நான் தப்பு செஞ்சா தைரியமா சொல்லுங்க..! நடிகர் விஜய் சேதுபதி பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
நடிகர் விஜய் சேதுபதி நான் தப்பு செஞ்சா தைரியமா சொல்லுங்க என வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
தமிழ் சினிமாவின் முத்திரை பதித்த முன்னணி நடிகரான விஜய் சேதுபதி, பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்த ‘தலைவன் தலைவி’ படம் ஓடிடி தளத்தில் வெளியாக பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த இந்த நகைச்சுவை குடும்பப் படம் ரசிகர்களிடையே பரவலான வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்றுள்ளது.
இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, விஜய் சேதுபதி தனது அடுத்த பட வேலைகளில் பிசியாக ஈடுபட்டுள்ளார். இப்படி இருக்க தற்போது, கலைநயத்துடன் திரைப்படங்களை தயாரிக்கும் இயக்குநர் மிஷ்கின் இயக்கும் புதிய திரைப்படமான ‘டிரெயின்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். அதோடு தெலுங்கு சினிமாவின் புகழ்பெற்ற இயக்குநரான பூரி ஜெகன்நாத் இயக்கும் தெலுங்கு படத்திலும் விஜய் சேதுபதி நடிக்கிறார். பல மொழிகளில் நடித்து வருவதால் அவருடைய ரசிகர்கள் வட்டம் இந்திய அளவில் பரவி வருகிறது. இப்படி தனது நடிப்பும், வாழ்வுமுறையும் சில சமயங்களில் விமர்சனங்களுக்கு உள்ளாகிறது என்பது விஜய் சேதுபதிக்கு புதிதல்ல. இந்நிலையில், சமீபத்தில் செய்தியாளருக்கு அவர் அளித்த பேட்டியில் அவர் தன்னைப் பற்றியும், தனது மகன் சூர்யாவையும் குறித்த விமர்சனங்கள் குறித்தும் மனம் திறந்து பேசினார்.
அதில் "எல்லா இடங்களிலும் எதிர்மறையான விஷயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதைத் தடுக்க முடியாது. ஆனால் அதை எப்படி கையாள வேண்டும் என்பதை கற்றுக்கொள்வதே முக்கியம்.. நான் தவறு செய்துவிட்டேனா? என்று யோசிப்பதைவிட, அடுத்ததாக என்ன செய்யலாம் என்பது பற்றித்தான் அதிகம் சிந்திப்பேன். ரசிகர்களை மகிழ்விப்பதற்காகவே நடிக்கிறேன். என் மீது குறை இருந்தால், தயங்காமல் சொல்லுங்கள். அடுத்த படங்களில் திருத்திக் கொள்வேன்" என்றார். இதே பேட்டியில் அவர் தனது மகன் சூர்யாவும் திரையுலகில் வளர்ந்து வருவதாகவும், "அவரது பயணத்தில் விமர்சனங்கள் வருவது இயல்பானதே. ஆனால் அவர் உண்மையான விருப்பத்தோடு தான் நடிக்கிறார்" என்று பாசத்துடன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ரூ.50 கோடியை கடந்த விஜய் சேதுபதியின் ‘தலைவன் தலைவி’..! இன்று எங்கு வெளியாகிறது தெரியுமா..?
மேலும் விஜய் சேதுபதி தனது வாழ்க்கை இலக்கணம் பற்றி கூறும்போது, மிக எளிமையாகவே பதிலளித்தார். "எந்த ஒரு சூழ்நிலையும் நிரந்தரம் அல்ல. வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் மாற்றங்கள் இருக்கவே செய்யும். ஆனால் மனநிலை மட்டும் உறுதியாக இருக்க வேண்டும். அதுவே மனிதனை கட்டமைக்கும்.. சமூக வலைதளங்களில் வரும் விமர்சனங்களை எல்லாம் மனதில் வைத்துக் கொண்டால், அது உங்களைக் கட்டுப்படுத்தும். விமர்சனங்களை ஆராய்ந்து, அவற்றிலிருந்து சிந்திக்கக்கூடிய விஷயங்களை எடுத்துக்கொள்வது மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்" என்று அவர் கூறினார். இப்படி இருக்க விஜய் சேதுபதி தொடர்ந்து தமிழ் மட்டுமன்றி ஹிந்தி, தெலுங்கு மொழிகளிலும் பல படங்களில் நடிக்க திட்டமிட்டு வருகிறார். சமீபத்தில், 'மெரி காம்' இயக்குநருடன் ஹிந்தியில் ஒரு வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
அதேசமயம், சில வெப் தொடர்களிலும் அவர் பங்கேற்கவுள்ளார் என்று நம்பப்படுகிறது. ஆகவே பிரச்சனைகளும் விமர்சனங்களும் நிறைந்த இந்த சினிமா உலகில், மன உறுதியுடன் தன் பயணத்தை தொடரும் விஜய் சேதுபதியின் அணுகுமுறை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. எதிர்மறையை எதிர்கொள்ளும் நேர்மையான மனோபாவம், எதிர்காலத்தில் அவரை இன்னும் உயர்த்திச் செல்லும் என்பதில் சந்தேகமில்லை.
இதையும் படிங்க: விஜய் சேதுபதிக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு..! ரம்யா மோகன் எழுப்பிய சர்ச்சை...சைபர் கிரைமில் புகார் அளித்த நடிகர்..!