பிகினி உடையில் ஹனி மூன் கொண்டாடும் பார்வதி நாயர்!
நடிகை பார்வதி நாயருக்கு சமீபத்தில் திருமணம் முடிவடைந்த நிலையில், தற்போது இவரின் ஹனிமூன் போட்டோஸ் வைரலாகி வருகிறது.
கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் தான் நடிகை பார்வதி நாயர்.
இவரின் தந்தை துபாயில் பணியாற்றியதால், பார்வதி பிறந்து... வளர்ந்தது எல்லாம் அபுதாபியில் தான்.
தன்னுடைய 15 வயதிலேயே மாடலிங் மீது ஆர்வம் வந்ததால், அதில் கவனம் செலுத்த துவங்கினார்.
பள்ளி படிப்பை துபாயில் முடித்தாலும், கல்லூரி படிப்பதற்காக இந்தியா வந்தார்.
இவர் ஏற்கனவே ஒரு மாடல் என்பதால், தென்னிந்திய திரையுலகில் பட வாய்ப்புகள் தேடி கொண்டே தன்னுடைய மாடலிங் பணியை தொடர்ந்தார்.
இதையும் படிங்க: கட்அவுட்டுக்கு பீர் அபிஷேகம்.. ‘சிங்கம்’ சூர்யாவை அசிங்கப்படுத்திய ரசிகர்..!
இந்திய அளவில் நடைபெற்ற ஏராளமான அழகி போட்டிகளில் பங்கேற்று தன்னுடைய திறமையை வெளிப்படுத்தினார்.
மிஸ் நேவி குயின், மிஸ் கர்நாடகா, ஃபெமினா மிஸ் இந்தியா பேஜெட் போன்றவற்றில் கலந்து கொண்டு பல்வேறு பரிசுகளை வென்றார்.
பின்னர் மலையாள படங்களில் நடிக்க துவங்கிய பார்வதி, தமிழ், தெலுங்கு, கன்னடம், போன்ற மொழிகளிலும் அடுத்தடுத்து நடித்தார்.
அஜித்தின் என்னை அறிந்தால், மற்றும் விஜய்யின் கோட் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் நடிகை பார்வதி நாயருக்கும் - சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஆஷ்ரித் அசோக் என்பவருக்கும் சென்னையில் திருமணம் நடந்து முடிந்தது.
இது காதல் திருமணம் என்றே கூறப்படும் நிலையில், பார்வதி தற்போது தன்னுடைய காதல் கணவருடன் மாலத்தீவுக்கு ஹனி மூன் சென்றுள்ளார். அங்கு பிகினி உடையில்... கணவருடன் இவர் விதவிதமாக போஸ் கொடுத்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: 'செல்தட்டி' குடும்பத்தின் 'சொல்தட்டிகள்...!' ஜோ- சூர்யாவின் ஆணிவேரை அறுத்த வாய்க்கொழுப்பு..!