இந்திய மார்க்கெட்டில் சக்கைப் போடு போடும் கூகுள் பிக்சல் 10..!! அடேங்கப்பா..!! இவ்ளோ டிஸ்கவுண்ட்டா..!!
பேங்க் டிஸ்கவுண்ட் போக விற்பனையில் பட்டையை கிளப்பி வருகிறது கூகுள் பிக்சல் 10 (Google Pixel 10) ஸ்மார்ட்போன்.
கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ஆப்பிள் ஐபோன்களுக்கு இணையான பிரீமியம் அம்சங்கள், வலுவான உருவமைப்பு மற்றும் நீண்டகால மென்பொருள் ஆதரவுடன் இது தனித்து நிற்கிறது. கூகுளின் சொந்த டென்சார் ஜி5 சிப்செட் மற்றும் இன்டிகிரேட்டட் ஜெமினி ஏஐ அசிஸ்டன்ட் ஆகியவை இதன் முக்கிய ஈர்ப்புகளாக உள்ளன.
இந்த ஸ்மார்ட்போன் 6.3 இன்ச் அமோலெட் டிஸ்பிளேவுடன் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஃபுல் எச்டி+ ரெசொலூஷன் (1080 x 2424 பிக்சல்கள்), 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் அதிகபட்சம் 3000 நிட்ஸ் பிரைட்னஸ் கிடைக்கிறது. 422 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் எச்டிஆர் சப்போர்ட் ஆகியவை படங்களையும் வீடியோக்களையும் தெளிவாகக் காட்ட உதவுகின்றன. கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு அளவில் மேம்பட்ட டியூரபிலிட்டியை வழங்குகிறது.
3nm செயல்முறையில் உருவாக்கப்பட்ட கூகுள் டென்சார் ஜி5 சிப்செட் இதன் இதயமாக செயல்படுகிறது. டைட்டன் எம்2 செக்யூரிட்டி சிப் கூடுதல் பாதுகாப்பை உறுதி செய்கிறது. ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்துடன் வெளியான இது, 7 ஆண்டுகள் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அப்டேட்கள் மற்றும் 7 ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட்கள் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பயனர்களுக்கு நீண்டகால ஆதரவை உறுதிப்படுத்துகிறது.
இதையும் படிங்க: ஸ்மார்ட் போன் யூசர்ஸ்களுக்கு குட் நியூஸ்..!! கூகுள் பிளே ஸ்டோரில் வந்தாச்சு சூப்பர் அப்டேட்..!! இனி கவலையே இல்ல..!!
கேமரா அமைப்பில் 48 எம்பி மெயின் சென்சார் (சாம்சங் ஜிஎன்8, ஓஐஎஸ் உடன்), 13 எம்பி அல்ட்ரா வைடு (சோனி ஐஎம்எக்ஸ்712) மற்றும் 10.8 எம்பி டெலிபோட்டோ (சாம்சங் 3ஜே1) ஆகியவை இடம்பெற்றுள்ளன. 20X சூப்பர் ரெஸ் ஜூம் மற்றும் 120X டிஜிட்டல் ஜூம் வசதிகள் உள்ளன. 4K வீடியோ ரெக்கார்டிங், சினிமாடிக் பிளர் போன்ற மேம்பட்ட அம்சங்கள் புகைப்படம் எடுப்பதை சுவாரஸ்யமாக்குகின்றன. முன்பக்கத்தில் 10.5 எம்பி செல்பீ கேமரா உள்ளது. 4970mAh பேட்டரி 29W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது.
Obsidian, Frost, Lemongrass, Indigo ஆகிய நான்கு கவர்ச்சிகரமான வண்ணங்களில் கிடைக்கிறது. மேஜிக் கியூ, ஆட்டோ பெஸ்ட் டேக், பிக்சல் ஜெர்னல் ஆப் போன்ற ஏஐ அடிப்படையிலான அம்சங்கள் பயன்பாட்டை எளிமையாக்குகின்றன. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆரம்பத்தில் ரூ.79,999-க்கு விற்கப்பட்டது. தற்போது பிளிப்கார்ட்டில் ரூ.74,999-க்கு (ரூ.5,000 நேரடி விலை குறைப்பு) கிடைக்கிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி கார்டுகளுக்கு (குறிப்பாக HDFC) ரூ.5,000 கூடுதல் டிஸ்கவுண்ட் கிடைப்பதால், ரூ.69,999-க்கு வாங்க முடிகிறது. இதன்மூலம் மொத்தம் ரூ.10,000 சேமிப்பு கிடைக்கிறது.ஏஐ அம்சங்கள் நிறைந்த, நீண்ட ஆதரவு கொண்ட இந்த பிரீமியம் ஸ்மார்ட்போனை இந்த சலுகை விலையில் பெறுவது பயனர்களுக்கு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: அடடே..!! பட்ஜெட் விலையில் அட்டகாச அம்சங்கள்..!! போக்கோ ஸ்மார்ட்போனின் நியூ மாடல் இதுதான்..!!