×
 

இனி நெட் வேண்டாம்..!! லைவ் டிவி நிகழ்ச்சிகளை மொபைலில் ஜாலியா பார்க்கலாம்..!!

‘டைரக்ட் டு மொபைல்’ என்ற புதிய தொழில்நுட்பத்தின் மூலம் லைவ் டிவி நிகழ்ச்சிகளை மொபைலில் பார்க்கும் வசதி கொண்டு வரப்பட உள்ளது.

இன்றைய உலகில் செல்போன் இல்லாதவர்கள் யாரும் இல்லை என்று கூறலாம். குறிப்பாக ஸ்மார்ட்போன்கள் வந்த பிறகு, அவை மக்களின் அன்றாட வாழ்வில் இன்றியமையாத பகுதியாக மாறிவிட்டன. பொழுதுபோக்குக்காக டிவி பார்க்கும் பழக்கம் பலரிடம் குறைந்துவிட்டது, அதற்கு பதிலாக செல்போன்களே முதன்மை இடத்தைப் பிடித்துள்ளன.

இளம் தலைமுறையினர் செல்போன் இல்லாமல் இருக்க மாட்டார்கள், ஆனால் டிவியைத் தவிர்த்துவிடலாம். யூடியூப் வீடியோக்கள், லைவ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றவை செல்போன்களில் பார்க்கப்படுகின்றன. ஆனால் இவை அனைத்துக்கும் இணைய இணைப்பு அவசியம். இணையம் இல்லையெனில், இவற்றை அணுக முடியாது.

இந்த நிலையை மாற்றும் வகையில், மத்திய அரசு ஒரு புரட்சிகர தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. 'டைரக்ட் டு மொபைல்' (Direct to Mobile) எனும் இந்த புதிய தொழில்நுட்பம், இணையம் இல்லாமலேயே மொபைல் போன்களில் லைவ் டிவி நிகழ்ச்சிகளைப் பார்க்க உதவும். தொலைத்தொடர்புத் துறை இதனை தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. தற்போது சோதனை கட்டத்தில் உள்ள இந்த தொழில்நுட்பத்தை, விரைவில் 19 முக்கிய நகரங்களில் பரவலாகக் கொண்டுவர அரசு முடிவு செய்துள்ளது.

இதையும் படிங்க: Asus பயனர்களுக்கு அதிர்ச்சி..!! இந்த வருஷம் புது மாடல் ஃபோன்கள் வராதாம்..!! ஷாக் கொடுத்த நிறுவனம்..!!

இது எப்படி செயல்படும்? செயற்கைக்கோள் (சாட்டிலைட்) மூலம் நேரடியாக சிக்னல்களை செல்போனுக்கு அனுப்பும் வகையில் இந்த தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரேடியோ அலைவரிசையைப் போல, டிவி சேனல்களின் சிக்னல்களை ஒரு சிறப்பு சிப் பிடித்து, வீடியோவை ஒளிபரப்பும். இதற்காக, பிரத்யேக சிப் பொருத்தப்பட்ட புதிய செல்போன்களை உற்பத்தி செய்யும் பணியில் சில தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

பெங்களூருவைச் சேர்ந்த 'சான்கியா லேப்ஸ்' (Saankhya Labs) நிறுவனம் இந்த சிப்பை உருவாக்கும் முயற்சியில் முன்னணியில் உள்ளது. முதற்கட்டமாக, பிரசார் பாரதி போன்ற அரசு சேனல்களின் சேவை வழங்கப்படும். பின்னர், பிற தனியார் சேனல்களும் சேர்க்கப்படலாம். இந்த சேவைக்கு கிடைக்கும் பொதுமக்கள் வரவேற்பைப் பொறுத்து, படிப்படியாக நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும். குறிப்பாக, பேரிடர் காலங்களில் அல்லது செல்போன் சிக்னல் இல்லாத தொலைதூரப் பகுதிகளில் இது பெரும் உதவியாக இருக்கும். அரசு இதனை விரைவாக அமல்படுத்த தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.

இருப்பினும், இணைய சேவையால் பெரும் வருவாய் ஈட்டும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்த தொழில்நுட்பத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏனெனில், இது அவர்களின் இணையத் தொடர்பு சேவையை பாதிக்கலாம். எனினும், இந்த புதிய தொழில்நுட்பம் மக்களுக்கு மலிவான, எளிய பொழுதுபோக்கு வழியைத் திறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சியில் ஒரு மைல்கல்லாக அமையும்.

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share