"மாரீசன்" படத்துடன் நேரடியாக மோதும் "தலைவன் தலைவி"..! எதிர்பார்ப்பை எகிற வைப்பதாக ரசிகர்கள் பேச்சு..!
அனைவரையும் எதிர்பார்ப்பில் எகிறச்செய்த மாரீசன் மற்றும் தலைவன் தலைவி படத்தை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளையும், திறமையான நடிகர்களின் நடிப்பையும் இணைத்து தரும் படைப்புகளுக்கு மக்கள் மத்தியில் எப்பொழுதும் நல்ல வரவேற்ப்பு உண்டு. அந்த வகையில், நடிகர் பகத் பாசில் மற்றும் வைகைப்புயல் வடிவேலு இணைந்து நடித்துள்ள நடித்துள்ள படம் தான் “மாரீசன்”. இத்-திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளதோடு இந்த திரைப்படம் வரும் ஜூலை 25-ம் தேதி தமிழகத்தின் அனைத்து திரையரங்குகளிலும் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது.
இப்படி இருக்க, அதே நாளில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்துள்ள மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை துண்டியுள்ள படமான “தலைவன் தலைவி” படமும் வெளியாக உள்ளது. முன்னதாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான “மாமன்னன்” திரைப்படத்தில் பகத் பாசில் மற்றும் வடிவேலு இணைந்து நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்கள் மட்டுமல்லாது விமர்சகர்களிடையேயும் நல்ல வரவேற்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்திய நிலையில், இப்போது மீண்டும் இருவரும் ஒன்றிணைந்து நடித்துள்ள படமான "மாரீசன்" படமும் திரையில் வித்தியாசமான ஒரு மாற்றத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், "மாரீசன்" படத்தின் டிரெய்லர் பற்றிய அறிவிப்பும் ரசிகர்களுக்கு மேலும் எதிர்பார்ப்பை எகுற செய்துள்ளது. இப்படி இருக்க, படக்குழு வெளியிட்ட அறிவிப்பின்படி, இப்படத்தின் டிரெய்லர் மாலை 5.04 மணிக்கு வெளியாக உள்ளது.
மேலும், “மாரீசன்” திரைப்படத்தில், பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் வடிவேலு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் விவேக் பிரசன்னா, பி.எல். தேனப்பன், கோவை சரளா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குறிப்பாக, விவேக் பிரசன்னா பகத் பாசிலின் நண்பராக நடித்து இருக்கிறாராம். இவர்கள் அனைவரும் இப்படத்தில் தங்கள் பங்களிப்புகளை மிகச்சிறப்பாக வழங்கியிருப்பதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்-படத்தில் இவர்களுடன் சித்தாரா, லிவிங்ஸ்டன், சரவண சுப்பையா, ரேணுகா, கிருஷ்ணா, டெலிபோன் ராஜா, ஹரிதா உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த சூழலில் "மாரீசன்" திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் பற்றிய முழுமையான தகவல்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
இதையும் படிங்க: 'குடும்ப படம் எடுப்பது மிகவும் சவாலான ஒன்று' – இயக்குநர் பாண்டிராஜ் அட்டகாசமான பேச்சு..!
இருப்பினும், திரைப்படத்தின் போஸ்டர்கள், டீசர் உள்ளிட்ட தகவல்களின் அடிப்படையில், திரைப்படத்தின் ஒளிப்பதிவு, இசை, கலை இயக்கம் மற்றும் பின்னணி வேலைகளில் ஈடுபட்ட தொழில்நுட்ப கலைஞர்களும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக வழங்கியுள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது. இதனால் "மாரீசன்" படத்தின் அறிவிப்பு வெளியாகியதிலிருந்து, சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பெரும் உற்சாகத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர். டிரெய்லர் வெளியீட்டுக்கான நேரம் கூட மிகச்சிறப்பாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அது மில்லியனுக்கு மேல் பார்வைகளை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஒரே நாளில் “மாரீசன்” மற்றும் “தலைவன் தலைவி” ஆகிய இரண்டு திரைப்படங்களும் வெளியாகும் நிலையில், ரசிகர்கள் எந்த படம் அதிக வசூலை பெரும் என்பதை காண ஆர்வத்துடன் இருக்கின்றனர். ஒரு பக்கம் விஜய் சேதுபதியின் நடிப்புக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருக்க, மறுபக்கம் பகத் பாசில் – வடிவேலு கூட்டணி கொண்டுவரும் வித்தியாசமான கதையும், திரைக்கதை அமைப்பும் ரசிகர்களை எதிர்பார்க்கவே வைத்திருக்கிறது.
மொத்தத்தில், “மாரீசன்” திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு புதிய பரிமாணத்தைக் கொண்டு வரக்கூடிய படைப்பாக உருவாகியுள்ளது. நடிப்பிலும் தொழில்நுட்பத்திலும் உயர் தரத்தை நிலைநிறுத்தும் இப்படம், ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஈடு-கொடுக்குமா என்பதை ஜூலை 25 அன்று திரையரங்குகளில் பார்த்தால் தான் தெரியும்.
இதையும் படிங்க: விஜய் சேதுபதி - பாண்டிராஜ் கூட்டணியில் ‘தலைவன் தலைவி’..! தெலுங்கில் படத்தின் பெயர் என்ன தெரியுமா..?