என்னை அவர் எப்படி ப்ரப்போஸ் செய்தார் தெரியுமா..! ஒருவழியாக காதலனை பற்றி ஓப்பனாக பேசிய நடிகை அனுஷ்கா..!
தனது நீண்ட நாள் காதலனை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார் நடிகை அனுஷ்கா ஷெட்டி.
தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை அனுஷ்கா ஷெட்டி, தனது அழகு, நடிப்பு, திறமை மற்றும் எளிமையான வாழ்க்கை முறையால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த இவர், அருந்ததி, பாகுபலி போன்ற விறுவிறுப்பான வெற்றி படங்களில் நடித்து புகழின் உச்சிக்குச் சென்றவர்.
இப்படிப்பட்ட அனுஷ்கா, கடந்த 2005-ம் ஆண்டு தமிழில் ‘ரெண்டு’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார், இதனை தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முக்கிய நடிகையாக வலம் வர ஆரம்பித்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ள அனுஷ்கா ‘காட்டி’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும், சில வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரைக்கு வந்து அனுஷ்கா நடித்துள்ள இந்தப் படம் ஒரு மிஸ்டரி டிராமாவாக உருவாகி உள்ளது. அவர் நடித்த கடைசி சில படங்கள் பலவாக வரவேற்ப்பை பெறாத நிலையில், காட்டி திரைப்படத்தின் வெற்றி, அனுஷ்காவின் திரை பயணத்திற்கு புதிய உயிர் கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: விக்னேஷ் சிவனை விட்டு பிரியும் நயன்தாரா..! ஒரே பார்ட்டியில் தெளிவுப்படுத்திய தம்பதி..!
சினிமா மட்டுமல்லாது அனைத்திலும் நேர்மையான அணுகு முறையை மட்டும் கடைப்பிடிக்கும் இவர், தனது தனிப்பட்ட வாழ்க்கையை குறித்து மக்களிடம் கூட வெளிப்படையாகப் பேசிவிடக் கூடாது என நினைப்பவர். அதனால் தான் அனுஷ்கா இதுவரை எந்தவிதமான கிசுகிசுவிலும் சிக்காமல் இருக்கிறார். இந்நிலையில் தற்போது, அனுஷ்கா தனது பள்ளி பருவத்தில் ஏற்பட்ட ஒரு இனிய காதல் அனுபவத்தை பகிர்ந்துள்ளார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் அவர் அளித்துள்ள பேட்டியில், " நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது என்னுடன் படித்த ஒரு மாணவன் என்னிடம் வந்து, ‘நான் உன்னை அதிகமாக காதலிக்கிறேன்’ என்று நேரடியாக சொன்னான்.
அவன் உண்மையிலேயே மிகவும் நியாயமான, அன்பான பையனாக என் கண்ணுக்கு தெரிந்தான். அப்போது ‘காதல்’ என்றால் என்னவென்று கூட எனக்கு தெரியாத வயசு என்றாலும் அவனிடம் ஒருவிதமான தனி ஈர்ப்பு இருந்தது. அதனால் அவனது காதலை நான் ஏற்றுக்கொண்டேன். இது கள்ளம் கபடம் இல்லாத உண்மை மனதோடு நிகழ்ந்த, உண்மையான காதல் நிகழ்வு. ஆதலால் எனக்கு எந்த சந்தேகமும் பயமும் அப்பொழுது இருக்கவில்லை. இன்று வரை அதை நினைத்தால் எனக்கு சிரிப்பு தான் வருகிறது" என நெகிழ்ந்து கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், அந்த பள்ளிப்பருவத்து காதல் எதையுமே எதிர்பார்க்காத, ஒரு நேர்மையான காதலாக இருந்தது. அந்த வயதில் அன்பு மட்டுமே முழுமையாக நிறைந்த மனதுடன் நாங்கள் பழகியது, பேசிக்கொண்டது என அனைத்தும் மிகவும் இனிமையானவையாக இருந்தது. ஆனால் சில வருடங்களுக்குப் பிறகு, காலமும் சூழ்நிலையும் மாறிவிட்டதால் எங்கள் தொடர்பும் அப்படியே மாறிவிட்டது. எனினும், அந்த நினைவு ஒரு பொக்கிஷமாகவே என் மனதில் ஆழமாக இருக்கிறது. வாழ்க்கையில் யாரும் மறக்க முடியாத சில தருணங்கள் இருக்கின்றன அல்லவா? அது தான் எனக்குள் உருவான அப்படி ஒரு தருணம்” என்றார்.
இதுவரை இப்படி அனுஷ்கா பேசி பார்த்திராத அவரது ரசிகர்கள், "பால்ய வயதில் ஏற்படும் அப்பழுக்கற்ற காதல் பற்றிய வலியை ஒரு பிரபல நடிகை இப்படிச் சிரித்து கொண்டே சொல்வதை பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக உள்ளது, தொடர்ந்து மக்களின் மனங்களை இப்படியே பேசி வெல்வதோடு மட்டுமல்லாமல் திரையுலகிலும் தன்னை மீண்டும் உறுதியாக நிலை நிறுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டுவரும் அனுஷ்கா ஷெட்டிக்கு வாழ்த்துக்கள்" என பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: என்ன மக்களே... இந்த வீக் எண்டை என்ஜாய் பண்ண தயாரா..!! ரிலீசாகும் பட லிஸ்ட் இதோ..!