பிரபல இயக்குனர் படத்தில் விஷ்ணு விஷால்..! அதிரடி அப்டேட் கொடுத்த படக்குழு..!
துள்ளாத மனமும் துள்ளுமா, தேசிங்கு ராஜா உள்ளிட்ட படங்களை போல் இந்த படம் இருக்குமா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
சினிமாவில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருபவர் தான் நடிகர் விஷ்ணு விஷால். இவரது நடிப்பில் வரும் அனைத்து படங்களும் மக்களை ரசிக்க வைக்கும் படங்களாகவே இருக்கும். அந்த வகையில், 2009ம் ஆண்டு வெளியான "வெண்ணிலா கபடி குழு" என்ற திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானவர் தான் விஷ்ணு விஷால். இந்த படத்தை யாராலும் மறக்க முடியாது. ஏனெனில் இன்று ஹீரோவாக வளம் வரும் காமெடி நடிகர் சூரி முதன் முதலில் பரோட்டோ சாப்பிட்டு இந்த படத்தை அழகாக மக்கள் மனதில் கொண்டு சேர்த்தார். மேலும் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்த விஷ்ணு விஷால் கடைசியாக தனது காதலியுடன் வாழாமல் கபடி போட்டிகளத்தில் இறந்து போனது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. அந்த அளவிற்கு படத்தில் தனது அற்புதமான நடிப்பை வெளிக்காட்டி அசத்தி இருப்பார்.
இதனை அடுத்து இவரது நடிப்பில் உருவான அருமையான திரைப்படம் "குள்ளநரி கூட்டம்". இந்த படத்தில் தனது காதலிக்காக போலீசாக மாற நினைக்கும் விஷ்ணு ஷிஷால், தனது அப்பாவுக்கு தெரியாமல் போலீஸ் ட்ரைனிங் சென்று அங்கு நன்றாக தனது திறமையை காண்பித்து இருப்பார். ஆனால் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் வேறு சிலரை வேலைக்கு எடுக்கும் செய்தி தெரிந்த விஷ்ணு, அவரது நண்பர்களுடன் இணைந்து ஊழல் அதிகாரிகளை மீடியாக்கு முன்பாக நிறுத்தி மீண்டும் தனது வேலையை வாங்குவர். ஆனாலும் இப்படத்தில் இவரது காதல் போஷன் அல்டிமேட்டாக இருக்கும். இந்த படமும் வெண்ணிலா கபடி குழுவும் இவரை மக்கள் மனதில் கதாநாயகனாக பதியவைத்த படம் எனலாம்.
இதையும் படிங்க: குட்டி தேவதையை கையில் ஏந்திய விஷ்ணு விஷால்..! தங்கை பிறந்த குஷியில் அண்ணன் கொண்டாட்டம்..!
இப்படி இருக்க, இவரை அனைவரது மனதிலும் நீங்கா இடம் பிடிக்க வைத்த படம் என்றால் மூன்று படங்களை சொல்லலாம். அதில் முதலாவது போட்டோ எடுத்தால் மறித்து போவார்கள் என நம்பும் ஊர்மக்களை ஏமாற்றி அந்த ஊர் தலைவரின் மகளை திருமணம் செய்யும் படம் தான் "முண்டாசுப்பட்டி". இதனை அடுத்தது அனைவரது மனதிலும் மிகப்பெரிய திகிலை ஏற்படுத்திய அட்டகாசமான படமான "ராட்சசன்" திரைப்படம். மூன்றாவதாக மனைவியுடன் மல்யுத்தமான குஸ்தி போடும் படமான "கட்டா குஸ்தி". இந்த மூன்று படங்களும் மக்கள் மனதில் அவரை நிலைநிற்க செய்தது.
இந்த சூழலில் விஷ்ணு விஷால் இதுவரை, வெண்ணிலா கபடி குழு, துரோகி, குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, தாக்க தாக்க, இன்று நேற்று நாளை, மாவீரன் கிட்டு, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கதாநாயகன், ராட்சசன், சிலுக்குவார்பட்டி சிங்கம், இன்று நேற்று நாளை 2, மோகன் தாஸ், காடன், கட்டா குஸ்தி, ஃப்.ஐ.ஆர் (ஃபைசல் இப்ராஹிம் ரய்ஸ்), லால் சலாம், போடா ஆண்டவனே என் பக்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார்.
இந்த நிலையில், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தின் வெற்றிக்கு பின் 9 ஆண்டுகளுக்கு பிறகு எழில் இயக்கத்தில் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இந்த படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்க உள்ள நிலையில், இப்படப்பிடிப்புக்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், இயக்குனர் எழில் இயக்கம் என்பதால் ‛துள்ளாத மனமும் துள்ளும், பூவெல்லாம் உன் வாசம், தீபாவளி' போன்ற காதல் படமாக இப்படம் அமையுமா? அல்லது தேசிங்கு ராஜா, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் போன்ற படங்களை போல காமெடி படமாக இருக்குமா என ரசிகர்கள் ஆர்வமுடன் கேட்டு வருகின்றனர்.
வருகின்ற ஜூலை மாதம் இயக்குனர் எழில் இயக்கிய "தேசிங்கு ராஜா 2" படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் தரிசனம் பார்க்க ரெடியா..! மதராஸி பட அப்டேட் கொடுத்து அசரவைத்த படக்குழு..!