அடல் மறுசீரமைப்பு மற்றும் நகர்ப்புற மாற்ற இயக்கம் என்று அழைக்கப்படும் அம்ருத் 2.O இயக்கத்தின் கீழ் நாட்டில் உள்ள அனைத்து நகரங்களுக்கும் குடிநீர் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு கடந்த 2021 ஆம் ஆண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டது.

அதன்படி தமிழகத்தில் ஒரு லட்சத்திற்கும் மேல் குறைவாக மக்கள் வசிக்கும் நகரங்களில் அமருத் 2.O திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான திட்டங்களை அதிகாரிகள் வகுத்து வருகின்றன. இதன் அடிப்படையில் தமிழகத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர், பழனி, தென்காசி, சங்கரன்கோவில், மயிலாடுதுறை, சிதம்பரம், திருவாரூர் ஆகிய ஏழு நகரங்கள் அம்ருத் 2.O திட்டத்தின் கீழ் வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஏப்ரல் 21-க்குள் கொடிக் கம்பங்களை அகற்றுங்கள்.. தமிழக அரசுக்கு கெடு விதித்த நீதிமன்றம்..!

எதிர்காலங்களில் இந்த பகுதிகளில் மக்கள் தொகை அதிகரிக்க கூடும் என்றும் கோயில்கள் மறு சீரமைக்கப்படுவதனால் சுற்றுலா தலங்களாகவும் மாற்றப்பட்டு பல்வேறு சுற்றுலாப் பயணிகள் வருகை தர வாய்ப்புள்ளது. இதனை கணக்கில் கொண்டு இதற்கு தேவையான சாலை வசதிகள் வடிகால் குடிநீர் பூங்காக்கள் ஓய்விடங்கள் போன்ற அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முறையான திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த கோயில்கள் அமைந்துள்ள நகராட்சிகளை ஒட்டியுள்ள ஊராட்சிகளிலும் உட்கட்டமைப்பு பணிகள் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த திட்டத்தினை செயல்படுத்த அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் தலைமையில் திட்ட பணிகளில் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காப்பி அடித்ததை கண்டித்ததால் ஆத்திரம்.. ஆசிரியர் காரில் பட்டாசுகளை வீசிய மாணவர்கள்..!