நீல நிறப் புடவையில்.. ஜோசப் விஜய் பதவியேற்பு விழாவில் ஜொலித்த திரிஷா...!!
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் இன்று முதல்வராக பதவி ஏற்கும் நிலையில், திரிஷா பதவியேற்கும் விழாவிற்கு வருகை தந்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் புதிய அரசியல் அலை உருவாகியுள்ளது. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனிப்பெரும் கட்சியாக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, ஆட்சி அமைக்கும் உரிமையை நிலைநாட்டியுள்ளது. நேற்று மாலை காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கழகம் (விசிக) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐ.யு.மு.லீ.) உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆளுநர் உரிமை கோரிக்கையை ஏற்றுக்கொண்டனர்.
இதையடுத்து, ஆளுநர் இன்று காலை 10 மணிக்கு விஜய்க்கு பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுத்தார். அதன்படி, இன்று காலை தமிழகத்தின் 25ஆவது முதலமைச்சராக விஜய் பதவி ஏற்க உள்ளார். இன்று காலை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் பதவியேற்பு விழாவுக்காக விஜய் தனது நீலாங்கரை இல்லத்திலிருந்து புறப்பட்டு வந்துள்ளார். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அவர் அரங்கத்திற்கு வந்த நிலையில், பிற கூட்டணிக் கட்சித் தலைவர்கள், அமைச்சரவை உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் அழைக்கப்பட்ட பிரமுகர்களும் அங்கு திரண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: "MY DEAR THALAPATHY"..!! விஜய்க்கு பறந்த ஃபோன் கால்..!! வாழ்த்து சொன்ன "AK"..!!
விழா ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த முக்கிய விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொள்ளும் நடிகை திரிஷா, தனது இல்லத்திலிருந்து காலையிலேயே புறப்பட்டார். விஜயுடன் நெருங்கிய நட்பு கொண்ட திரிஷாவுக்கு மற்றும் அவரது தாயாருக்கும் பதவியேற்பு மேடை அருகே முதல் வரிசையில் சிறப்பு இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இது அரசியல் மற்றும் சினிமா தரப்பினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தவெகவின் இந்த வெற்றி தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 108 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக, கூட்டணி ஆதரவுடன் 150க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களின் பலத்துடன் ஆட்சியமைக்க உள்ளது. பதவியேற்புக்குப் பிறகு அமைச்சரவை விரிவாக்கம் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலமைச்சராக பொறுப்பேற்கும் விஜய், தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நல்லாட்சி வழங்குவார் என தவெக தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உற்சாகத்துடன் காத்திருக்கின்றனர். பதவியேற்பு விழா நிகழ்வுகள் தொடர்ந்து பரபரப்பாக நடைபெற்று வருகின்றன.
இதையும் படிங்க: தமிழக சட்டமன்றத் தேர்தலில் சரித்திர சாதனை..!! விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து..!!