×
 

வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸில் இனி நம்மளோட ஸ்டிக்கர்ஸ்.. வந்தாச்சு புது அப்டேட்.. கலக்கும் மெட்டா..!

பயனாளர்கள் தங்கள் புகைப்படத்தை வாட்ஸ்ஆப் ஸ்டேட்ஸ்ல் ஸ்டிக்கராக பகிரும் வகையில் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது மெட்டா.

மக்கள் தங்களது கைகளில் மொபைல் போனை எடுத்தாலே முதலில் செல்வது வாட்ஸ்அப்க்குள் தான். இந்த செயலியை கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். குறுஞ்செய்தி அனுப்பும் தளமாக முதலில் அறிமுகம் செய்யப்பட்ட வாட்ஸ்அப் செயலியை மெட்டா நிறுவனம் கையகப்படுத்தியதிலிருந்து பல்வேறு அப்டேட்டுகள் செய்யப்பட்டு வருகிறது.

ஆடியோ, வீடியோ, பிடிஎப் பைல்கள் அனுப்பும் வசதி, வாட்ஸ் அப்பில் போட்டோஸ், வீடியோக்களை ஸ்டேட்டஸ் ஆக வைக்கும் வசதி, தங்கள் அக்கவுண்ட்டிலிருந்து மற்றொருவருக்கு பணம் அனுப்பும் வசதி என புதுசு புதுசாக பல அப்டேட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும் சமீபத்தில் கூட இன்ஸ்டாகிராமில் வைப்பது போல் புகைப்படங்களுடன் பாடல்களையும் சேர்த்து ஸ்டேட்டஸ் வைக்கும் வசதியையும் வாட்ஸ்அப் கொண்டு வந்தது. இந்த அப்டேட் யூசர்ஸ்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. 

இதையும் படிங்க: WhatsApp-ல் வந்தது புது அப்டேட்… இனி குறைந்த டேட்டாவில் அதிக Storage!!

இந்நிலையில் ஸ்மார்ட் ஃபோன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்றிருக்கும் வாட்ஸ்அப் தற்போது அற்புதமான, அசத்தலான அப்டேட் ஒன்றை கொண்டு வந்துள்ளது. அதாவது தங்கள் புகைப்படத்தை வாட்ஸ்ஆப் ஸ்டேட்ஸ்ல் ஸ்டிக்கராக பகிரும் வகையில் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது மெட்டா. ஸ்டேட்டஸ் பகிரும் போது அதில் உள்ள photo என்ற ஆப்ஷனை கிளிக் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த அப்டேட் பயனாளர்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையும் படிங்க: 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஆப்பு.. இன்ஸ்டாகிராம் டீன் ஏஜ் கணக்கு.. யாரும் ஏமாத்த முடியாது!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share