×
 

இயக்குநராக அவதாரம் எடுக்கும் ரவி மோகன்.. “அன் ஆர்டினரி மேன்” படத்தின் ப்ரோமோ அப்டேட் இதோ..!!

ரவி மோகன் இயக்கும் “அன் ஆர்டினரி மேன்” படத்தின் ப்ரோமோ அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ரவி மோகன், தற்போது இயக்குநராகவும் அவதாரம் எடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். அவரது முதல் இயக்கத்தில் உருவாகும் ‘அன் ஆர்டினரி மேன்’ திரைப்படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

இப்படத்தை ரவி மோகனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ தயாரிக்கிறது. இந்நிலையில், ரவி மோகனின் பிறந்தநாளை முன்னிட்டு (செப்டம்பர் 10) நாளை மாலை 6:06 மணிக்கு இப்படத்தின் புரோமோ வீடியோ வெளியாகவுள்ளது என்ற அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: இது நம்ப லிஸ்டுலயே இல்லையே..! 'CM' கூட ஓணம் கொண்டாடிய பிரபல நடிகர் ரவிமோகன்..!

https://x.com/RaviMohanStudio/status/1965394092021715444/photo/1

‘ஜெயம்’, ‘எம் குமரன் மகாலட்சுமி’, ‘சந்தோஷ் சுப்ரமணியம்’, ‘தனி ஒருவன்’ போன்ற வெற்றி படங்களில் நடித்து புகழ்பெற்ற ரவி மோகன், தற்போது ‘பராசக்தி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே, ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ மூலம் ‘ப்ரோ கோட்’ படத்தை தயாரித்தவர், தற்போது ‘அன் ஆர்டினரி மேன்’ படத்தை இயக்கி தயாரிக்கிறார். இப்படத்தின் முதல் அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி நடைபெற்ற ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ அறிமுக விழாவில் வெளியானது. இந்நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன், கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா, ஜெனிலியா உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

‘அன் ஆர்டினரி மேன்’ படத்தின் கதைக்களம் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், இது நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்களை இணைத்து, சாமானிய மனிதனின் வாழ்க்கையை மையப்படுத்திய கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரவி மோகனின் இயக்க திறமையும், யோகி பாபுவின் தனித்துவமான நடிப்பும் இணையும் இப்படம், ரசிகர்களுக்கு ஒரு புதுமையான அனுபவத்தை வழங்கும் என நம்பப்படுகிறது. புரோமோ வீடியோவிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்

இதையும் படிங்க: லோகேஷ் கனகராஜின் யூனிவர்சில் அடியெடுத்து வைத்த ரவி மோகன்..! LCU-வில் நுழைவாரா.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share