போடுங்கம்மா ஓட்டு 'Boat' சின்னத்தைப் பாத்து..! சஸ்பென்ஸை உடைத்த பார்த்திபன்..! ஓ.. இதுதான் விஷயமா..!!
நடிகர் பார்த்திபன் தான் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
தமிழ் சினிமாவின் பல்துறை திறமையாளரான இயக்குனர் ஆர். பார்த்திபன், இன்று (செப்டம்பர் 13) தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் போட்ட பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "இன்று மாலை 4:46க்கு அரசியல் களத்திற்குள் அதிர்வலையை ஏற்படுத்தும் அறிவிப்பு ஒன்று வரப்போகிறது. உஷார்!!!" என்று அவர் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் என்ன விஷயமாக இருக்கும் என ஆர்வத்துடன் காத்திருந்தனர்.
தற்போது அந்த சஸ்பென்ஸை உடைத்துள்ளார் நடிகர் பார்த்திபன். அவர் தனது புதிய படத்தை அறிவித்திருக்கிறார். இப்படத்திற்கு ''நான் தான் சிஎம்'' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை அவரே எழுதி இயக்குகிறார். மேலும் அந்த போஸ்டரில் வரும் 26ம் தேதி முதல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: S.N சக்திவேல் ஒரு நல்ல மனிதர், என் வளர்ச்சிக்கு அவர் தான் காரணம்.. நடிகர் எம்.எஸ் பாஸ்கர் உருக்கம்..!!
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், பெரியோர்களே, தாய்மார்களே, வாக்காளப் பெருமக்களே!
ஜனநாயக உரிமை யார் வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கலாம். நானும் நிற்கிறேன் . என்னை உட்கார வைக்க வேண்டியது உங்கள் கடமை. நான் CM நாற்காலியில் அமர்ந்தப் பிறகு போடப் போகும் முதல் கையெழுத்து எனக்குப் பிறகு அந்த சீட்டில் யாருமே அமரக் கூடாது என்பது தான்!
போடுங்கம்மா ஓட்டு
Boat’சின்னத்தைப் பாத்து!
இப்படிக்கு,
C. M . சிங்காரவேலன் எனும் நான்….
‘சோத்துக் கட்சி’ என்று தெரிவித்துள்ளார்.
பார்த்திபன், தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பல பாத்திரங்களில் சிறந்து விளங்கியவர். அவரது படங்கள் 'புதிய பாதை', 'இரும்பு கும்பி', 'அழகி' போன்றவை விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்றுள்ளன. அரசியல் துறையில் அவரது ஆர்வம் பழமையானது. தற்போது, தனுஷ் இயக்கி நடிக்கும் ''இட்லி கடை'' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவர் ''அறிவு'' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 1-ம் தேதி வெளியாக இருக்கிறது.
இதையும் படிங்க: ரவி மோகனுக்கு டைம் சரியில்ல போல.. வாங்கிய கடனுக்கு EMI கட்டல.. ECR சொகுசு பங்களாவிற்கு டார்கெட்..!!