×
 

சீதாதேவி-யின் பெயருக்காக நடந்த போராட்டம்..வெற்றிகண்ட சென்சார் போர்டு..! 'ஜானகி vs ஸ்டேட் ஆஃப் கேரளா' படத்தின் பெயர் மாற்றம்..! 

'ஜானகி vs. ஸ்டேட் ஆஃப் கேரளா' படத்தின் பெயர் மாற்றம் தொடர்பாக வெற்றிகண்டு உள்ளது சென்சார் போர்டு.

மொழி, மதம், கலாசாரம், அரசியல் என இந்த அனைத்து விவகாரமும் சினிமாவில் தற்பொழுது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனை உண்மையை இல்லை என யாரும் இங்கு மறுக்க முடியாது. ஏனெனில் இதற்கு முக்கிய உதாரணமாக ஒரு சம்பவம் தற்பொழுது சினிமாவில் நடைபெற்று உள்ளது. அதன்படி, பிரபல தென்னிந்திய நடிகை அனுபமா பரமேஸ்வரன் மற்றும் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி ஆகியோர் நடித்ப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் "ஜானகி vs. ஸ்டேட் ஆஃப் கேரளா" என்ற திரைப்படம். இப்படத்தை குறித்து பார்த்தால் , இது சமூக நீதியை மையமாக கொண்ட, ஒரு பெண்மணியின் போராட்டத்தை முன்னிறுத்தும் வகையில் உருவான குற்ற வழக்கைத் தழுவிய கதை எனலாம். இப்படம் சென்சார் வாரியத்தால் பெரும் எதிர்ப்பையும், திருத்தத் தேவைப்படுவதற்கான கோரிக்கையையும் தற்பொழுது சந்தித்துள்ளது. தற்போது இந்த விவகாரம் கேரளா உயர்நீதிமன்றம் வரை சென்று பரபரப்பாக மாறியுள்ளது.

இப்படத்தில் அப்படி என்ன தான் குற்றம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது என பார்த்தால், இப்படத்தின் தலைப்பான ‘ஜானகி vs. ஸ்டேட் ஆஃப் கேரளா’ என்பதில் "ஜானகி" என்பது இந்திய மரபுக்கணங்களின் அடிப்படையில் 'சீதா தேவி'யின் பெயராக கருதப்படுகிறதாம். ஆகவே, இந்த படத்தின் தலைப்பே மத உணர்வுகளை புண்படுத்தக்கூடியதாக இருக்கிறது என சென்சார் வாரியம் தெரிவித்து அதனை மாற்றவேண்டும் என பிடிவாதம் பிடித்து வருகிறது. மேலும், படத்தின் கதாநாயகியான ஜானகி, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிய பின் சட்டத்தை எதிர்த்து, தனக்கு நேர்ந்த நியாயத்திற்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் தைரியமான பெண்ணாக தான் காட்சியளிக்கிறார்.

