Realme-ன் புதிய அதிரடி ஸ்மார்ட்போன் அறிமுகம்.. 8000mAh பேட்டரி, விலை & சிறப்பம்சங்கள்!
புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் 50MP பிரைமரி கேமரா கொண்டிருக்கிறது.
ரியல்மி நிறுவனம் இந்தியாவில் தனது பி4 தொடரின் எட்டாவது மாடலாக ரியல்மி பி4எஸ் 5ஜி ஸ்மார்ட்போனை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய கைப்பேசி, வலுவான செயல்திறன், நீண்டகால பேட்டரி ஆயுள் மற்றும் உயர் தர டிஸ்ப்ளே ஆகியவற்றை ஒருங்கிணைத்து நடுத்தர விலைப் பிரிவில் கவனத்தை ஈர்க்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் 6.78 அங்குல 1.5கே சாம்சங் எம்14 அமோலெட் டிஸ்ப்ளேயைக் கொண்டுள்ளது. இதில் 1272x2772 பிக்சல் ரெசல்யூஷன், 144 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட், எச்டிஆர்10+ ஆதரவு மற்றும் அதிகபட்சம் 6500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளது. வெளிச்சமான சூழலிலும் தெளிவான பார்வை கிடைக்கும். மேலும் ஐபி66, ஐபி68 மற்றும் ஐபி69 தரநிலைகளுடன் தூசி மற்றும் நீர் எதிர்ப்பு திறன் வழங்கப்பட்டுள்ளது. வெப்ப நிர்வாகத்திற்காக 7000 சதுர மில்லிமீட்டர் வேப்பர் சேம்பர் குளிரூட்டும் அமைப்பு இணைக்கப்பட்டுள்ளது.
செயல்திறனில் ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 7400 அல்ட்ரா சிப்செட் இணைந்து ஹைப்பர் விஷன்+ ஏஐ சிப் செயல்படுகிறது. இது கேமிங் அனுபவத்தை மேம்படுத்தி, 144 எஃப்பிஎஸ் வரை ஆதரிக்கிறது. அதிகபட்சம் 12 ஜிபி எல்பிடிடிஆர்4எக்ஸ் ரேம் மற்றும் 256 ஜிபி யுஎஃப்எஸ் 3.1 ஸ்டோரேஜ் கிடைக்கிறது. ரேம் விரிவாக்கம் மூலம் மேலும் இடம் பெறலாம்.
இதையும் படிங்க: புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் ரியல்மி..!! அடடே..!! இவ்ளோ அம்சங்களா..!!
ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான ரியல்மி யுஐ 7 உடன் வரும் இந்த போனுக்கு மூன்று ஆண்டுகள் ஓஎஸ் மேம்படுத்தல்கள் மற்றும் நான்கு ஆண்டுகள் பாதுகாப்பு புதுப்பிப்புகள் உறுதியளிக்கப்பட்டுள்ளது. கேமரா பிரிவில் 50 மெகாபிக்சல் பிரைமரி சென்சார் (ஓஐஎஸ் உடன்), 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் மற்றும் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளன. 8000 எம்ஏஹெச் பேட்டரி 80 வாட் வேக சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இது மூன்று நாட்கள் வரை பயன்பாட்டை வழங்கும் என நிறுவனம் கூறுகிறது.
பைபாஸ் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் வசதிகளும் உள்ளன. 5ஜி, வைஃபை 5, ப்ளூடூத் 5.4 ஆகிய இணைப்பு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.எலெக்ட்ரிக் சியான் மற்றும் டைட்டானியம் கிரே நிறங்களில் கிடைக்கும் இந்த போனின் விலை 8ஜிபி+128ஜிபி மாடலுக்கு ரூ.34,999, 8ஜிபி+256ஜிபிக்கு ரூ.37,999 மற்றும் 12ஜிபி+256ஜிபிக்கு ரூ.41,999 ஆகும்.
எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, எஸ்பிஐ கார்டுகளில் ரூ.3000 வரை உடனடி தள்ளுபடி கிடைக்கிறது. செப்டம்பர் 3 அன்று மதியம் 12 மணிக்கு ப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி இணையதளத்தில் விற்பனை தொடங்குகிறது.
இதையும் படிங்க: புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் ரியல்மி..!! அடடே..!! இவ்ளோ அம்சங்களா..!!