடலை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. பிரபல ஆப்பிள் ஆய்வாளரான மார்க் குர்மேன் வெளியிட்ட சமீபத்திய தகவல்களின்படி, இந்த புதிய மேக்புக் மார்ச் மாதத்தில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆப்பிளின் மேக்புக் வரிசையில் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் மாடலாக இருக்கும்.

இந்த மேக்புக் J700 என்ற உள் குறியீட்டு பெயரில் உருவாக்கப்பட்டு வருகிறது. தற்போதைய மேக்புக் மாடல்களைப் போலவே, இதுவும் முழுமையான அலுமினிய உடலமைப்புடன் (full aluminum chassis) வடிவமைக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் போன்ற குறைந்த தரமான பொருட்களைப் பயன்படுத்தாமல், பிரீமியம் உணர்வைத் தக்க வைத்துக்கொள்ள ஆப்பிள் சிறப்பு முயற்சி எடுத்துள்ளது. 

இதையும் படிங்க: கூகுள் குரோமை பயன்படுத்தாதீங்க..!! ஐபோன், மேக் யூசர்ஸ்க்கு ஆப்பிள் வார்னிங்..!!

இதற்காக, நிறுவனம் புதிய வகை அலுமினிய ஷெல்-ஃபோர்ஜிங் (revised shell-forging) உற்பத்தி முறையை உருவாக்கியுள்ளது. இந்த முறை வழக்கமான உற்பத்தியை விட வேகமாகவும், குறைந்த செலவிலும் செயல்படுத்தப்படுகிறது. இதனால், உற்பத்தி செலவு கணிசமாகக் குறைக்கப்பட்டு, விலையை மலிவாக வைக்க முடியும்.

விலையைக் குறைக்க மற்றொரு முக்கிய மாற்றம், பிராசஸர் தேர்வில் உள்ளது. தற்போதைய M-சீரிஸ் சிப்செட்டுக்கு பதிலாக, ஐபோன் தரத்தில் உள்ள A-சீரிஸ் பிராசஸர் (குறிப்பாக A18 Pro போன்றது) பயன்படுத்தப்பட உள்ளது. இது டாப்-எண்ட் மேக்புக் மாடல்களுடன் ஒப்பிடுகையில் வேறுபாடு ஏற்படுத்தும் என்றாலும், அன்றாட பயன்பாடு, கல்வி, அலுவலகப் பணிகள் போன்றவற்றுக்கு போதுமான செயல்திறனை வழங்கும். 

இந்த மாடலில் 13 இன்ச் அளவுக்கும் சற்றே சிறிய டிஸ்ப்ளே (சுமார் 12.9 இன்ச்) இருக்கும் எனத் தெரிகிறது. வண்ண விருப்பங்களில் ஆப்பிள் சுவாரஸ்யமான அணுகுமுறையைப் பின்பற்றியுள்ளது. பாரம்பரிய சில்வர் மற்றும் டார்க் கிரேவுடன், லைட் எல்லோ, லைட் கிரீன், புளூ, பின்க் போன்ற பிரகாசமான, வண்ணமயமான விருப்பங்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன. இவை iMac-ஐ நினைவூட்டும் வகையில் 'fun colors' என அழைக்கப்படுகின்றன. 

இருப்பினும், இறுதியாக எத்தனை வண்ணங்கள் சந்தையில் கிடைக்கும் என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. விலை அம்சத்தில், இந்த மேக்புக் 1000 டாலர்களுக்கும் குறைவாக, சுமார் 700-800 டாலர் வரம்பில் (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.60,000 முதல் ரூ.90,000 வரை) விற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தற்போதைய மேக்புக் எயர் மாடல்களை விட கணிசமாக மலிவானதாக இருக்கும். 

மாணவர்கள், கல்வி நிறுவனங்கள், பட்ஜெட்-நோக்கிய பயனர்கள் மற்றும் Chromebook, Windows லேப்டாப்களுடன் போட்டியிடும் நோக்கில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில், ஆப்பிள் இந்த புதிய மேக்புக் மூலம் பிரீமியம் உருவ அமைப்பு, நல்ல செயல்திறன் ஆகியவற்றை மலிவு விலையில் வழங்க முயல்கிறது. மார்ச் மாதத்தில் நடைபெறக்கூடிய சிறப்பு நிகழ்வில் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: அசத்தும் ஆப்பிள்..!! விரைவில் iPhone Flip அறிமுகம்..!! வாடிக்கையாளர்கள் குஷி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share