×
 

நடிகர் அஜித்தா இப்படி செய்தது... நம்பவே முடியல..! மகனை ஜெயிக்க வைக்க என்ன செய்தார் AK..!

நடிகர் அஜித் தனது மகனை ஜெயிக்க வைக்க இப்படி செய்வார் என எதிர்பார்க்க வில்லை என நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.

கோலிவுட் மற்றும் பாலிவுட்  நடிகர்களில் தங்களுக்கு பிடிப்பதை செய்யும் நடிகர் வரிசையில் என்றும் நம்பர் ஒன்னாக இருப்பவர் நடிகர் அஜித். இவர் தனது நடிப்பில் ஒரு புறம் ஆர்வத்தை காட்டினாலும் மறுபுறத்தில் கார் ரேஸ்களிலும், உலகம் சுற்றும் வாலிபனாக இன்றும் தனது bmw பைக்கை எடுத்துக் கொண்டு மலைகள் முதல் குன்றுகள் வரை அனைத்து இடங்களுக்கும் பயணம் செய்து தன் வாழ்க்கையை இனிமையாக கழித்து வருகிறார். ஆனால் இப்படிப்பட்டவரை பிடிப்பது, அனைத்து இயக்குநர்களுக்கும், ரசிகர்களுக்கும் பெரிய சவாலாகவே உள்ளது.

இப்படி இருக்க,  நடிகர் அஜித், ஒருபுறம் நடிப்பு மறுபுறம் தனக்கு பிடித்த வகையில் பைக் ரைட் செய்வது, மாணவர்களுக்கு அறிவியல் சார்ந்த பாடங்களை கற்று கொடுப்பது, என தன் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் கழித்து வந்த இவர் தற்பொழுது கார் ரேஸில் களமிறங்கி அசத்தி வருகிறார். இந்த சூழலில், தனக்கான அணியை திரட்டி, இந்தியாவிற்காக கார் ரேஸில் கலந்து கொண்டு போராடி வந்தார் அஜித். ஏற்கனவே நடந்த போட்டியில் பலமுறை அவருக்கு விபத்துக்கள் ஏற்பட்டாலும், களத்தில் விடாமுயற்சியுடன் போராடிய நடிகர் அஜித், ரேசராக தனது அணியை மூன்றாவது இடத்தில் நிலை நிறுத்தி வெற்றியைக் கண்டார்.  இந்த வெற்றியை தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மக்களும் கொண்டாடி தீர்த்தனர்.

இதையும் படிங்க: அஜித் ஜாதகத்தில் உச்சத்தில் குரு... ஆல் ஏரியா கில்லி..! AK-வின் மறுபக்கம்..!

இதனை அடுத்து தனது அணிகளை அழைத்து கொண்டு பல நாடுகளுக்கு சென்று அங்குள்ள கார் பந்தயங்களில் கலந்து கொண்டு மிகுந்த பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே, பிரான்சில் தனது ரேஸ் காரை பார்த்து மகிழ்ந்த அஜித்தின் வீடியோக்கள் பகிரப்பட்ட நிலையில், தற்பொழுது கார் ரேஸில் பங்கேற்று உள்ளார் நடிகர் அஜித். சமீபத்தில் GTA கார் பந்தயத்தில் தகுதி சுற்றில் தேர்வான அஜித்குமார், பிரான்சில் உள்ள பால் ரிக்கார்ட் சர்க்யூட் பந்தயத்தில் தற்பொழுது பங்கேற்றுள்ளார். பின்பு இந்த பந்தயத்தின் வெற்றி முடிவுகளில் நடிகர் அஜித்தின் டீம் இரண்டாம் இடத்தை பிடித்து சாதித்து இருப்பதாக அறிவிப்பு வந்தது. இந்த சூழலில், இதுவரை இரண்டு வெண்கலப்பதக்கம் வென்ற நிலையில் தற்பொழுது வெளிப்பதக்கத்தை பெற்று உள்ளார் என்பது அனைவருக்கும் மகிழ்ச்சியை அளித்தது. அந்த மகிழ்ச்சி முடிவதற்குள் அவர் பத்மபூஷன் விருது வாங்கியது ரசிகர்களுக்கு மேலும் மகிழ்ச்சியளித்தது.   

இப்படி ரேஸிங்கில் முழு கவனத்தையும் செலுத்தி வரும் நடிகர் அஜித், அவ்வப்போது துபாய்க்கு சென்று கார் ரேஸுக்காக பயிற்சி எடுத்து வருகிறார். இந்நிலையில், நடிகர் அஜித் நான் மட்டும் ஜெயித்தால் போதாது எனது மகனும் கார் ரேஸில் தன்னை போல் ஜெயிக்க வேண்டும் என நினைத்து இப்பொழுதே தனது மகன் ஆத்விக்கிற்கு ரேஸ் கார் ஓட்டுவதில் பயிற்சி கொடுத்து வருகிறார். ஏற்கனவே சென்னையில் "கோ கார்ட் ட்ராக்கில்" தனது மகனை ரேஸ் கார் ஓட்ட வைத்த நிலையில் தற்பொழுது மீண்டும் தனது மகனை ரேஸுக்கு பழக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அஜித்.

அந்த புகைப்படத்தில் நடிகர் அஜித், அவரது மனைவி ஷாலினி, மகன் ஆத்விக், பயிற்சியாளர் கார் ரேஸ் வீரர் நரேன் கார்த்திகேயன் இருக்கின்றனர்.
 

இதையும் படிங்க: எல்லாத்துக்கும் ஷாலினிதான் காரணம்..! தன் மனைவியை இப்படி சொல்லிட்டாரே அஜித்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share