×
 

மிர்ச்சி சிவாவின் தலையெழுத்தை மாற்றிய "பறந்து போ"..! 3BHK-க்கு டஃப் கொடுக்கும் படத்தின் ரிவ்யூ இதோ..!

குழந்தை வளர்ப்பை மையமாக வைத்து அசத்தலாக எடுக்கப்பட்டுள்ளது பறந்து போ திரைப்படம்.

இயக்குனர் ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடக்க அவருடன் அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட அனைவரும் நடித்து ஜூலை 4-ம் தேதியான இன்று வெளியான ஒரு அற்புதமான திரைப்படம் தான் 'பறந்து போ'. இந்த படத்தின் காட்சிகளை பார்க்கும் பொழுது தந்தை மற்றும் மகனுக்குண்டான படமாக இப்படம் பார்க்கப்படுகிறது. இப்படத்துடன் வெளியான '3BHK' படத்திலும் 'பறந்து போ' படத்திலும் உள்ள அருமையான ஒற்றுமை என பார்த்தால் இந்த இரண்டு படத்திலும் தந்தையினுடைய அன்பை குறித்து வெளிப்படுத்தி இருக்கின்றனர். 

இன்று வெளியான 'பறந்து போ' திரைப்படத்தின் விமர்சனங்களை கீழே பார்க்கலாம். அதன்படி, தற்பொழுது தமிழ் திரைப்படம், சுமோ என பல திரைப்படங்களை நகைச்சுவையாக காண்பிக்கிறேன் என்று ரசிகர்களுக்கு தலைவலி மட்டுமே கொடுத்த நடிகராக பார்க்கப்படுபவர் மிர்ச்சி சிவா. இவர் நடிப்பில் வெளியான "பறந்து போ" திரைப்படமும் இப்படித்தானே இருக்கப் போகிறது என்று நினைத்தாள் அதுதான் தவறு.. ஏனெனில், இந்த திரைப்படத்தில் அவரது நடிப்பை பார்த்தால் கண்டிப்பாக வருங்காலத்தில் விஜயினுடைய இடத்தை இவரே பிடித்து விடுவார் போல என்று சொல்லத் தக்கதாக இப்படத்தில் தனது அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதையும் படிங்க: கிளைமாக்ஸில் ஆடியன்சை கவர்ந்த "3BHK".. சூரியவம்சம் ஜோடி படம்-னா சும்மாவா.. விமர்சனத்தில் பாசிட்டிவ் கமெண்ட்ஸ்...!

அந்த வகையில் இந்த திரைப்படத்தில் கோகுல் என்ற கதாபாத்திரத்தில் மிர்ச்சி சிவா நடித்திருக்கிறார். இப்படி இருக்க கோகுல் அவரது மனைவி கிரேஸ் ஆண்டனி இருவரும் வேலைக்கு செல்வதால் இவர்களுடைய மகனான அன்பு-வை வெளியே எங்கேயும் அனுப்பாமல் யாரிடமும் பழகவும் விடாமல் வீட்டிலேயே அடைத்து வைக்கின்றனர். மேலும் பையன் வெளியே செல்லாமல் இருக்க ஆன்லைன் கிளாசில் அன்பு-வை இணைக்கின்றனர். இதனால் சுத்தமாக வெளியுலக அனுபவமும் இல்லாமல் சிறுவர்களுடன் விளையாடும் வாய்ப்பும் கிடைக்காமல் போன வாழ்க்கையில் தொடர் வேதனைகளை சந்தித்து வருகிறான் அன்பு. இப்படி இருக்க அன்புவின் தந்தையான கோகுலுக்கு கடன் பிரச்சனை அதிகமாக வர, இந்தக் கடன் தொல்லைக்கு பயந்து அன்பு-வை அவரது அப்பாவான கோகுல் தனது பைக்கில் வெளியூருக்கு அழைத்து செல்கிறார்.

