தனது பாசத்தால் பூனையை மயக்கிய நடிகர் அஜித்குமார்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!
பூனையை பார்த்து அஜித் குமார் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் தல என அனைவராலும் அன்பாக அழைக்கப்படுபவர் தான் நடிகர் அஜித் குமார். இவர் நடிப்பது மட்டுமின்றி தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல்வேறு பரிமாணங்களை கொண்ட அனைவருக்கும் பிடித்த நபராக வலம் வந்துகொண்டு இருக்கிறார். இவர் தனது வித்தியாசமான கதைகளை தேர்வு செய்வதாலும், தனது நேர்மையான பேச்சாலும் கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றதுடன், திரைத்துறையினர் பலரையும் மதிக்க வைத்தவர். இவர் தற்போது, கார் பந்தய வீரராகவும் பிரியாக இருக்கும் நேரத்தில் பைக்கை எடுத்துக்கொண்டு உலகை சுற்றும் வாலிபனாவும் இருந்து வருகிறார்.
அதுமட்டுமல்லாமல், சமீபத்தில் இந்திய குடியரசு தலைவரான திரௌபதி முர்மு அவர்களின் கைகளால் "பத்மபூஷன்" விருத்தினைப் பெற்றார். இப்படி இருக்க, கடந்த 2003 -ம் ஆண்டில் MRF Racing Series மூலம் தனது ரேஸிங் வாழ்க்கையைத் தொடங்கிய அஜித் குமார், பின் 2004 -ம் ஆண்டு முதல் Formula Maruti Indian Championships மற்றும் Formula BMW Asia Championship ஆகிய போட்டிகளில் பங்கேற்று தனது வேகத்தையும் திறமையையும் வெளிப்படுத்தினார். ஒரு நடிகராக பிஸியாக இருந்த போதும், பந்தயங்களில் பங்கேற்பதற்கான அவருடைய ஆர்வம் மட்டும் குறையவே இல்லை. அதன் பின், 2010-ம் ஆண்டு, FIA Formula Two Championship எனும் சர்வதேச அளவிலான கார் பந்தயத் தொடரில் பங்கேற்று, அவருடைய ரேஸிங் வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனையை கொண்டு வந்தார். இதில், ஐரோப்பிய பந்தயங்களில் அவர் பங்கேற்று தன்னை ஒரு திறமையான சர்வதேச கார் ரேஸ் வீரராக நிலைநிறுத்தினார். கடந்த ஒரு வருடமாக, அஜித் மீண்டும் கார்ரேஸிங் துறையில் நடைபெறும் பல சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளைப் பதிவு செய்து வருகிறார்.
அவருடைய இந்த போட்டி மனப்பான்மை, சினிமா ரசிகர்களுக்கு புதிய அடையாளமாகவே இருந்து வருகிறது. தனது அதிகப்படியான நேரத்தை ரேஸி(ங்க்)கான பயிற்சிக்கும், போட்டிகளுக்கும் ஒதுக்கி வருவதுடன், அத்துறையில் தன்னம்பிக்கையுடன் திகழும் ஒருவர் என நடிகர் அஜித் குமார் பாராட்டை பெற்று வருகிறார். இப்படி இருக்க, சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அஜித் குமார் தற்போது தனது 64வது படமான AK64 படத்தில் நடிக்க தொடங்க உள்ளார்.இந்தப் படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "மாரீசன்" படத்துடன் நேரடியாக மோதும் "தலைவன் தலைவி"..! எதிர்பார்ப்பை எகிற வைப்பதாக ரசிகர்கள் பேச்சு..!
ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம், அஜித்தின் திரைப்பயணத்தில் முக்கிய அடையாளமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆதிக் ரவிச்சந்திரனும் அஜித்தும் இணைவது இதுவே முதல் முறை அல்ல. இப்படத்தின் கதை, நடிகர்கள், படப்பிடிப்பு தொடங்கும் நாள் உள்ளிட்ட விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இப்படி பல வெற்றிகளை பெற்ற ஒரு தனித்துவமான நட்சத்திரமாக இருந்தாலும், நடிகர் அஜித் குமாரின், இயல்பான மனித நேயம் அவரை ரசிகர்களிடையே அதிகம் நெருக்கமாக வைத்திருக்கிறது. இப்படி இருக்க, சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நடிகர் அஜித் பூனை ஒன்றை அழைத்து, அதனிடம் பாசத்தோடு பேசும் வகையில் உள்ளது. அதில் அஜித் பூனையை பார்த்து, "நீ என்னுடன் சென்னைக்கு வா.. உன்னை நான் சென்னைக்கு கூட்டிட்டு போறேன். வரியா பேபி.." என சாஃப்ட்டாக பேசுகிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக அதனை பார்த்த அவரது ரசிகர்கள் இதுதான் அஜித் சார் மனசு என பதிவிட்டு வருகின்றனர்.
இப்படி சினிமா, கார் பந்தயம், சமூக சேவை என அனைத்திலும் சமநிலையை உண்டாக்கும் ஒரு உயர்ந்த கலைஞராக அஜித் குமார் பார்க்கப்படுகிறார். ரசிகர்களுக்கு திரையில் அதிரடி காட்டும் அவர், வெளியே மனதைக் கொள்ளை கொள்ளும் தன்மை கொண்டவராக செயல்படுகிறார். அவர், AK64 மூலம் தனது அடுத்த கட்ட வெற்றிப் படத்தை தொடங்க உள்ளார். அதே நேரத்தில், தனது கனவான ரெஸ் வாழ்க்கையிலும் வெற்றியை காண அயராது உழைத்து வருகிறார்.
இதையும் படிங்க: வெங்கட் பிரபு - சிவகார்த்திகேயன் கூட்டணியில் தயாராகும் ஹிட் படம்..! உறுதிப்படுத்திய ஃபேமஸ் இயக்குநர்..!