என்னா படம்.. எப்படிப்பட்ட படைப்பு..! '3BHK, பறந்து போ' படத்திற்கு நடிகர் சூரியின் கமெண்ட்ஸ்..!
'3BHK' மாற்று 'பறந்து போ' படத்திற்கு தனது பாராட்டுகளை தெரிவித்து இருக்கிறார் நடிகர் சூரி.
தமிழ் திரையுலகில் இன்று அசாத்திய திரைப்படமாக இரண்டு திரைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. அதிரடி மற்றும் ஆக்ஷன் கலந்த திரைப்படங்கள் வெளியாகி கொண்டிருந்த வேளையில் தற்பொழுது குடும்பப்பாங்கான திரைப்படங்கள் வெளியாவதை கண்டு ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
அந்த வகையில் ஜூலை நான்காம் தேதியான இன்று ஒரே நாளில், சூர்யா சேதுபதியின் "ஃபீனிக்ஸ் வீலான்", சரத்குமார் தேவயானியின் "3BHK" மற்றும் மிர்ச்சி சிவாவின் "பறந்து போ" ஆகிய திரைப்படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகி இருப்பதால் எந்த திரைப்படத்தை பார்ப்பது என்ற குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதி மகனான சூர்யா சேதுபதியின் திரைப்படம் பழிவாங்கும் படலமான திரைப்படமாக இருக்கிறது.. மேலும் படம் முழுக்க முழுக்க சண்டை காட்சிகளையே கொண்டு இருக்கிறது. இத்திரைப்படம் குடும்பங்கள் பார்த்து ரசிப்பதை விட இளசுகள் பார்த்து ரசிக்கும் வண்ணமாகவே இருப்பதால் பெரிதளவில் குடும்ப ரசிகர்கள் இந்த திரைப்படத்தை தவிர்த்து இருக்கின்றனர்.
இதையும் படிங்க: மிர்ச்சி சிவாவின் தலையெழுத்தை மாற்றிய "பறந்து போ"..! 3BHK-க்கு டஃப் கொடுக்கும் படத்தின் ரிவ்யூ இதோ..!
அதே சமயம், இயக்குனர் ஸ்ரீகணேஷ் இயக்கிய இயக்கத்தில் சரத்குமார், தேவயானி, சித்தார்த், சைத்ரா, மீதா ரகுநாத் ஆகியோரின் நடிப்பில் ஒரு நடுத்தர குடும்பத்தில் வீடு என்பது எவ்வளவு முக்கியம் என்பதை காண்பிக்கும் வகையில் அமைந்துள்ள திரைப்படம் தான் "3BHK". இன்று வெளியான இத்திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வீடு கட்டுவதற்காக போராடி தோற்றுப்போகும் அப்பா சரத்குமார், அப்பா கனவை நினைவாக்க போராடும் சித்தார்த், ஆனால் அவருக்கு படிப்பு கைகொடுக்காமல் போகவே மிகவும் போராடி முயற்சி செய்து கடைசியில் வீடு வாங்குவாரா..? மாட்டாரா..? என்பதே இப்படத்தின் கதையாக உள்ளது.
மேலும் வாழ்க்கையில் தோற்றுப் போகும் நடிகர் சரத்குமார் தனது கனவை தனது மகனான சித்தார்த்தின் மீது வைக்கிறார். ஆனால் சித்தார்த் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிய சாமானிய இளைஞனின் கண்ணீரை பிரதிபலிக்கும் திரைப்படமாக இத்திரைப்படம் அமைந்திருக்கிறது. உண்மையில் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் தான் மிகவும் அல்டிமேட்டாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து, இயக்குனர் ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடக்க அவருடன் அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட அனைவரும் நடித்து ஜூலை 4-ம் தேதியான இன்று வெளியான ஒரு அற்புதமான திரைப்படம் தான் 'பறந்து போ'. இந்த திரைப்படத்தில் கோகுல் என்ற கதாபாத்திரத்தில் அப்பாவாக நடித்திருக்கும் மிர்ச்சி சிவா தனது மகனான அன்பு-வை வீட்டிலேயே அடைத்து வைத்து ஆன்லைன் கிளாஸில் படிக்க வைக்கிறார். வீட்டிலேயே இருப்பதால் நண்பர்களும் இல்லாமல் வெளி உலகம் தெரியாமல் அந்த பையன் வளர்ந்து வருகிறான். ஒரு கட்டத்தில் கடன் தொல்லை தாங்காமல் வீட்டிலிருந்து வெளியேறிய கோகுல் தனது மகனான அன்புவையும் தன்னோடே பைக்கில் அழைத்து செல்கிறார்.
