×
 

சினிமாவில் இருந்து விலகுகிறாரா அஜித்..? ஒரே வார்த்தையால் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!

விஜயை தொடர்ந்து அஜித் எடுத்த தீர்க்கமான முடிவை கண்டு அதிர்ச்சியில் உறைந்து உள்ளனர் ரசிகர்கள்.

தமிழ் திரை உலகில் 'தல போல வருமா' என்ற பாடலை கேட்டால் உடனே நினைவுக்கு வருபவர் தான் நடிகர் அஜித் குமார். இவருடைய படங்கள் அனைத்தும் ஆக்ஷனாகவும் அதிரடியாகவும் இருக்கும். அதனாலயே இவருக்கு ஃபேன்ஸ்கள் கொஞ்சம் அதிகம் என்று சொல்லலாம். சமீபத்தில் நடிகர் சூரி கூட அவரது பட பூஜையில், 'கடவுளே' என்று சொல்ல, அருகில் இருந்த சிறுவன் 'அஜித்தே' என்று சொன்னான் என கூறினார். அந்த அளவிற்கு நடிகர் அஜித்தை குறித்ததான தாக்கம் அவரது ரசிகர்களிடம் உள்ளது என்றே கூறலாம். 

அந்த ரசிகர்களுக்கு ஏற்றவாறு நடிகர் அஜித். முதலாவதாக உங்கள் குடும்பத்தையும் உங்கள் வாழ்க்கையையும் பாருங்கள். நான் நடிக்கிறேன் எனக்கு உண்டான வருமானத்தை வாங்கிக் கொள்கிறேன் பின்பாக என் குடும்பத்தை பார்க்கிறேன். அதை போல் நீங்களும் உங்கள் குடும்பத்தை முதலாவது கவனியுங்கள் என்று சொல்லி, இனி என்னை யாரும் 'தல' என அழைக்க வேண்டாம் என்று சொன்னார். இதனை கேட்ட அவரது ரசிகர்கள் இப்படி அடைமொழி வேண்டாம் என கூறிய ஒரே நடிகர் அஜித்தான் என இன்றும் மகிழ்ச்சியுடன் கூறி வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் படங்களில் ஒரு புறம் நடித்து வந்த அஜித் குமார், தற்பொழுது நடைபெற்று வரும் அனைத்து கார் ரேஸ்களிலும் கலந்துகொண்டு இந்தியாவிற்கு பெருமை சேர்த்து வருகிறார். இந்த சூழலில் சமீபத்தில் நடைபெற்ற கார் ரேஸில் இரண்டாவது இடத்தை பெற்ற நடிகர் அஜித் மற்றும் அவரது டீமிற்கும் நல்ல வரவேற்பும் பாராட்டும் இந்தியா முழுவதும் கிடைத்தது. இப்படி இருக்க, சமீபத்தில் கார் ரேஸில் பங்கு பெற்றதற்காகவும் வெற்றி அடைந்ததற்காகவும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கையால் 'பத்மபூஷன் விருதை' பெற்றார் நடிகர் அஜித்.

இதையும் படிங்க: ரசிகர்கள் செய்த செயலால் அதிர்ச்சியான AK..! அஜித்தின் நிலைமையை கண்டு நெட்டிசன்கள் குமுறல்..! 

இப்படி பல சாகசங்களை தன் வாழ்க்கையில் நிகழ்த்தி வரும் நடிகர் அஜித்தின் 'விடாமுயற்சி' படம் ரசிகர்கள் மத்தியில் சற்று ஏமாற்றத்தை கொடுத்தாலும் அடுத்ததாக அதிரடியான ஒரு திரைப்படத்தை கொடுத்தார் நடிகர் அஜித். ஃபேன் பேஸ் திரைப்படமாக பார்க்கப்பட்ட குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்களின் உற்சாகத்தையும் பழைய அஜித்தையும் காணும் அளவிற்கு அட்டகாசமாக இருந்தது. ஆக்ஷனும் அதிரடியும் கலந்த இந்த திரைப்படத்தில் மனைவி சொன்ன ஒரே வார்த்தைக்காக, மகனுக்கு கொடுத்த சத்தியத்திற்காக தன்னை மாற்றிக் கொண்டு இருக்கும் அஜித்திடம் கடைசியில் மனைவி, உங்கள் வழி தனி வழி தான் நீங்கள் செல்லுங்கள் என சொல்லும் காட்சிகள் எல்லாம் குடும்பத்திற்காக ஒரு மனிதன் எவ்வளவு எல்லைக்கு வேண்டுமானாலும் இறங்குவார் என்பதை காண்பிக்கும் வகையில் இருந்தது. 

