×
 

சிவகார்த்திகேயன் தரிசனம் பார்க்க ரெடியா..! மதராஸி பட அப்டேட் கொடுத்து அசரவைத்த படக்குழு..!

மாஸ் ஹிட் கொடுக்க போகும் சிவகார்த்திகேயனின் மதராஸி படம் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது.

ஸ்ரீ லட்சுமி மூவிஸ் தயாரிப்பில், அனிரூத் இசையில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் "மதராஸி". இப்படத்தில் மெரினா, 3, மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கி சட்டை, ரெமோ, ரஜினி முருகன், வேலைக்காரன், கனா, சீமராஜா, நம்ம வீட்டுப் பிள்ளை, Mr.லோக்கல், ஹீரோ, டாக்டர், ப்ரின்ஸ், டான், மாவீரன், அமரன், அயலான், தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்) உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ள சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இப்படி இருக்க, உண்மையில் இந்த படத்திற்கு முதலில் வைத்த பெயர் 'எஸ்கே 23" தான். இதற்கு காரணம் இப்படம் சிவகார்த்திகேயனின் 23வது படம் என்பதால் அவரது பிறந்தநாள் அன்று தான் இப்படத்தின் பெயரை வெளியிடுவோம் என திட்டவட்டமாக சொல்லிவிட்டார் இப்படத்தின் இயக்குனர். அதன் பின், எஸ்கே பிறந்தநாள் அன்று படத்தின் பெயர் "மதராஸி" என கூறிய ஏ.ஆர்.முருகதாஸ் இந்தியில் இப்படத்தின் பெயர் "தில் மதராஸி" என குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயனை இயக்கும் வெங்கட் பிரபு.. மலேசியாவில் அப்டேட் சொன்ன இயக்குநர்!!

சமீபத்தில் இப்படத்திற்கு 'மதராஸி' என பெயர் வைக்க என்ன காரணம் என்பதை பகிர்ந்து இருந்தார் ஏ.ஆர்.முருகதாஸ், வட இந்தியாவில் உள்ள மக்கள் நம்மை எப்படி பார்க்கிறார்கள் என்பது தான் இப்படத்தின் கதை என்றும் வட இந்திய மக்கள் தென் இந்திய மக்களை இன்றளவும் அழைக்கும் வார்த்தை 'மதராஸி' தான், ஆதலால் "மதராஸி" என்ற பெயர் வைக்கப்பட்டது என்றார். இதில் கவனிக்க வேண்டிய ஒன்று உள்ளது, இப்படத்திற்கு தமிழில் 'மதராஸி' என்று பெயர் வைத்த முருகதாஸ், இந்தியில் "தில் மதராஸி" என குறிப்பிட்டு உள்ளது ஏன்? தில் என்றால் மனசு அப்பொழுது "வட இந்தியர்களின் மனதை திருடிய மதராஸி" என்று சொல்ல வருகிறார் போல என நெட்டிசன்கள் மகிழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் 'மதராஸி' படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்தனர் படக்குழுவினர். அதன்படி, வருகின்ற செப்டம்பர் மாதம் 5ம் தேதி ஆசிரியர்கள் தினத்தன்று இப்படம் ரிலீஸ் ஆகிறது. அந்த தேதியில் மிலாடி நபி விடுமுறை வருகிறது, அதுமட்டுமல்லாமல் அன்று வெள்ளிக்கிழமை என்பதால் அடுத்த இரண்டு நாட்களும் வார இறுதி நாட்கள், ஆக தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருகிறது. எனவே ரசிகர்கள் எந்த தொந்தரவும் இல்லாமல் படத்தை காணலாம் என படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர்.

இப்படி இருக்க படத்தின் ட்ரெய்லருக்காக அனைவரும் காத்து கொண்டு இருக்க, இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது எஸ்கே-வின் மதராஸி படப்பிடிப்பு. அதன்படி, படத்தின் இறுதிக்கட்ட காட்சியை இலங்கையில் எடுக்க திட்டமிட்டுள்ளது படக்குழு. அங்கு 15 முதல் 20 நாட்கள் வரை படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. அதற்காக படக்குழுவினர் அனைவரும் தற்பொழுது இலங்கைக்கு சென்றுள்ளனர். 

ஏற்கனவே இலங்கையில் சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: உங்க வீட்லயா குண்டு போடுறாங்க.. அசிங்கமா இல்ல..! பிரபலங்களை கிழித்து தொங்க விட்ட நெட்டிசன்கள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share