பல.. பல.. சிறப்பம்சங்களுடன்..!! புது லேப்டாப்களை அறிமுகம் செய்த ASUS..!!
புதிய லேப்டாப் மாடல்கள் ஆன்-டிவைஸ் ஏ.ஐ. வசதிகளை கொண்டிருக்கின்றன.
உலகப் புகழ்பெற்ற தொழில்நுட்ப நிறுவனமான அசுஸ், இந்திய சந்தையில் தனது புதிய விவோபுக் தொடரை அறிமுகம் செய்துள்ளது. X1404MA மற்றும் X1504MA என இரு மாடல்களில் வெளியிடப்பட்டுள்ள இந்த லேப்டாப்கள், மாணவர்கள், இளம் தொழில்முனைவோர் மற்றும் பயணத்தை விரும்பும் பயனர்களின் தேவைகளை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த புதிய மாடல்கள் இன்டெல் கோர் 7 சீரிஸ் 3 பிராசஸருடன் (Core 7 350) வருகின்றன. இவற்றில் பிரத்யேக நியூரல் பிராசஸிங் யூனிட் (NPU) இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆன்-டிவைஸ் AI அம்சங்கள் சீராக இயங்கும். புகைப்பட எடிட்டிங், வீடியோ கால்கள், மல்டி டாஸ்கிங் உள்ளிட்ட பணிகளை வேகமாக முடிக்க இந்த AI தொழில்நுட்பம் உதவுகிறது. அதிகபட்சம் 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி SSD ஸ்டோரேஜ் ஆதரவுடன், லேப்டாப் விரைவாக பூட் ஆகும் திறன் கொண்டுள்ளது.
காட்சி அனுபவம் மற்றும் வடிவமைப்பு: இரு மாடல்களிலும் Full HD IPS டிஸ்ப்ளே உள்ளது. 84 சதவீதம் ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோவுடன் கூடிய இந்தத் திரை, தெளிவான படங்களையும் வண்ணங்களையும் தருகிறது. ஆப்ஷனல் டச் ஸ்க்ரீன் வசதியும் கிடைக்கிறது. மிக மெல்லிய மற்றும் இலேசான எடையில் வடிவமைக்கப்பட்ட இந்த லேப்டாப்கள், தினசரி பயன்பாட்டுக்கு ஏற்றவாறு உள்ளன.
இதையும் படிங்க: அடடே..!! கலக்கும் BSNL..!! சாட்டிலைட் போன் அறிமுகம் செய்து அசத்தல்..!!
பாதுகாப்பு மற்றும் இணைப்பு வசதிகள்: பயனர்களின் தனியுரிமையை முன்னிலைப்படுத்தி 720p HD கேமராவில் பிரைவசி ஷட்டர் வழங்கப்பட்டுள்ளது. கைரேகை சென்சார், விரைவான லாகின் அனுபவத்தைத் தருகிறது. SonicMaster ஆடியோ சிஸ்டம் தெளிவான ஒலி அனுபவத்தை வழங்குகிறது. Wi-Fi 6 மற்றும் Bluetooth 5.3 தொழில்நுட்பங்கள் மூலம் வேகமான இணைய இணைப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 42 வாட்-மணி நேர பேட்டரி பேக் நீண்ட நேரம் பயன்படுத்த அனுமதிக்கிறது. அமெரிக்க MIL-STD 810H மிலிட்டரி தர நிர்ணயத்துக்கு உட்பட்ட டியூரபிலிட்டி கொண்ட இந்த லேப்டாப்கள், பயணம் மற்றும் கடினமான சூழல்களுக்கும் ஏற்றவை.
விலை மற்றும் கிடைக்கும் தன்மை: Vivobook 15 (X1504MA) மாடலின் துவக்க விலை ரூ.75,990 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது அசுஸ் அதிகாரப்பூர்வ ஸ்டோர்கள் மற்றும் முக்கிய ஆன்லைன் தளங்களில் உடனடியாக கிடைக்கிறது. Vivobook 14 (X1404MA) மாடலின் விலை ரூ.1,07,990 என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் விற்பனை ஜூலை 26ஆம் தேதி தொடங்குகிறது. AI தொழில்நுட்பம், நீண்ட பேட்டரி ஆயுள் மற்றும் உயர்தர உருவாக்கத்துடன் குறைந்த விலையில் சிறந்த செயல்திறனை வழங்கும் இந்த மாடல்கள், இந்திய சந்தையில் குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அடடே.. இத்தனை FEATURES-ஆ..!! புது ஸ்மார்ட்போனை லான்ச் செய்த Moto..!!