அப்பொழுது வழியில் இருவரும் பேசிக்கொள்வது தான் படத்தின் கதையாகவே இருக்கிறது. மேலும் இப்படத்தின் மையக்கருத்து என பார்த்தால் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும் நாம் அதனை வளர்க்க தயாராக இருக்கிறோமா... அல்லது நாமும் குழந்தைகளாகவே இருந்து வாழத் தெரியாமல் இருக்கிறோமா என்பதை இத்-திரைப்படம் தெள்ளத் தெளிவாக உணர்த்துகிறது. ஆதலால் ஜூலை நான்காம் தேதியான இன்று வெளியான இந்த இரண்டு திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதோடு குடும்ப ஆடியன்ஸ்கள் அனைவரிடமும் இருந்து நல்ல பாராட்டுகளையும் விமர்சனங்களையும் பெற்று இருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை.
இப்படி இருக்க மாறி மாறி பலரும் இந்த இரண்டு திரைப்படங்களை பாராட்டி வரும் நிலையில் தற்போது "மாமன்" திரைப்படத்தின் மூலமாக குடும்ப படங்களை முன்மொழிந்த நடிகர் சூரி, இந்த இரண்டு திரைப்படத்தையும் பாராட்டி தனது எக்ஸ் தளத்தில் கருத்துக்களை பதிவிட்டு இருக்கிறார் இந்த கருத்துக்கள் தற்பொழுது இணையத்தில் அனைவராலும் பேசப்பட்டு வருகிறது. அதன்படி அவரது பதிவில், " இன்று வெளியாகும் இந்த இரண்டு அற்புதமான திரைப்படங்கள் ஒவ்வொரு குடும்பத்தின் இதயத்தையும் தொடும்! பறந்து போ : அப்பா-மகன் இடையேயான ஆழமான பாசப்பிணைப்பையும், உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் ஒரு நெகிழ்ச்சியான பயணத்தையும் உயிரோட்டமாக சித்தரிக்கும்.
அதேபோல் 3BHK : ஒரு குடும்பத்தின் கனவு இல்லத்தை அடையும் உணர்ச்சிகரமான பயணத்தை அழகாக விவரிக்கும். இந்த இரு படங்களும் காதல், மகிழ்ச்சி மற்றும் வாழ்வின் உண்மையான தருணங்களால் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும். இயக்குநர் ராம் சார் அவர்களின் ஆழமான உணர்வுகளைத் தூண்டும், கலைநயமிக்க, தனித்துவமான பார்வை தனது படத்திற்கு உயிரூட்டி, இதயங்களை ஆழமாகத் தொடும் மறக்க முடியாத அனுபவத்தை வழங்கும். அதேபோல், இயக்குநர் @ஸ்ரீகணேஷ் அவர்களின் புதுமையான, நேர்த்தியான படைப்பாற்றல் தனது படத்திற்கு உயிர் கொடுத்து, மனதை மயக்கும், நெகிழ்ச்சியான அனுபவத்தை அளிக்கும். முழு குழுவிற்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்" என பதிவிட்டு இருக்கிறார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் அனைவரும் சென்டிமென்ட் படங்களின் நாயனகன் சூரியே இந்த படத்திற்கு ரிவியூ கொடுத்ததால் கண்டிப்பாக இந்த இரு படங்களும் நன்றாக இருக்கும் போலயே என தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: 3BHK என்ன மாதிரி படம் தெரியுமா... கண் கலங்கிய நடிகர் சிம்பு..!