அசத்தும் ஆப்பிள்..!! விரைவில் iPhone Flip அறிமுகம்..!! வாடிக்கையாளர்கள் குஷி..!!
ஆப்பிள் நிறுவனம் முதல் முறையாக மடிக்கக்கூடிய ஐபோனை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் முதல் முறையாக மடிக்கக்கூடிய ஐபோன் அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. இது மோட்டோரோலா ரேஸர் மற்றும் சாம்சங் கேலக்ஸி Z ஃபிளிப் போன்ற மடிக்கும் ஸ்மார்ட்போன்களுக்கு நேரடி போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புகழ்பெற்ற புளூம்பெர்க் நிறுவனத்தின் மூத்த பத்திரிகையாளர் மார்க் குர்மன் (Mark Gurman) வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி, ஆப்பிள் தனது முதல் மடிக்கும் ஐபோனை 2026ஆம் ஆண்டு இறுதியில், குறிப்பாக செப்டம்பர் மாதத்தில் iPhone 18 Pro மாடல்களுடன் இணைத்து அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இந்த முதல் மாடல் புத்தக வடிவில் (book-style) இருக்கும் எனத் தெரிகிறது. அதாவது, Samsung Galaxy Z Fold தொடரைப் போல உள்ளே திறக்கும் வகையில் பெரிய டிஸ்ப்ளே கொண்டதாக இருக்கும். வெளிப்புறத்தில் சுமார் 5.5 அங்குல அளவிலான சிறிய டிஸ்ப்ளே இருக்கும். இது ஆப்பிள் வரிசையில் மிக உயர்ந்த இடத்தில் (premium segment) வைக்கப்படும்.
இதையும் படிங்க: கூகுள் குரோமை பயன்படுத்தாதீங்க..!! ஐபோன், மேக் யூசர்ஸ்க்கு ஆப்பிள் வார்னிங்..!!
விலை குறைந்தபட்சம் $2,000 (சுமார் ரூ.1.7 லட்சம்) ஆக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால், ஃபோல்டபிள் சந்தையில் ஆப்பிள் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும் என IDC போன்ற ஆய்வு நிறுவனங்கள் கணித்துள்ளன. 2026இல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் சந்தை 30% வளர்ச்சி அடையும் என்றும், ஆப்பிள் மாடல் 22% அலகு பங்கு மற்றும் 34% வருவாய் பங்கைப் பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ஆப்பிள் இதற்கு அடுத்தபடியாக கிளாம்ஷெல் வடிவிலான (clamshell-style) மற்றொரு மடிக்கும் ஐபோனை ஆராய்ந்து வருகிறது. இது iPhone Flip என்று அழைக்கப்படலாம். Samsung Galaxy Z Flip போல சதுர வடிவில் மடிந்து சிறிய அளவில் பாக்கெட்டில் வைக்கும் வசதியுடன் இருக்கும். இது முதல் மாடலின் வெற்றியைப் பொறுத்து மட்டுமே சந்தைக்கு வரும் வாய்ப்பு உள்ளது என குர்மன் தெரிவித்துள்ளார்.
தற்போது இது ஆரம்ப கட்ட ஆய்வு நிலையில் உள்ளது .இந்த அறிமுகம் ஆப்பிளின் ஐபோன் வரலாற்றில் மிகப் பெரிய மாற்றமாகக் கருதப்படுகிறது. ஏழு ஆண்டுகளாக சாம்சங் ஆதிக்கம் செலுத்தி வரும் ஃபோல்டபிள் சந்தையில் ஆப்பிள் நுழைவது, புதிய போட்டியை உருவாக்கும்.
ஆப்பிள் தனது சாதனங்களில் உறுதியான வடிவமைப்பு, சிறந்த மென்பொருள் ஒருங்கிணைப்பு மற்றும் நீண்டகால ஆதரவு ஆகியவற்றால் வேறுபடுத்திக் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இறுதி விவரங்கள், விலை, துல்லியமான வெளியீட்டு தேதி ஆகியவை ஆப்பிள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரை உறுதியாகாது. டெக் உலகில் இந்த மாற்றம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.