×
 

உதயநிதிக்கு சந்தானம்.. விஜய்க்கு ஆதரவாக நடிகர் சூரி தேர்தல் பிரச்சாரம்..?

வரும் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்வேனா என்பது குறித்து நடிகர் சூரி பதில் அளித்துள்ளார்.

வரும் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்வேனா என்பது குறித்து நடிகர் சூரி பதில் அளித்துள்ளார்.

பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி நடிப்பில் வெளியாகி திரையரங்களில் 'மாமன்' திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நடிகர் சூரியின் நடிப்புக்கு வரவேற்பும் கிடைத்துள்ளது. இந்நிலையில் சூரி செய்தியாளிடம் பேசினார். அப்போது சினிமாவைத் தாண்டி அரசியல் கேள்வி ஒன்றும் எழுப்பப்பட்டது. 2026இல் வருகின்ற தேர்த்ச்லில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரச்சாரத்திற்கு  அழைத்தால் செல்வீர்களா என்பதுதான் செய்தியாளர்கள் கேட்ட கேள்வி.



இதற்கு பதில் அளித்த நடிகர் சூரி, "அண்ணன் (விஜய்) சரியாக போய்க் கொண்டிருக்கிறார். ஆனால், எனக்கு நிறைய பட வேலைகள் இருக்கின்றன." என்று பட்டும் படாமல் பேசி ஒதுங்கி விட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாகி இருக்கும் 'டிடி ரிட்டன்ஸ்' படத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சந்தானத்திடம், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்திற்கு அழைத்தால் செல்வீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்.



இதற்கு பதில் அளித்த நடிகர் சந்தானம், "எனக்கு சில விஷயங்கள் செட் ஆனால் உதயநிதிக்கு தேர்தல் பிரச்சாரம் செய்வேன்" என்று பதில் அளித்தார். இந்தச் செய்தி சோஷியல் மீடியாவில் வைரல் ஆனது. இதனையடுத்து திமுக எதிர்ப்பாளர்கள் சந்தானத்தை விமர்சித்து பதிவிட்டனர். அதே நேரத்தில் திமுகவினர் சந்தானத்திற்கு ஆதரவாக பதிவிட்டனர். தற்போது நடிகர் சூரியிடமும் இதே போன்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. ஆனால், சூரி சாமர்த்தியமாக நடிகர் சந்தானம் போல் பதில் அளிக்காமல் எஸ்கேப் ஆகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: உதயநிதிக்காக வரும் தேர்தலில் பிரசாரம் செய்வேன்.. நடிகர் சந்தானம் அதிரடி அறிவிப்பு.!

இதையும் படிங்க: பெருமாள தொட்ட நீ கெட்ட..! வார்னிங் கொடுத்த நீதிமன்றம்.. கம்ப்ளீட்டாக பாடலை நீக்கிய சந்தானம் டீம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share