கட்அவுட்டுக்கு பீர் அபிஷேகம்.. ‘சிங்கம்’ சூர்யாவை அசிங்கப்படுத்திய ரசிகர்..!
குறிப்பாக ரெட்ரோவை ரசிகர்கள் சூர்யாவின் சம்பவம் என்று புகழ்ந்து வருகின்றனர். ஆனால் சில நெட்டிசன்களோ சூர்யாவிற்கு படத்தில் பில்ட்-அப் அதிகமாக இருந்ததாக கூறி வருகின்றனர்.
நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ திரைப்படம் மே 1 ஆம் தேதி வெளியாகியிருக்கிறது. பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ் ராஜ், கருணாகரன், வித்யா சங்கர், தமிழ் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாரயாணன் இசையமைத்துள்ளார். ரெட்ரோ படத்தின் முதல் பாடல் கண்ணாடி பூவே ஏற்கனவே வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றது. நடிகர் சூர்யாவின் 44-வது படமான 'ரெட்ரோ' படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.
தமிழ் நாட்டில் காலை 9 மணிக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அதிகாலை முதலே ரசிகர்கள் திரையரங்குகளுக்கு படையெடுக்க தொடங்கிவிட்டனர். இப்படத்தின் வெளியீட்டை டீஜே இசைக் கச்சேரியுடன் ஆட்டம் பாட்டத்துடன், மேள தாளம் முழங்க விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். தியேட்டர் வளாகம் முழுவதும் ரெட்ரோ பட பிளக்ஸ் மற்றும் பேனர்கள் வைத்து கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிங்க: 90களில் கதைக்களம்; மாஸ் லுக்கில் சூர்யா... மார்கெட்டை தூக்கி நிறுத்துமா ரெட்ரோ?
ரெட்ரோ திரைப்படம் 65 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே கங்குவா படத்தை நம்பி ஏமாந்த சூர்யா ரசிகர்கள் தற்போது ரெட்ரோ படம் விருந்தாக அமைந்திருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக ரெட்ரோவை ரசிகர்கள் சூர்யாவின் சம்பவம் என்று புகழ்ந்து வருகின்றனர். ஆனால் சில நெட்டிசன்களோ சூர்யாவிற்கு படத்தில் பில்ட்-அப் அதிகமாக இருந்ததாக கூறி வருகின்றனர்.
படத்தின் முதல் பாதி நன்றாக இருப்பதாகவும், குறிப்பாக கனிமா பாடல் மற்றும் காமெடி காட்சிகள் ரசிக்க வைப்பதாகவும் சோசியல் மீடியாக்களில் விமர்சனங்கள் வெளியாகி வருகிறது. இதனிடையே சூர்யாவின் ரசிகர்கள் செய்துள்ள காரியம் சோசியல் மீடியாவில் கடும் விமர்சனங்களை குவித்து வருகிறது.
புதுக்கோட்டையில் திரையரங்கு வாசலில் வைக்கப்பட்டிருந்த சூர்யாவின் கட் அவுட்டிற்கு ரசிகர் ஒருவர் பீர் அபிஷேகம் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கட்அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்ய வேண்டாம் என திரையுலகின் முன்னணி நடிகர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், சூர்யா ரசிகர்களின் இந்த செயல் கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
இதையும் படிங்க: சினிமா வரலாற்றில் எந்த ஹீரோவுக்கும் இல்லாத அடி..! சின்னா பின்னமான சூர்யா..!