ஆனால் இந்த கதாபாத்திரத்திற்கு “ஜானகி” என்ற பெயர் பயன்படுத்தப்படுவது சீதா தேவியின் உருவகத்தை தவறாக பயன்படுத்துவதற்கு சமம் என சிலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆகவே, இப்படத்தில் 96 இடங்களில் தேவையில்லாத காட்சிகளை எடிட் செய்து வெளியிட வேண்டும் என Central Board of Film Certification பரிந்துரைத்து இருக்கிறது. இதில் முக்கியமாக, கதாநாயகியின் பெயரான "ஜானகி" என்ற பெயர் வரும் அனைத்து இடங்களையும் மியூட் செய்ய வேண்டும் எனவும், தலைப்பை “வி. ஜானகி vs. கேரளா மாநிலம்” அல்லது “ஜானகி வி vs. ஸ்டேட் ஆஃப் கேரளா” என மாற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும், படத்தில் உள்ள சில நீதிமன்ற காட்சிகளில் வரும் மத உணர்வுகளை பாதிக்கக்கூடிய வசனங்களும் திருத்தி அமைக்கப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இப்படி சென்சார் வாரியத்தின் பேச்சுக்களை கேட்டு கடுப்பான படத்தின் தயாரிப்பு நிறுவனம், உயர்நீதிமன்றத்தில் இதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது. வழக்கின் விசாரணையின் போது, இரு தரப்பினரும் நீதிமன்றத்தில் தனது காரசாரமான வாதங்களை முன்வைத்தனர். சென்சார் வாரியத்தின் நிலைப்பாட்டை பேசிய வழக்கறிஞர், 'படத்தின் தலைப்பு மற்றும் கதாநாயகியின் பெயர் மத உணர்வுகளை புண்படுத்தக்கூடியதாக இருப்பதால் மாற்றம் அவசியம் என்றும், கண்டிப்பாக படத்தின் பல காட்சிகளை எடிட் செய்து நிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதனை அடுத்து,  தயாரிப்பு நிறுவனத்தின் தரப்பில் பேசிய வழக்கறிஞர் ஹாரிஸ் பீரன், " படத்தின் தலைப்பை சென்சார் வாரியம் பரிந்துரைத்தபடி மாற்ற தயாரிப்பு நிறுவனம் தயாராக உள்ளது. ஆனால் படத்தில் வரும் 96 காட்சிகளை எடிட் செய்து நிக்க வேண்டும் என சொல்கிறார்கள் அனைத்தையும் எடுத்தால் படத்தில் என்ன இருக்கும்? அதுமட்டுமல்லாமல் படத்தில் இரண்டு முக்கியமான காட்சிகளில் மட்டும் நீக்க நாங்கள் தயாராக உள்ளோம். மற்ற காட்சிகளில் கருத்துத் தாக்கங்கள் சற்று குறைவாகவே இருக்கின்றன" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: என்னை அவர் எப்படி ப்ரப்போஸ் செய்தார் தெரியுமா..! ஒருவழியாக காதலனை பற்றி ஓப்பனாக பேசிய நடிகை அனுஷ்கா..!

பின்பு இதனை ஏற்று கொண்ட சென்சார் வாரியமும் சமரசமாக முடிவெடுத்து படத்தின் 96 காட்சிகளுக்கு பதிலாக வெறும் 2 காட்சிகளை  மட்டுமே நீக்கட்டும் என நீதிமன்றத்தில் உறுதி செய்தனர். இதனை தொடர்ந்து, “ஜானகி vs. ஸ்டேட் ஆஃப் கேரளா” என்பது கதைமூலம் போல தெரிந்தாலும், தலைப்பில் பயன்படுத்தப்படும் பெயர் ஒரு புனிதப் பெண்ணின் அடையாளமாக பார்க்கப்படுவதால், தலைப்பை மாற்றும்படி கூறப்பட்டதை ஏற்று தயாரிப்பு நிறுவனமும் இதற்கு சம்மதித்துள்ளது. இப்படி இருக்க, தற்பொழுது படத்தின் பெயர் " வி. ஜானகி vs. கேரளா மாநிலம்" அல்லது "ஜானகி வி. vs. ஸ்டேட் ஆஃப் கேரளா" என புதிய பெயரில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ரசிகர்களிடம் ஒரு குழப்பத்தையும், அதேசமயம் ஒரு புதுவிதமான எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், படத்தின் வெளியீட்டு தேதி, புதிய தலைப்பு மற்றும் திருத்தப்பட்ட வடிவம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது போல இயற்கையான பெயர்கள் கூட மதவாதங்களால் கட்டுப்படுத்தப்படும் போது, படைப்புச் சுதந்திரம் எவ்வளவு நுணுக்கமான நிலைப்பாட்டில் உள்ளது என்பது உணர்த்தப்படுகிறது.

இதையும் படிங்க: விக்னேஷ் சிவனை விட்டு பிரியும் நயன்தாரா..! ஒரே பார்ட்டியில் தெளிவுப்படுத்திய தம்பதி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share