கமல்ஹாசனுக்கு இவ்வளவு கடன் இருக்கா..! சொத்து மதிப்புக்கு ஈடா கடனும் வச்சிருக்காரே..!
கமல்ஹாசன் சொத்து மதிப்பில் கடன் மட்டும் இவ்வளவுன்னா செலவுக்கு என்ன செய்வாரு.
கமல்ஹாசன் நடிகர் மட்டுமல்லாமல் கதையாசிரியர், இயக்குநர், பாடலாசிரியர், பின்னணிப்பாடகர், நடன அமைப்பாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவராக சினிமாவில் போற்றப்படுகிறார். இவர் தமிழ் மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும், "ராஜ்கமல் பிலிம்ஸ்" என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார் நடிகர் கமல்ஹாசன்.
திரையுலகில் குழந்தையிலேயே நடிப்பில் நட்சத்திர நாயகன் பட்டத்தை வென்ற கமல், இதுவரை அபூர்வ ரகங்கள், மூன்று முடிச்சு, 16 வயதினிலே, சட்டம் என் கையில், சிகப்பு ரோஜாக்கள், நட்சத்திரம், குரு, வறுமையின் நிறம் சிவப்பு, மீண்டும் கோகிலா, தில்லு முல்லு 1981, ராஜ பார்வை, மூன்றாம் பிறை, அக்னி சாட்சி, உருவங்கள் மாறலாம், நாயகன், அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், குணா, பகடை பன்னிரண்டு, சிங்காரவேலன், தேவர் மகன், மகராசன், கலைஞன், மகாநதி, மகளிர் மட்டும், நம்மவர், குருதிபுனல், சதி லீலாவதி, அவ்வை சண்முகி, இந்தியன், உல்லாசம், காதலா காதலா,
இதையும் படிங்க: ஜப்பானில் மாஸ் காட்டிய கமல்ஹாசனின் "விக்ரம்"..! இதுவரை வசூல் மட்டும் எவ்வளவு தெரியுமா..?
தெனாலி, ஹே ராம், பார்த்தாலே பரவசம், ஆளவந்தான், பஞ்சதந்திரம், பம்மல் கே. சம்பந்தம், அன்பே சிவம், விருமாண்டி, வசூல் ராஜா எம் பி பி எஸ், மும்பை எக்ஸ்பிரஸ், நள தமயந்தி, புதுப்பேட்டை, வேட்டையாடு விளையாடு, தசாவதாரம், உன்னைப் போல் ஒருவன், மன்மதன் அம்பு, அன்புள்ள கமல், விஸ்வரூபம், பாபநாசம், தூங்காவனம், உத்தம வில்லன், மீன் குழம்பும் மண் பானையும், விஸ்வரூபம் 2, விக்ரம், லியோ, இந்தியன் 2, தக் லைஃப், உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார்.
இப்படி பல படங்களில் நடித்த கமல் ஹாசனுக்கு வாழ்க்கையில் பல ஏற்ற தாழ்வுகள் வந்த வண்ணமே இருந்தது. ஆனாலும் அதற்காக துளியும் கவலை படாத கமல்ஹாசன் தனது சினிமா பயணத்தை ஒருபுறமும் மக்கள் நீதி மையம் என்ற கட்சியை தொடங்கி மறுபுறமும் செயல்பட்டு வருகிறார். இப்படி இருக்க, தனக்கு பிடித்தமான ஒரு நண்பரை தக் லைஃப் இசை வெளியீட்டு விழாவிற்கு அழைத்து வந்து மாபெரும் சிக்கலில் தவித்து வந்தார் அவர்.
கமலஹாசன் நடிகர் சிவராஜ்குமாரை பெருமையாக பேசும் வகையில், தமிழிலிருந்து பிறந்த கன்னட மொழியிலிருந்து வந்த ஆருயிர் நண்பரே எனக் கூறிய ஒற்றை வார்த்தைக்காக இன்று ஒரு மாநிலமே மன்னிப்பு கேளுங்கள்....மன்னிப்பு கேளுங்கள்... என்று பரிதவிப்பதை பார்த்து சற்று பாவமாகவே இருந்தாலும், அப்படி கமலஹாசன் என்னதான் தவறு செய்துவிட்டார் என ஒரு பக்கம் அனைவரும் கேள்வியும் எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில், கர்நாடக மொழியை பற்றி அவதூராக பேசியிருக்கிறார் நடிகர் கமலஹாசன் எனவும் அதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பல அரசியல் கட்சிகள் முதல் பல விமர்சகர்கள் வரை தங்கள் கருத்துக்களை முன்வைத்து வந்தனர். ஆனால் இதற்கு துளியும் அசராத கமல்ஹாசன், தவறுதலாக பேசியிருந்தால் மன்னிப்பு கேட்பேன். தவறாக புரிந்து கொண்டதற்கு மன்னிப்பு கேட்கமாட்டேன். படம் கர்நாடகாவில் வெளியாகவில்லை என்றாலும் எங்களுக்கு துளிக்கூட கவலை இல்லை என தெரிவித்து விட்டார். இன்று படமும் வெளியாகி திரையரங்குகளில் சக்க போடு போட்டு வருகிறது.
இந்த நிலையில், மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் நடிகர் கமல்ஹாசன் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த வேட்புமனுவுடன் சேர்த்து, தனது சொத்து விவரங்களையும் முழுமையாக அவர் தாக்கல் செய்துள்ளார். அதில் அவரது அசையும் சொத்துகளின் மதிப்பு என பார்த்தல் ரூ.59.60 கோடி. அதேபோல் அசையா சொத்துகளின் மதிப்பு என பார்த்தால் ரூ.245.86 கோடி. இதில் அவருக்கு கடன் மட்டும் ரூ.49.67 கோடி இருப்பதாக அவர் தாக்கல் செய்த சொத்து விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனது பயணத்திற்காக, பென்ஸ், BMW, லக்சஸ், மகேந்திரா பொலிரோ ஆகிய நான்கு கார்கள் தன்னிடம் இருப்பதாக கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'தக் லைஃப்' படத்துக்கு ரேட்டிங் வந்தாச்சு..! First விமர்சனமே Best விமர்சனமா வந்துடுச்சே..!