"டிரெண்டிங்" திரைப்படம் – சோசியல் மீடியா தாக்கத்தை தழுவிய பரபரப்பான திரில்லர் படம் - நடிகை பிரியாலயா பேச்சு..!
அனைவரது பாராட்டையும் பெற்ற டிரெண்டிங் திரைப்படம் குறித்து நடிகை பிரியாலயா வெளிப்படையாக பேசியுள்ளார்.
இணையதள பயன்பாடு நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வரும் நிலையில், அதன் தாக்கம் குடும்பங்களின் தனியுரிமை மற்றும் மனநலத்திற்கு எவ்வளவு ஆபத்தாக இருக்கக்கூடும் என்பதை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் தான் "டிரெண்டிங்". உண்மையில் இந்த காலத்திற்கு மிகவும் அவசியமான படம் என அனைவரது எதிர்பார்ப்பைத் தூண்டும் வகையில் இப்படமாக உருவாகியுள்ளது. ஜூலை 18ஆம் தேதி வெளியாக உள்ள இந்த "டிரெண்டிங்" படத்தை இயக்குநர் சிவராஜ் இயக்கியுள்ளார். சமீப காலங்களில் சமூக வலைத்தளங்கள் நம் அன்றாட வாழ்க்கைக்கு முக்கியமான பகுதியாக மாறியுள்ளது. ஆனால், அதை தவறாக பயன்படுத்தும் சூழ்நிலைகளும், அதன் விளைவுகளும் நம்மை நேரடியாக பாதிக்கக்கூடியதாக இருக்கின்றன. இதைத் தீவிரமான திரைக்கதையுடன் ஒரு சமூகப்பயணமாக எடுத்துச் சென்றுள்ளது “டிரெண்டிங்” திரைப்படம்.
இந்த படத்தில், கதாநாயகனாக கலையரசன், கதாநாயகியாக பிரியாலயா நடித்துள்ளனர். இவர்களுடன் பிரேம்குமார், பெசன்ட் ரவி, வித்யா போர்கியா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனைத்து கதாப்பாத்திரங்களும் கதையின் மையக் கோடில் இயற்கையாக இணைந்திருப்பது, திரைப்படத்தின் தனிச்சிறப்பாக அமைந்துள்ளது. மேலும் இப்-படத்திற்கு இசை அமைத்துள்ளவர் சாம் சி.எஸ்.., இவர் இந்த படத்திற்காக உருவாக்கிய பின்னணி இசையும் பாடல்களும், படத்தின் பரபரப்பையும் உணர்வுகளையும் சிறப்பாக வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளதாக படக்குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, படத்தின் ட்ரெய்லரானது சமூக வலைத்தளங்களில் ஏற்கனவே வைரலாகியுள்ளது. குறிப்பாக இளைய தலைமுறையினரிடையே பெரும் எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது. “நம்மிடம் இருக்கும் மொபைல் போன் எப்போதாவது நமக்கு எதிராகவே திரும்பும்; நம்மை எவ்வளவு நெருக்கமாகவே கையாளுகிறதோ, அதே அளவுக்கு அதில் ஏற்பட்ட பிழை காரணமாக, நம்மை அழிக்கும் அளவுக்கு போகலாம்” என்பது தான் இப்-படத்தின் மையக்கருத்தாகக் கூறப்படுகிறது.
இந்த சூழலில், இப்படத்தின் ப்ரொமோஷன் விழா சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் என பலரும் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். இந்த விழாவை சிறப்பாக மாற்றும் வகையில், படம் குறித்த அனுபவங்களைத் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார் இப்படத்தின் கதாநாயகியான பிரியாலயா. அவர் பேசுகையில், "இப்படத்திற்கான ஆடிஷன் முடிந்ததும் எனக்கு சந்தோசத்தை விட அதிகமான பயமே முதலில் இருந்தது. ஏனெனில், இது சாதாரணமான படம் அல்ல.. நடிப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டிய படம். அதிலும் கலையரசன் சார் போன்ற திறமையான நடிகருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்கு அதிகமாகவே இருந்தது. உண்மையை சொல்ல போனால் இது ஒரு உணர்ச்சி மிகுந்த ரோலர் கோஸ்டர் படம் என்று தான் சொல்லனும.
இதையும் படிங்க: இரவில் கேட்ட அலறல் சத்தம்...கன்னட சின்னத்திரை நடிகை ஸ்ருதிக்கு கத்திக்குத்து..! கணவன் வெறிச்செயல்..!
மேலும், இந்த படத்தில் நடித்த அனுபவம் எனக்கு புதுமையாக இருந்தது. இப்படக்குழுவில் உள்ள அனைவரும் மிகவும் திறமையாக உழைத்தனர். இப்படத்தின் கதாநாயகன் கலையரசன் பெயரிலேயே 'கலைக்கு அரசன்' என உள்ளதே, அப்படி இருக்கையில் அவரது நடிப்பை நான் சொல்லி புரியவைக்க வேண்டியதே இல்லை. படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் அவர் காட்டும் அர்ப்பணிப்பு, முயற்சி என அனைத்தும் என்னை மிகவும் ஈர்த்தது" என பேசினார். அவரை தொடர்ந்து பேசிய இயக்குநர் சிவராஜ், "சமூக வலைத்தளங்கள் ஒரு பெரிய கம்யூனிகேஷன் பவர். ஆனால் அதே சமயம், அது எப்போது அழிவை ஏற்படுத்தும் ஆயுதமாக மாறும் என்பதற்கான உளவியல் பயணமாக இந்த படத்தை எடுத்துள்ளோம். உண்மையிலேயே இது ஒரு சமூகக் கண்ணோட்டத்தை பிரதிபலிக்கும் திரில்லர் திரைப்படம்" எனக் கூறினார். படத்தின் படப்பிடிப்பு முழுவதும் பெங்களூரு மற்றும் சென்னை நகரங்களில் எடுக்கப்பட்டது. சுமார் 45 நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிக்கப்பட்டது. கண்ணியம், வன்முறை, உணர்ச்சி, தூண்டுதல், உண்மை தகவலின் அழிதல் போன்ற கருப்பொருள்கள் மூலம் சமூக வலைத்தளங்களின் இருள்வாய்ப்பைப் பற்றிய விழிப்புணர்வும் இப்படத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த திரைப்படம், தமிழ்த் திரையுலகில் சமூக பொருத்தமுள்ள, உளவியல் பரபரப்புகள் அடங்கிய படைப்பாக வரவிருப்பது உறுதி. படக்குழுவினர் வெளியிட்டுள்ள ப்ரோமோ வீடியோக்கள் மற்றும் படக் காட்சிகள், ரசிகர்களிடையே பெரும் கவனத்தை பெற்றுள்ளன. இந்த நிலையில், "டிரெண்டிங்" படம் சினிமா ரசிகர்களுக்கும், சோசியல் மீடியா பயனாளர்களுக்கும் ஒரு கண்ணோட்டமாகவும், கவனத்தை ஈர்க்கும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கருப்பு நிற சேலையில் மயக்கும் நடிகை சிவாங்கி..! இடையழகில் கவரும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!