இதுவரை நடிகர் அஜித், அமராவதி, பவித்ரா, ஆசை, ராஜாவின் பார்வையிலே, வான்மதி, காதல் கோட்டை, கல்லூரி வாசல், உல்லாசம், ரெட்டை ஜடை வயசு, நேசம், காதல் மன்னன், அவள் வருவாளா, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வாலி, உன்னை தேடி, நீ வருவாய் என,ஆனந்த பூங்காற்றே, அமர்க்களம், முகவரி, உன்னை கொடு என்னை தருவேன், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், தீனா, சிட்டிசன், பூவெல்லாம் உன் வாசம், ராஜா, வில்லன், ரெட், ஆஞ்சநேயா, அட்டகாசம், ஜனா, ஜி, திருப்பதி, வரலாறு, பரமசிவன், கிரீடம், ஆழ்வார், பில்லா, ஏகன், அசல், மங்காத்தா, பில்லா 2, இங்கிலீஷ் விங்கிலிஷ், ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால், வேதாளம், விவேகம், நேர்கொண்ட பார்வை, விஸ்வாசம், வலிமை, துணிவு, விடாமுயற்சி உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். 

இந்த நிலையில் நடிகர் அஜித் திடீரென உடல் எடை குறைந்ததற்கான காரணத்தையும், அடுத்த படத்திற்கான அப்டேட்டையும் கொடுத்துள்ளார். அதன்படி அஜித் ஒரு ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், "கார் ரேஸ் போட்டிகளுக்காக கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து கடுமையான உடற்பயிற்சி செய்து எனது உடல் எடையில் இருந்து 42 கிலோவை குறைத்து உள்ளேன். நான் கார் ரேஸ் மற்றும் திரைப்படங்களில் மாறி மாறி கவனம் செலுத்தி வருகிறேன். அது தவறு என நினைக்கிறேன். ஏனெனில் இரண்டிலும் நான் கவனம் செலுத்தும் பொழுது இரண்டிற்கும் ஏற்றத்தாழ்வுகள் அதிகமாக வருவதை பார்க்கிறேன்.

ஆதலால் ஒரு முடிவை எடுத்து உள்ளேன். நான் ரேஸ்களில் கலந்து கொள்ளும் நேரங்களில் சினிமாவில் நடிப்பதில்லை எனவும் சினிமாவில் நடிக்கும் பொழுது எந்த ரேஸ்களிலும் கலந்து கொள்ளப் போவதில்லை என்ற முடிவையும் தீர்க்கமாக எடுத்து உள்ளேன். இதுதான் சரியான வழியாக இருக்கும் என்றும் நம்புகிறேன். எனவே வரும் நவம்பர் மாதத்தில் எனது அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறேன். அந்த படம் அடுத்த ஆண்டு, அதாவது 2026ல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியாகலாம் என்ற செய்தியை ரசிகர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இதனை பார்த்த ரசிகர்கள் நீங்கள் படத்தில் நடித்தாலும் ரேஸுக்கு போனாலும் உங்களை என்றும் மறக்கமாட்டோம் அஜித் சார் என கூறிவருகின்றனர்.

இதையும் படிங்க: நடிகர் அஜித்தா இப்படி செய்தது... நம்பவே முடியல..! மகனை ஜெயிக்க வைக்க என்ன செய்தார் AK..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share