×
 

ஆக. 6-ல் இந்தியாவில் அறிமுகமாகும் ரெட்மி நோட் 17 5ஜி.. 8000mAh பேட்டரியுடன் புதிய வரவு!!

இந்த ஸ்மார்ட்போன் மிகப்பெரிய பேட்டரியுடன் வரும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஸ்மார்ட்போன் சந்தையில் தொடர்ந்து புதுமைகளை அறிமுகப்படுத்தி வரும் சியோமி நிறுவனம், தனது புதிய ரெட்மி நோட் 17 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் வரும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. சமீபத்தில் சீனாவில் வெளியிடப்பட்ட இந்த மாடல், தற்போது இந்திய பயனர்களுக்காக அறிமுகமாகவுள்ளதால் தொழில்நுட்ப ஆர்வலர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த புதிய ஸ்மார்ட்போனுக்காக சியோமி இந்தியா தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தனி மைக்ரோசைட்டை உருவாக்கியுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள தகவலின்படி, "mAhster Edition" என்ற பெயருடன் விளம்பரப்படுத்தப்படும் இந்த மாடலின் மிகப்பெரிய சிறப்பம்சம் 8000mAh திறன் கொண்ட சக்திவாய்ந்த பேட்டரி ஆகும். ஒருமுறை சார்ஜ் செய்தால் நீண்ட நேரம் பயன்படுத்தும் வசதியை இது வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்த ஸ்மார்ட்போனில் 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் ஆதரவுடன் 7 அங்குல அளவிலான பெரிய டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இதனால் கேமிங், வீடியோ பார்வை மற்றும் ஸ்க்ரோலிங் போன்ற பயன்பாடுகளில் மென்மையான அனுபவம் கிடைக்கும். பின்புறத்தில் டெக்ஸ்சர் வடிவமைப்புடன் கூடிய பேனலும், வட்ட வடிவ கேமரா மாட்யூலும் வழங்கப்பட்டுள்ளதால், தோற்றத்திலும் இந்த மாடல் தனித்துவம் பெறுகிறது.

இதையும் படிங்க: பட்ஜெட் விலையில் புது ஐகூ ஸ்மார்ட்போன் LAUNCH..!! இந்த விலையில் இவ்ளோ அம்சங்களா..??

செயல்திறனைப் பொறுத்தவரை, குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் ஜென் 4 சிப்செட் இதில் இடம்பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. புகைப்பட வசதிக்காக 50 மெகாபிக்சல் பிரதான கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் செல்பி கேமரா வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிக திறன் கொண்ட பேட்டரி, பெரிய திரை, மேம்பட்ட செயலி மற்றும் நவீன வடிவமைப்பு ஆகியவற்றின் மூலம் நடுத்தர விலைப் பிரிவில் இந்த ஸ்மார்ட்போன் முக்கிய போட்டியாளராக அமையும் என சந்தை வல்லுநர்கள் கருதுகின்றனர்.

அறிமுகத்தைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதத்தின் நடுப்பகுதியில் விற்பனை தொடங்கும் என்றும், அமேசான் இந்தியா, சியோமியின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஆஃப்லைன் விற்பனை மையங்கள் மூலம் இது விற்பனைக்கு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 
 

இதையும் படிங்க: பட்ஜெட் விலையில் புதிய ஸ்மார்ட்போன்.. ரூ.8,599க்கு கிடைக்கும் அதிரடி அம்சங்கள்..!! என்ன மாடல் தெரியுமா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share