×
 

"MY DEAR THALAPATHY"..!! விஜய்க்கு பறந்த ஃபோன் கால்..!! வாழ்த்து சொன்ன "AK"..!!

விஜய் வெற்றி பெற்றதும் அஜித் உடனடியாக செல்போனில் தொடர்பு கொண்டு வாழ்த்து கூறியிருப்பது இரண்டு ரசிகர்களிடையேயும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. தலைவர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பெரும்பான்மைக்கு தேவையான தொகுதிகளை வென்று புதிய அரசை அமைக்கும் நிலையை எட்டியுள்ளது. திமுக இரண்டாவது இடத்திலும், அதிமுக மூன்றாவது இடத்திலும் தங்கியுள்ளன. ஏப்ரல் 23 அன்று நடைபெற்ற வாக்குப்பதிவுக்குப் பிறகு இன்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 

ஆளும் திமுக கூட்டணி ஆட்சியைத் தக்கவைக்கவும், எதிர்க்கட்சியான அதிமுக பதவியைப் பிடிக்கவும் தீவிரமாகப் போட்டியிட்ட நிலையில், தவெக வலுவான மாற்றத்தை ஏற்படுத்தின. தவெக வேட்பாளர்கள் 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து அதிர்ச்சி முடிவுகளைப் பதிவு செய்துள்ளனர். நடிகர் விஜய், தான் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகள் இரண்டிலும் தனித்து வெற்றி பெற்றார். இந்த வெற்றியைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் தலைவர்கள், திரைப்பட பிரபலங்கள் உள்ளிட்டோரிடமிருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. 

பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட தேசிய மற்றும் மாநிலத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் புதிய அரசுக்கு வாழ்த்து தெரிவித்தார். திரைத்துறையில் இருந்தும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. 

இதையும் படிங்க: தமிழக சட்டமன்றத் தேர்தலில் சரித்திர சாதனை..!! விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து..!!

இசை அமைப்பாளர்கள் ஏ.ஆர். ரஹ்மான், யுவன் ஷங்கர் ராஜா, நடிகர்கள் சிவகார்த்திகேயன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் விஜய்க்கு வாழ்த்து அளித்தனர். இந்த வரிசையில், நடிகர் அஜித்குமார் செல்போன் மூலம் விஜய்யைத் தொடர்பு கொண்டு உற்சாகமாக வாழ்த்து தெரிவித்தார். இருவரும் நீண்ட நேரம் உரையாடினர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சினிமாவில் நீண்டகாலமாக ரசிகர்கள் மத்தியில் போட்டியாகக் கருதப்படும் விஜய் - அஜித் இடையேயான உண்மையான நட்புணர்வை இந்த தொலைபேசி உரையாடல் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. விஜய் அரசியலுக்கு வந்த பிறகு, அவரது ரசிகர் வாக்குகளை ஈர்க்க அதிமுக, பாஜக, திமுக உள்ளிட்ட கட்சிகள் முயற்சி மேற்கொண்டதாகக் கூறப்பட்டாலும், அது பலனளிக்கவில்லை. தவெகவின் உயர்ந்த வெற்றி, அரசியல் களத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.

மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள் மற்றும் பல முன்னாள் அமைச்சர்கள் இந்தத் தேர்தலில் தோல்வியைத் தழுவியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் அரசியல் சமன்பாட்டை மாற்றியமைத்த இந்த முடிவுகள், வரும் நாட்களில் புதிய அரசின் கொள்கைகள் மற்றும் நிர்வாகம் எப்படி இருக்கும் என்பதை நோக்கி மக்களின் கவனத்தைத் திருப்பியுள்ளது.

இதையும் படிங்க: தவெக-வுக்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்.. உங்கள் பணி சிறக்கட்டும்..!! ஏ.ஆர் ரஹ்மான் நெகிழ்ச்சி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share