கடனுக்கு பயந்து அப்பா வெளியே ஓடி வருவது கூட தெரியாத மகன், இதனை பைக் ட்ரிப் என நினைத்து தனது அப்பாவிடம் சில விஷயங்களை பகிர்ந்து கொள்கிறான். இவர்களது இந்த நெடுந்தூர பயணம் அவர்கள் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பதை திரைப்படமாக பார்க்க முடிகிறது. ஏனெனில் வழி நெடுங்க அன்பு கேட்கும் கேள்விகளுக்கும் அவன் செய்யும் பல செயல்களுக்கும் பதில் சொல்ல முடியாமல் அப்பாவான கோகுல் படும் தவிப்பு பார்க்கவே அழகான காட்சியாக இருந்தது.. மேலும், சேரனின் ஆட்டோகிராப் படத்தில் வருவதைப் போல தனது சிறுவயது காதலியான நடிகை அஞ்சலியை கோகுல் சந்திக்கும் இடமெல்லாம் அமோகமாக இருந்தது. மேலும் அஞ்சலியின் கணவர் சொல்லும் விஷயங்கள் பல சுவாரஸ்ய கதைக்களத்தில் நம்மை கொண்டு போகிறது...

இந்த காலத்தில் பிள்ளைகள் எப்படி வளர்கிறார்கள் என்பதை கண்டுகொள்ளாத பெற்றோர்களுக்கும், பிள்ளைகள் வளர்ப்பு எந்த அளவிற்கு முக்கியம் என்பதை எடுத்துக்காட்டாக காண்பிக்கிறது இந்த திரைப்படம்... ஏனெனில் குழந்தைகள் குழந்தைகளாகவே இருக்கிறார்களா? அல்லது பெற்றோர்கள் இன்னும் குழந்தைகளாகவே இருக்கின்றனரா? அல்லது குழந்தைகளை வளர்க்க முதலாவது அவர்கள் பெற்றோர்களாக தயாராகி விட்டார்களா? என்பதை இந்த திரைப்படம் புரிய வைத்திருக்கிறது என்றே சொல்லலாம். இப்படி இருக்கே இத்திரைப்படத்தினுடைய ப்ளஸ்கள் என்று பார்த்தால் இத்திரைப்படத்தில் பல பாடல்களை வைத்து படத்தின் கதையை அட்டகாசமாக தெரிவித்து இருக்கிறார் இயக்குனர் ராம் என்றே கூறலாம். மிர்ச்சி சிவாவின் நடிப்பும் அவரது அணுகு முறையும் நகைச்சுவையும் படத்திற்கு மேலும் வலுவை கொடுக்கிறது... 

உண்மையில் தற்பொழுது வரும் அடிதடி சண்டை காட்சிகள் எதுவுமே இல்லாமல் ஃபீல்-குட் திரைப்படமாக இந்த திரைப்படம் பார்க்கப்படுகிறது. மேலும், பறந்து விரிந்த இந்த உலகத்தில் வாழும் அனைத்து மனிதர்களும் மோசம் கிடையாது என்பதை உணர்த்தும் விதமாக காட்டி இருப்பது படத்தை இன்னும் அழகாக்கி இருக்கிறது. மேலும் இத்திரைப்படத்தில் சிறுவனினுடைய சேட்டைகள் வசனங்கள் யாவும் கொஞ்சம் கிரிஞ் போல தெரிந்தாலும் இன்றைய சுட்டிக்கள் இதைவிட மோசமாகத்தான் இருக்கிறார்கள் என்று காண்பிக்கிறது... மேலும் பல பாடல்களை வைத்திருப்பதை கொஞ்சம் தவிர்த்து இருக்கலாம் என்று தோன்றுகிறது... ஆகவே இத்திரைப்படம் ஒரு சில குறைகளை கொண்டிருந்தாலும் படம் முழுக்க நிறைவுகளை கொடுத்திருக்கிறார் இயக்குனர் என்றே சொல்லலாம். 

ஆக தற்பொழுது வெளியான 3BHK  படமாக இருக்கட்டும், பறந்து போ திரைப்படமாக இருக்கட்டும் இந்த இரண்டு திரைப்படமும் ரத்தமும் சண்டை காட்சிகளும், கொலை, கொள்ளை காட்சிகளும் எதுவுமே இல்லாமல் அமைதியான குடும்பத் திரைப்படமாக சிக்சர் அடித்திருக்கிறது என்றே கூறலாம். ஆகவே இந்த இரண்டு திரைப்படங்களில் எந்த திரைப்படங்கள் வசூலில் வாரி குவிக்கப் போகிறது என்பதை பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆவலாக இருக்கின்றனர்.

இதையும் படிங்க: காவலாளி அஜித்குமார் லாக்கப் டெத்.. திமுகவின் ஃபெயிலியரை குறிக்கிறது.. நடிகை குஷ்பூ காட்டமான பேச்சு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share