எப்பவுமே விஜய்க்கு நல்லது தான் நினைப்பேன்.. நீங்க அமைதியா இருங்க..!! நடிகர் அஜித் காட்டமான பேச்சு..!!
கரூர் சம்பவம் தொடர்பாக நான் பேசியதை ஒரு சிலர் விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்கிறார்கள் என்று நடிகர் அஜித்குமார் காட்டமாக பேசியிருக்கிறார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் குமார், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து அளித்த தனது கருத்துகளை சிலர் விஜய்க்கு எதிராகத் திரித்து பரப்புவதாக விமர்சித்துள்ளார். சமீபத்தில் ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், கரூர் சம்பவத்தை ‘துரதிஷ்டவசமானது’ என்று விவரித்த அஜித், இது ஒரு நபரின் தவறு மட்டுமல்ல, சமூகத்தின் மொத்தப் பொறுப்பு என்று வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் அது விஜய் ரசிகர்களுக்கும் அஜித் ரசிகர்களுக்கும் இடையே மோதலாக மாறியது.
இந்நிலையில், தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அஜித் தெளிவான விளக்கம் அளித்துள்ளார். என்றுமே நான் விஜய்க்கு எதிரானவன் அல்ல. அவருக்கு நல்லதே நடக்கும் என்று வாழ்த்தியிருக்கிறேன். என் குடும்பமும் அவரது குடும்பமும் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று நினைக்கிறேன், மேலும் எல்லாருமே அவரவர் குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ வாழ்த்துகிறேன் என்று அவர் கூறினார்.
இதையும் படிங்க: ‘ஒருவர் மட்டும் பொறுப்பல்ல, நாம் அனைவரும்’..!! கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் பற்றி 'AK' நெத்தியடி பேச்சு..!!
கரூர் சம்பவம் குறித்து, “இது துரதிர்ஷ்டவசமானது, அது நீண்ட நாட்களாக நடக்க காத்திருந்த விபத்து. இதற்கு முன்பு ஆந்திரா சினிமா தியேட்டரில் நடந்துள்ளது. பெங்களூர் கிரிக்கெட் மைதானத்தில் நடந்துள்ளது. பல நாடுகளில் நடந்துள்ளது. பொது வெளியில் நடத்தை குறித்து அனைவரும், நான் உட்பட பொறுப்புடன் இருக்க வேண்டும்” என்று அவர் விளக்கினார்.
ஒரு காலத்தில் சினிமா பத்திரிகையாளர்கள், விளையாட்டு பத்திரிகையாளர்கள், அரசியல் பத்திரிகையாளர்கள் என்று இருந்தனர். ஆனால் இன்று அரசியல் பத்திரிகையாளர்களை விட ஒரு சில சினிமா பத்திரிகையாளர்களே மிகவும் அரசியல் மயமாகி உள்ளனர். எனது நல்ல எண்ணங்கள் சில ஊடகங்களால் சரியாக கொண்டு சேர்க்கப்படவில்லை. மாறாக நடிகர் அஜித்துக்கும், விஜய்க்கும் இடையேயான மோதல். நடிகர் அஜித் ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் இடையேயான போர் என்பது போல் ஆகிவிட்டனர்.
எழுதி வைத்து கொள்ளுங்கள். எனது ஆங்கில ஊடக பேட்டி 10, 20 ஆண்டுகள் கழித்து மிகப்பெரிய பேசுப்பொருளாக ஆகியிருக்கும். உங்களையும், உங்களின் குடும்பங்களையும் முதலில் பாருங்கள். பார்ப்பதற்கு தகுதியானதாக இருந்தால் திரைப்படங்களை பாருங்கள் என்று என் ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் பல ஆண்டுகளாக சொல்லி வருகிறேன். படத்தை பாருங்கள் என்று மக்களிடம் இன்ப்ளூயென்ஸ் செய்யமாட்டேன். ஓட்டு கேட்டும் வரமாட்டேன்.
படங்களில் நடிப்பது, கார் ரேஸில் பங்கேற்பது என்று எனக்கு பிடித்ததில் கவனம் செலுத்துவேன். எப்போதெல்லாம் ரேஸ் காரில் உட்காருகிறோனோ, உயிர் போவதற்கு ஒரு நொடி போதும் என்பது எனக்கு நன்றாக தெரியும். இதனால் எனக்கு எந்தவொரு திட்டமோ, உள்நோக்கமோ இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கை மிகவும் எளிதில் உடையக்கூடியது. என்னால், முடிந்தவரை நன்றாக வாழ விரும்புகிறேன் என்றும் கூறினார்.
அஜித், சில ஊடகங்களையும் விமர்சித்தார். “என் பேட்டியை அஜித்-விஜய் மோதல் என்பதாக மாற்றி, ரசிகர்களிடையே நச்சைப் பரப்புகிறார்கள். நாம் நச்சு கலந்த சமூகமாக மாறிவிட்டோம்” என்று அவர் குற்றம் சாட்டினார். மேலும், “என் பேச்சை விஜய்க்கு எதிராகக் கட்டமைக்க முயல்கிற சிலர் அமைதியாக இருப்பது நல்லது” என எச்சரிக்கையும் விடுத்தார். போலி சமூக ஆர்வலர்கள் பாதிக்கப்பட்டவர்களைப் பயன்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விளக்கம், ரசிகர்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. அஜித், தனது அடுத்த படங்களிலும் சமூக சாட்சியமாக இருப்பதாகத் தெரிவித்தார். சினிமா-அரசியல் இணைப்புகளை விமர்சித்த அவர், “சினிமா ஊடகங்கள் அரசியல் மயமாகிவிட்டன” என்று சாடினார். இந்த சர்ச்சை, தமிழ் சினிமாவின் ரசிகர் அரசியலை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திருப்பதியில் 'AK'..!! தல.. தல.. என கத்திய ரசிகர்கள்..!! உடனே அவர் செய்த தரமான செயல்..!!