×
 

கருப்பு நிற உடையில் செம ஸ்டைலிஷ் லுக்..!! ‘மை லார்டு’ சைத்ரா ஆச்சரின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!

‘மை லார்டு’ பட நடிகை சைத்ரா ஆச்சரின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல் ஆகி வருகின்றன.

கன்னட திரையுலகில் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, தற்போது தமிழ் சினிமாவிலும் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி வரும் இளம் நடிகைகளில் ஒருவராக சைத்ரா ஆச்சர் வலம் வருகிறார்.

கன்னடத்தில் வெளியான ‘சப்த சாகரதாச்சே எல்லோ’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடம் பரவலாக அறிமுகமான இவர், தொடர்ந்து பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

இதையும் படிங்க: ‘கட்சி சேர’ பாடல் புகழ் சம்யுக்தா விஸ்வநாதன்..!! சேலையில் கலக்கும் செம ஸ்டைலிஷ் போட்டோஸ் வைரல்..!


கன்னட சினிமாவில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தமிழ் திரையுலகிலும் சைத்ரா ஆச்சர் அறிமுகமானார். அவரது முதல் தமிழ் திரைப்படமாக ‘3BHK’ அமைந்தது.

அந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் பரிச்சயமான சைத்ரா, அதன்பிறகு நடிகர் சசிகுமாருடன் இணைந்து ‘மை லார்டு’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.


தொடர்ந்து நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் சைத்ரா ஆச்சர், தற்போது வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் கவனிக்கப்படும் ஒருவராக மாறியுள்ளார்.


சினிமாவில் நடிப்பதோடு மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் அவர் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

குறிப்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார்.

அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.


சைத்ரா ஆச்சரின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான திரைப்படமாக ‘சப்த சாகரதாச்சே எல்லோ’ அமைந்தது.

ரக்ஷித் ஷெட்டி நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் கன்னட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தில் சைத்ராவின் நடிப்பும் குறிப்பிடத்தக்க அளவில் பாராட்டப்பட்டது.

ஒரு கதாபாத்திரத்தை வெறுமனே அழகுக்காக பயன்படுத்தாமல், அதற்குள் இருக்கும் உணர்வுகளை தனது நடிப்பின் மூலம் வெளிப்படுத்திய விதம் சைத்ராவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றுத் தந்தது.

 

இதையும் படிங்க: காரில் கடத்தப்பட்ட நடிகை நமீதா.. சுற்றி வளைத்து பிடித்த போலீஸ்..!! ரசிகரால் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்.. ஷாக்கில் நெட்டிசன்கள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share