கடல் பின்னணியில் உருவாகும் 'மார்ஷல்'..! கார்த்திக்கு வில்லனாக வரபோறது இவரா..!
நடிகர் கார்த்திக்கின் 29வது படமான 'மார்ஷலில் வில்லன் யார் தெரியுமா.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்தி, தொடர்ந்து வித்தியாசமான கதைகள் மற்றும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். 'பருத்திவீரன்', 'மெட்ராஸ்', 'கைதி', 'சுல்தான்', 'பொன்னியின் செல்வன்' என பல வெற்றிப்படங்களில் நடித்து, தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
சமீபத்தில் வெளியான ‘மெய்யழகன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படி இருக்க தற்போது கார்த்தி, நலன் குமாரசாமி இயக்கும் ‘வா வாத்தியார்’ படத்தில் நடித்து வருகிறார். அதேபோல், பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சர்தார் 2’ படத்திலும் நடிப்பதோடு, அதில் ஸ்பை ஆக்ஷனுடன் கூடிய தொடர்ச்சிக் கதையாக நடித்துவரும் இவரது பிஸியான காலஅட்டவணை, ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இந்நிலையில், 'டாணாக்காரன்' படத்தின் மூலம் சிறந்த விமர்சனங்களை பெற்ற இயக்குநர் தமிழ், கார்த்தியை வைத்து தனது அடுத்த திரைப்படத்தை இயக்கவுள்ளார். இந்த புதிய படத்திற்கு ‘மார்ஷல்’ என்ற தலைப்பே வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது கார்த்தியின் 29வது திரைப்படமாக உருவாக உள்ளது.
‘மார்ஷல்’ திரைப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் மிகுந்த எதிர்பார்ப்பில் தயாரிக்கிறது. இசையமைப்பாளராக சாய் அபயங்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த படம் ஒரு கடல் பின்னணியில் நடைபெறும் கேங்ஸ்டர் கதையை மையமாகக் கொண்டதாகவும், அதற்கேற்ப படத்திற்கான வசதிகள், பின்னணி, தொழில்நுட்ப தரம் என அனைத்தும் உயர் தரத்தில் அமைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: நான் தப்பு செஞ்சா தைரியமா சொல்லுங்க..! நடிகர் விஜய் சேதுபதி பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
இப்படிப்பட்ட இந்த படத்தில் கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இதில் முக்கிய வில்லனாக நிவின் பாலி நடிப்பதாக இருந்தது. ஆனால் அவருக்கு ஏற்பான கால் ஷீட் சிக்கலால், அவரை மாற்றி ஆதி பினிஷெட்டி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் படக்குழு தற்போது 'மார்ஷல்' திரைப்படத்தை இரண்டு பாகங்களாக உருவாக்க திட்டமிட்டுள்ளது. இது போன்ற ஃபிராஞ்சைஸ் கட்டமைப்பில் தமிழ் சினிமாவில் வெளிவரும் முயற்சிகள் கடந்த காலங்களில் வெற்றிகரமாக இருந்துள்ளன. அதனால் 'மார்ஷல்' படத்துக்கும் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. தற்போது, இப்படத்தின் முன்னோட்ட வேலைகள் முழுமையாகத் துவங்கியுள்ள நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஃபஸ்ட் லுக் போஸ்டர் அடுத்த சில வாரங்களில் வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தின் ஃபஸ்ட் லுக்கை எதிர்நோக்கும் ரசிகர்கள், இதை ஒரு மாஸ் ரீஎன்ட்ரியாகக் கருதுகின்றனர். ஆகவே தனது திரைப்படத் தேர்வுகளில் எப்போதுமே தனிச்சுவையை வெளிப்படுத்தும் கார்த்தி, ‘மார்ஷல்’ படத்தின் மூலமாக ஒரு புதிய அனுபவத்தை ரசிகர்களுக்கு அளிக்கவிருக்கிறார்.
இதன் மூலம் அவர் தனது திரை பயணத்தில் இன்னொரு முக்கியமான அடித்தளத்தை பதிக்க உள்ளார். மேலும் இப்படத்தில் வில்லனாக ஆதி வருவதாக கூறப்பட்டு வருவதும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
இதையும் படிங்க: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்களின் லிஸ்ட் இதோ..!