‘ஃபோன் பே’ யூஸ் பண்றீங்களா..?? இனி இத மெயின்டைன் பண்ணலனா ரூ.100 கட்டணமாம்..!!
இதற்கு முன்பு மொபிக்விக் செயலியும் (MobiKwik) இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைத் தளமான ஃபோன் பே தனது வேலட் பயனர்களுக்கு புதிய விதிமுறையை அறிவித்துள்ளது. 12 மாதங்கள் தொடர்ச்சியாக பயன்படுத்தப்படாத வேலட்டுகளுக்கு ஒவ்வொரு காலாண்டுக்கும் (மூன்று மாதங்களுக்கு ஒருமுறை) ரூ.100 பராமரிப்புக் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை வேலட்டில் பண இருப்பு இல்லாதவர்களுக்கு பொருந்தாது.
வேலட்டில் பணம் இருந்தும் 365 நாட்களுக்கு மேல் எந்தப் பரிவர்த்தனையும் மேற்கொள்ளாதவர்களுக்கே இந்தக் கட்டணம் விதிக்கப்படும். ஃபோன் பே நிறுவனம் இதுகுறித்து வெளியிட்டுள்ள விளக்கத்தில், கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு 15 நாட்களுக்கு முன்பாக பயனர்களுக்கு அறிவிப்பு அனுப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தத் தொகை வேலட்டில் உள்ள இருப்பிலிருந்து மட்டுமே கழிக்கப்படும். வங்கிக் கணக்கில் உள்ள பணத்தைத் தொடாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் புதிய விதி, வேலட்டை செயலற்ற நிலையில் வைத்திருப்பதைத் தடுக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ளதாக நிறுவனம் கூறுகிறது.
இந்த அறிவிப்பு பல பயனர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, வேலட்டில் ரூ.100-க்கும் குறைவான தொகை (எடுத்துக்காட்டாக ரூ.20 அல்லது ரூ.50) இருந்தால், அந்த முழுத் தொகையும் கழிக்கப்பட்டு வேலட் இருப்பு பூஜ்ஜியமாகிவிடும் என்பது பயனர்களை அதிகம் பாதிக்கும். “தேவையில்லாத நிலையிலும் வேலட்டை தொடர்ந்து பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது” என பலரும் தங்கள் வருத்தத்தைத் தெரிவித்துள்ளனர். சிறிய தொகைகளை வேலட்டில் வைத்திருப்பவர்கள் இந்தப் புதிய விதியால் பெரும் சிரமத்துக்கு உள்ளாக நேரிடும்.
இதையும் படிங்க: இந்திய டிஜிட்டல் பரிவர்த்தனை புரட்சி: மே மாதத்தில் யுபிஐ சாதனை உச்சம்..!!
இத்தகைய கொள்கைகள் டிஜிட்டல் பணப்புழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் பல நிதி நிறுவனங்கள் அவ்வப்போது அறிவிப்பதுண்டு. இருப்பினும், இது பயனர்களின் சிரமத்தை அதிகரிக்கிறது என விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஃபோன் பே போன்ற பிரபலமான தளங்கள் பயனர் நட்புறவை மேம்படுத்தும் வகையில் இந்த விதிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பயனர்கள் வலியுறுத்துகின்றனர்.
கட்டணத்தைத் தவிர்ப்பது எப்படி? வேலட்டில் பணம் இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க பயனர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. ஒரு மொபைல் ரீசார்ஜ் செய்வது, அருகிலுள்ள கடையில் சிறு பரிவர்த்தனை மேற்கொள்வது அல்லது வேலட்டில் உள்ள தொகையை முழுமையாகச் செலவழிப்பது ஆகியவை வழிகளாகும். மாற்றாக, வேலட்டில் உள்ள பணத்தை உடனடியாக இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கிற்கு மாற்றிக் கொள்ளலாம். இவ்வாறு செய்வதன் மூலம் வேலட் மீண்டும் செயல்பாட்டுக்கு வரும் மற்றும் கட்டணம் விதிக்கப்படாது.
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளின் எதிர்காலத்தில் இத்தகைய கொள்கைகள் முக்கியப் பங்கு வகிக்கும். பயனர்கள் தங்கள் வேலட் இருப்பைத் தொடர்ந்து கண்காணித்து, தேவையற்ற இழப்புகளைத் தவிர்க்க வேண்டும். ஃபோன் பே போன்ற நிறுவனங்கள் பயனர் நலனை மனதில் கொண்டு வெளிப்படையான கொள்கைகளைப் பின்பற்றினால் மட்டுமே டிஜிட்டல் பொருளாதாரம் வலுவடையும்.
இதையும் படிங்க: PULSAR பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! மார்கெட்டிற்கு வந்தாச்சு 2026 பல்சர் 220F மாடல்..!!