காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தண்டலம் பகுதியில் செயல்பட்டு வரும் ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி, தமிழ்நாட்டின் முன்னணி தனியார் பொறியியல் கல்வி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. சென்னைக்கு அருகே ஸ்ரீபெரும்புதூர் அருகே அமைந்துள்ள இக்கல்லூரி, 1997ஆம் ஆண்டு ராஜலட்சுமி கல்வி அறக்கட்டளையால் நிறுவப்பட்டது. அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் ஒப்புதல் பெற்று செயல்படும் இந்நிறுவனம், தற்போது தன்னாட்சி அந்தஸ்து பெற்ற கல்லூரியாக விளங்குகிறது.
தொடக்கத்தில் மூன்று இளநிலை பொறியியல் பாடப்பிரிவுகளுடன் ஆண்டுக்கு 180 மாணவர்களை மட்டும் ஏற்றுக்கொண்ட இந்தக் கல்லூரி, இன்று சுமார் பதினெட்டு இளநிலை மற்றும் ஒன்பது முதுநிலை பாடப்பிரிவுகளை வழங்குகிறது. இதில் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங், ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், பயோமெடிக்கல் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் மற்றும் டேட்டா சயின்ஸ், பயோடெக்னாலஜி உள்ளிட்ட பல்வேறு துறைகள் அடங்கும்.

முதுநிலை நிலையில் எம்.இ., எம்.டெக். மற்றும் எம்.பி.ஏ. பாடங்களும் வழங்கப்படுகின்றன. ஆண்டுக்கு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு இக்கல்லூரி வளர்ந்துள்ளது. சில துறைகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மையங்களாக அங்கீகரிக்கப்பட்டு, பி.எச்.டி. மற்றும் ஆராய்ச்சி அடிப்படையிலான எம்.எஸ். படிப்புகளும் நடைபெறுகின்றன.
இதையும் படிங்க: சட்டசபை சண்டை சபையாக கூடாது... தீவு திடலில் தலைமை செயலகம் கட்டுக! தமிமுன் அன்சாரி பேட்டி!
இந்தக் கல்லூரியில் நேற்று ஷெரின் என்ற மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அதற்குள் அடுத்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இன்று மேலும் ஒரு மாணவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ள சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. அடுத்தடுத்து நிகழும் சம்பவத்தால் கல்லூரி நிர்வாகம் முக்கிய முடிவு எடுத்துள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை ராஜலட்சுமி பொறியியல் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டாஸ்மாக் கடையடைப்பு... போராட்டத்தில் குதித்த ஊழியர்கள்..! சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு கண்டனம்..!!