×
 

'FULLY MADE IN INDIA' தான்.. ஐபோன் 17 சீரிஸ் மொபைல்கள் இந்தியாவில் தயாரிப்பு..!!

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 17 சீரிஸ் மொபைல்கள் அனைத்துமே இந்தியாவில் தயாரிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 17 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை முழுமையாக இந்தியாவில் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த முடிவு, இந்தியாவின் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்கும், உலகளாவிய விநியோகச் சங்கிலியில் இந்தியாவின் பங்கை வலுப்படுத்துவதற்கும் ஆப்பிள் எடுத்துள்ள முக்கியமான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

ஐபோன் 17, ஐபோன் 17 ப்ரோ, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மற்றும் ஐபோன் 17 ஏர் ஆகிய மாடல்களை உள்ளடக்கிய இந்த சீரிஸ், செப்டம்பர் 2025-இல் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் உற்பத்தியை மேற்கொள்ள, ஆப்பிள் நிறுவனம் தனது முக்கிய பங்குதாரரான ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது. 

இதையும் படிங்க: Airtel ப்ரீபெய்டு கஸ்டமர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. 6 மாசத்துக்கு Apple Music சேவை ஃப்ரீயாம்..!!

தமிழ்நாட்டில் உள்ள ஃபாக்ஸ்கானின் தொழிற்சாலைகளில் இந்த உற்பத்தி மேற்கொள்ளப்படுவதுடன், பெங்களூருவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆலையும் இதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் ஓசூரில் புதிதாகத் தொடங்கப்பட்ட tata குழுமத்தின் ஆலை என இந்தியாவில் உள்ள ஐந்து ஆலைகளிலும் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த முயற்சி, இந்திய அரசின் உற்பத்தி-இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டத்தின் (PLI) கீழ் மேற்கொள்ளப்படுகிறது. 2024-ஆம் ஆண்டில் இந்தியாவில் இருந்து 22 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஐபோன்களை ஆப்பிள் ஏற்றுமதி செய்ததாகவும், இது முந்தைய ஆண்டை விட 60% அதிகமாகும் என்றும் ப்ளூம்பெர்க் அறிக்கை தெரிவிக்கிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஐபோன்களில் 70% வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன, இது இந்தியாவின் தொழில்நுட்ப உற்பத்தித் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.

ஐபோன் 17 சீரிஸ் iOS 19 இயங்குதளத்துடன், மேம்படுத்தப்பட்ட கேமரா வடிவமைப்பு மற்றும் அலுமினிய சேஸ் உடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் உற்பத்தியை மேற்கொள்வதன் மூலம், ஆப்பிள் உற்பத்தி செலவைக் குறைப்பதுடன், உலகளாவிய சந்தையில் போட்டித்தன்மையை அதிகரிக்க முயல்கிறது. இது இந்தியாவில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன், ‘மேக் இன் இந்தியா’ முயற்சிக்கு பெரும் பங்களிப்பாக அமையும்.

இந்தியாவில் உற்பத்தி அதிகரிப்பதற்கு அமெரிக்கா-சீனா வர்த்தகப் பதற்றங்களும் ஒரு காரணமாக அமைந்துள்ளன. ஆப்பிள் நிறுவனத்தின் இந்த முடிவு, இந்தியாவின் தொழில்நுட்ப உற்பத்தித் துறையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதாக அமைந்துள்ளது.

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share