காவலாளி அஜித்குமார் லாக்கப் டெத்.. திமுகவின் ஃபெயிலியரை குறிக்கிறது.. நடிகை குஷ்பூ காட்டமான பேச்சு..!
காவலாளி அஜித்குமார் லாக்கப் டெத்துக்கு முதமைச்சர் தான் முழு பொறுப்பு என நடிகை குஷ்பூ தெரிவித்து இருக்கிறார்.
தற்பொழுது தமிழகத்தையே மிகவும் உலுக்கி வரும் சம்பவம் என்றால் அதுதான் சிவகங்கை கோவில் காவலாளி அஜித் குமாரின் மரண வழக்கு.. காவல்துறையினரின் பிடியில் இருந்த அஜித் குமார் போலீஸ் பிடியில் இருக்கும் பொழுதே மரணம் அடைந்த சம்பவம் தற்பொழுது பூதாகரத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் அனைவரது மனதிலும் வார்த்தையிலும் தற்பொழுது இருக்கும் படம் என்றால் அதுதான் "ஜெய் பீம்" திரைப்படம்.
கோவில் காவலாளி அஜித் குமாரின் மரணத்தை குறித்து மக்கள் பரவலாக பேசும் பொழுது ஜெய் பீம் படத்தைப் போன்றே இப்பொழுது ஒரு சம்பவம் நடந்திருக்கிறது என பேசி வருகின்றனர். கோவிட் லாக் - டவுன் சமயத்தில் அனைவரது மனதிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படம் தான் "ஜெய் பீம்". அத்திரைப்படத்தில் பாம்பு பிடிக்க வந்த ராஜாகண்ணு நகையை திருடி விட்டதாக ஒருவர் புகார் கொடுக்க, உண்மையான குற்றவாளிகளை தப்பிக்க விட்ட போலீசார் ராஜா கண்ணுவை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று நகை திருடியதாக ஒப்புக் கொள்ளும்படி கூறி, அடித்து உதைத்திருப்பர்.
இதையும் படிங்க: 'காந்தி கண்ணாடி' படத்திற்கு கிடைத்த சம்பளம்..! KPY பாலா செய்த நெகிழ்ச்சி செயல்.. கண்ணீர் விட்ட குடும்பம்..!
மேலும் சித்திரவதை செய்து அவர் மரணிக்கும் காட்சிகள் அனைத்தும் அனைவரது மனதையும் வேதனை படுத்தும் வகையில் இருந்தது. அது மட்டுமல்லாமல் நீதிமன்றத்தில் நியாயத்திற்காக போராடும் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சூர்யா, "ஆநீதிக்கு எதிரான நீதி மன்றத்தின் மௌனம் ஆபத்தானது" என சொல்லும் பொழுது ஒரு கணம் அனைவரது கண்களும் கலங்கி இருந்தது. இப்படி ஒரு படத்தின் சம்பவம் தான் தற்பொழுது இங்கு நிகழ்ந்துள்ளது. அதேபோல் 'விசாரணை' என்ற திரைப்படத்திலும் லாக்கப்பில் நடக்கும் அட்டூழியங்களை வெளிப்படுத்தும் வகையில் அத்திரைப்படமும் அமைந்திருந்தது.
தற்பொழுது நாடே காவலாளி அஜித்குமார் மரணம் தொடர்பாக தான் பேசி வருவதுடன் காவல் துறையினரை கண்டு அச்சப்பட்டு வருகின்றனர். இந்த சூழலில் செய்தியாளர்களை சந்தித்த நடிகை குஷ்பூ காவலாளி அஜித் குமார் மரணம் குறித்து காட்டமாக பேசியிருக்கிறார். அவர் பேசுகையில், " லாக் அப்டெத் தற்பொழுது தமிழகத்தில் அதிகரித்து இருக்கிறது. இதனைப் பார்க்கும் பொழுது சட்ட ஒழுங்கு சரியாக இல்லை என்பதை பார்க்க முடிகிறது. பல நேரங்களில் நாம் பார்க்கிறோம் படித்துக் கொண்டு இருக்கிறோம். மக்களும் பரவலாக சொல்லிக் கொண்டிருக்கின்றனர். போலீஸ்காரர்களின் டார்ச்சர்கள் அதிகமாக இருக்கிறது என்று. அதுமட்டுமில்லாமல் முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் தான் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் முதல் போலீஸ்காரர்கள் வரை வருவார்கள். அப்படி இருக்கும் பொழுது இந்த வழக்கை நீங்கள் சிபிஐக்கு மாற்றி இருக்கிறீர்கள்.
இருந்தாலும் தொடர்ந்து இதுபோன்ற அவலங்கள் தமிழகத்தில் நடைபெற்று தான் வருகிறது. ஏன்? இங்கு அப்படி நடக்கிறது. எல்லா கேஸ் களையும் இப்படியே சிபிஐக்கு மாற்றி வைக்க முடியாது. இவை அனைத்தும் கண்டிப்பாக திமுகவின் பெயிலியர் என்றே நான் சொல்லுவேன். இதற்கு கண்டிப்பாக முதலமைச்சர் தான் பதிலளிக்க வேண்டும். இதற்கு முழு பொறுப்பையும் முதலமைச்சர் தான் தான் ஏற்க வேண்டும்" என காட்டமாக பேசிச் சென்றார்.
இதையும் படிங்க: ரூ.800 கோடி பட்ஜெட்.. மிரளவைக்கும் ராமாயணம் படம்..! ரிலீசானது படத்தின் முதல் டீசர்..!