ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!! ‘ராமாயணம்’ படத்தில் சூர்ப்பணகையாக பார்க்க ரசிகர்கள் ஆவல்..!
ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி, பின்னர் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து இந்திய அளவில் பிரபலமானவர் ரகுல் ப்ரீத் சிங்.
குறிப்பாக தமிழில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்ததன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய அவர், தற்போது பாலிவுட்டிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்.
திரைப்படங்களை தாண்டி சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங், தனது போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான தருணங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வது வழக்கம்.
இதையும் படிங்க: ‘ராமாயணா’வில் சூர்ப்பணகையாக ரகுல் ப்ரீத் சிங்..!! எலிகன்ட் லுக்கில் வைரலாகும் போட்டோஸ்..!
தற்போது அவரது கைவசம் இருக்கும் படங்களில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பது ‘ராமாயணம்’.
நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த பிரம்மாண்டமான திரைப்படத்தில் ரன்பீர் கபூர் ராமர் கதாபாத்திரத்திலும், சாய் பல்லவி சீதை கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். யஷ் ராவணனாக நடிக்கும் இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங் சூர்ப்பணகை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
படத்தின் கதை, நடிகர்கள் தேர்வு, பிரம்மாண்டமான உருவாக்கம் என பல காரணங்களால் ஏற்கனவே இந்திய அளவில் பேசப்பட்டு வரும் ‘ராமாயணம்’, இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது.
முதல் பாகம் தீபாவளியை முன்னிட்டு 2026 நவம்பர் 6ஆம் தேதி வெளியாகும் என சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டாம் பாகம் 2027 தீபாவளி காலகட்டத்தில் வெளியாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.
ராமாயணக் கதையில் சூர்ப்பணகை கதாபாத்திரம் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. ராவணனின் சகோதரியான சூர்ப்பணகையின் சம்பவங்கள்தான் ராமர்–ராவணர் மோதல் உச்சத்தை நோக்கி நகர்வதற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக அமைந்ததாக புராணக் கதையில் சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: ‘ராமாயணா’வில் சூர்ப்பணகையாக ரகுல் ப்ரீத் சிங்..!! எலிகன்ட் லுக்கில் வைரலாகும் போட்டோஸ்..!