ச்ச.. என் பொண்ணுகிட்ட போய் இத கேட்டாங்க..!! ஷாக் நியூஸ் சொன்ன நடிகர் அக்ஷய் குமார்..!!
ஆன்லைனில் தனது மகளுக்கு நடந்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்து நடிகர் அக்ஷய் குமார் வேதனையடைந்தார்.
சைபர் அவேர்னஸ் மாதத்தை முன்னிட்டு மும்பையில் உள்ள காவல் தலைமையகத்தில் நேற்று சைபர் விழிப்புணர்வு தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், நடிகர் அக்சய் குமார் மற்றும் மூத்த காவல் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்ஷய் குமார், தனது 13 வயது மகள் நிதாராவுக்கு ஆன்லைன் கேமில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அக்ஷய் குமார் கூறுகையில், "எனது மகள் ஒரு ஆன்லைன் கேமில் விளையாடிக் கொண்டிருந்தாள்.
இதையும் படிங்க: டெல்லி நீதிமன்றம் கொடுத்த பாசிட்டிவ் தீர்ப்பு... நடிகர் நாகார்ஜுனா நன்றி..!!
அங்கு ஒரு நபர் அவளுடன் நட்பு பாராட்டி, உரையாடத் தொடங்கினார். முதலில் அவளது வயது, பெயர் போன்ற விவரங்களைக் கேட்டார். பின்னர், அவள் பெண் என்பதை அறிந்ததும், நிர்வாண படங்கள் அனுப்புமாறு கோரினார். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த எனது மகள் உடனடியாக செல்போனை அணைத்துவிட்டு நடந்ததை எனது மனைவியிடம் கூறியிருக்கிறாள். இது எனக்கு தெரிய வந்தபோது, என் இதயம் உடைந்தது. அவள் இன்னும் சிறு பெண், ஆனால் இந்த உலகம் அவளை இப்படி தாக்கியது" என்று கண்கலங்கியபடி கூறினார்.
இந்த சம்பவம் நடந்தபோது நிதாரா 13 வயதுடையவர் என்றும், அந்த நபர் 'நல்ல நபர்' போல நடித்து நம்பிக்கை ஏற்படுத்தியதாகவும் அவர் விளக்கினார். இந்த அனுபவம் அக்ஷய் குமாரை சைபர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தூண்டியுள்ளது. எனவே சைபர் பாதுகாப்பு குறித்து நமது குழந்தைகள் படிக்க வேண்டும். மராட்டியத்தில் சைபர் பாதுகாப்பு குறித்து 7 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வாரத்துக்கு ஒரு பாடவேளை கற்றுக்கொடுக்க வேண்டும் என முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிசை கேட்டுக்கொள்கிறேன்.
தெருவில் நடக்கும் குற்றங்களை விட சைபர் குற்றங்கள் மிகப்பெரியது. அதை நாம் தடுக்க வேண்டும் என்றார். மேலும் எனது மகளுக்கு நடந்தது போல பல குழந்தைகளுக்கு நடக்கிறது. இதைத் தடுக்க அரசும், பெற்றோரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
அக்ஷய் குமாரின் இந்த பகிர்வு, சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் தங்கள் குழந்தைகளின் ஆன்லைன் செயல்பாடுகளை கண்காணிக்கத் தொடங்கியுள்ளனர். சைபர் கிரைம் துறை அதிகாரிகள், இதுபோன்ற சம்பவங்களை தடுக்க புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளனர்.
அக்ஷய் போன்ற பிரபலங்கள் இதுபோன்ற விஷயங்களை வெளிப்படுத்துவது, சமூகத்தில் விழிப்புணர்வை அதிகரிக்க உதவும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த சம்பவம், டிஜிட்டல் உலகின் இருண்ட பக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் திறந்த உரையாடலை ஊக்குவிக்க வேண்டும் என்று அக்ஷய் வலியுறுத்தினார். அவரது வேதனை, பல குடும்பங்களுக்கு பாடமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: விபத்தில் சிக்கிய மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ்.. ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்தது என்ன..??