‘அனிமல்’ படத்திற்கு பிறகு வேற லெவலில் மாறிய நடிகை..!! கருப்பு உடையில் ரசிகர்களை கவர்ந்த த்ரிப்தி டிம்ரி..!
நடிகை த்ரிப்தி டிம்ரி கருப்பு உடையில் கிளாமரில் ஜொலித்த போட்டோஸ் வெளியாகியுள்ளது.
பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறியிருக்கிறார் த்ரிப்தி டிம்ரி.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர், ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான ‘அனிமல்’ திரைப்படத்திற்குப் பிறகு இந்திய அளவில் அதிகம் கவனிக்கப்படும் நடிகையாக மாறினார்.
குறிப்பாக அந்த படத்தில் அவர் நடித்த ஜோயா கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளானதுடன், சமூக வலைதளங்களிலும் த்ரிப்தி டிம்ரியின் பெயர் வேகமாக ட்ரெண்டானது.
இதையும் படிங்க: டாக்ஸிக் புரமோஷனில் ட்ரெண்டிங்கில் ருக்மிணி வசந்த்..!! கருப்பு உடையில் வந்து ரசிகர்களை கவர்ந்த சென்சேஷன் நடிகை..!
அதன் பிறகு பாலிவுட்டில் அவருக்கான பட வாய்ப்புகளும், ரசிகர்கள் வட்டமும் கணிசமாக அதிகரித்தன. தற்போது தொடர்ந்து பல்வேறு படங்களில் பிஸியாக நடித்து வரும் த்ரிப்தி டிம்ரி, திரைப்படங்களை தாண்டி சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
குறிப்பாக இன்ஸ்டாகிராமில் அவர் பகிரும் புகைப்படங்கள் ஒவ்வொரு முறையும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
டிராவல் புகைப்படங்கள் தொடங்கி, போட்டோஷூட் படங்கள் வரை விதவிதமான பதிவுகளை வெளியிட்டு வரும் அவர், தனது தனித்துவமான ஸ்டைல் சென்ஸாலும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
அவரது இன்ஸ்டாகிராம் பதிவுகள் தொடர்பாகவே முன்னணி ஃபேஷன் ஊடகங்களும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றன.
அந்த வரிசையில் தற்போது கருப்பு நிற ஸ்டைலிஷ் உடையில் த்ரிப்தி டிம்ரி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
த்ரிப்தி டிம்ரியின் திரைப்பயணம் ஒரே படத்தில் தொடங்கி ஒரே நாளில் உச்சத்தை அடைந்தது என்று சொல்ல முடியாது. அதற்கு முன்பே ‘லைலா மஜ்னு’, ‘புல்புல்’, ‘கலா’ உள்ளிட்ட படங்களில் அவர் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியிருந்தார்.
இதையும் படிங்க: விஜய்–சங்கீதா விவாகரத்து வழக்கில் திடீர் திருப்பம்..!! மனுவை வாபஸ் வாங்கியாச்சி.. ஆனாலும் ஒன்னு சேரல ஏன்.. பிரபலம் சொன்ன கருத்து வைரல்..!