வெப் சீரிஸ் மூலம் மீண்டும் கவனம் ஈர்த்த ஐஸ்வர்யா ராஜேஷ்..!! புரொமோஷன் நிகழ்ச்சியில் ஸ்டைலிஷ் லுக்கில் மிரட்டிய நடிகை..!
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் புரொமோஷன் நிகழ்ச்சியில் ஸ்டைலிஷ் லுக்கில் கலக்கிய அழகிய போட்டோஸ் வைரல் ஆகி வருகின்றன.
தென்னிந்திய சினிமாவில் கதாநாயகிகளுக்கான வழக்கமான வரம்புகளை உடைத்து, கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து தொடர்ந்து வெற்றிப் பயணம் மேற்கொண்டு வரும் நடிகைகளில் முக்கியமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.
வணிக ரீதியிலான படங்களிலும், உள்ளடக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்களிலும் சம அளவில் கவனம் செலுத்தி வரும் அவர், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் தனது திறமையை நிரூபித்திருக்கிறார்.
இதையும் படிங்க: கருப்பு புடவையில் இளசுகளை மயக்கிய விஜய் டிவி சீரியல் நடிகை அஷ்வினி..!! லேட்டஸ்ட் போட்டோஷூட் இணையத்தில் வைரல்..!
இந்நிலையில், அவர் நடித்துள்ள ‘Isakapatnam’ வெப் சீரிஸ் நேற்று (ஜூலை 2) வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இதன் புரொமோஷன் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராஜேஷ் அணிந்து வந்த ஸ்டைலிஷ் உடை மற்றும் அவரது புதிய தோற்றம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஐஸ்வர்யா ராஜேஷின் திரைப்பயணம் மிகவும் சுவாரஸ்யமானது. தெலுங்கு திரைப்படமான ‘Rambantu’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அவர் சினிமாவில் அறிமுகமானார்.
சிறுவயதிலேயே கேமரா முன் நிற்கத் தொடங்கிய அவர், பின்னர் தனது கவனத்தை முழுமையாக நடிப்பின் மீது செலுத்தினார்.
இதையும் படிங்க: ரஜினியின் ‘ஜெயிலர் 2’ ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ்..!! அனிருத் கொடுத்த புதிய அப்டேட்.. "One Name" ட்ராக் இன்று வெளியீடு..!