என்ன மக்களே... இந்த வீக் எண்டை என்ஜாய் பண்ண தயாரா..!! ரிலீசாகும் பட லிஸ்ட் இதோ..!
இந்த வாரம் 8 திரைப்படங்கள் வெளியாவதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கதை களத்தில் புதுப்புது திரைப்படங்கள் வெளியாகி திரையரங்குகளில் சக்கை போடு போடுகின்றன. அந்த வகையில் இந்த வாரம் திரையரங்குகளில் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பிரீடம்: அந்த வகையில் நாளை (10.07.2025) "பிரீடம்" திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் அண்மையில் டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சசிகுமார் பீரிடம் படத்தில் நடித்துள்ளார். சத்யசிவா இயக்கி உள்ள இப்படத்தில் லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். தவறே செய்யாமல் இலங்கை அகதிகளாக சிறைச்சாலையில் சிக்கிக்கொண்ட இருவர் தப்பித்து செல்வதுப் போன்ற கதைக்களத்தில் இப்படம் அமைந்துள்ளது.
இதையும் படிங்க: #BREAKING காலையிலேயே பரபரப்பு... பிரபல நடிகை வீட்டில் அமலாக்கத்துறை சோதனை...!
சூப்பர் மேன்: வருகிற 11ம் தேதி 'சூப்பர்மேன்' படம் வெளியாகிறது. 3டி மற்றும் ஐமேக் தொழில்நுட்பத்தில் தமிழிலும் வெளியாகிறது. மார்வெல் நிறுவனத்தின் டி.சி.யின் முதன்மையான கதாபாத்திரமாக இருப்பது சூப்பர்மேன் கதாபாத்திரம். தற்போது வெளியாக உள்ள படத்தில் டேவிட் கரன்ஸ்வெட் சூப்பர் மேனாக நடித்திருக்கிறார். அவரை எதிர்க்கும் லெக்ஸ் லூதர் கதாபாத்திரத்தில், நிகோலஸ் ஹோல்ட் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கான கதையை எழுதி இயக்கி இருக்கிறார், ஜேம்ஸ் கன். இந்த படம் பல பாகங்களாக வெளிவர இருப்பதாகவும், தற்போது வெளியாவது இதன் முதல் பாகம் என்றும் கூறப்படுகிறது.
ஓஹோ எந்தன் பேபி: ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் பெருமையுடன் தயாரித்து வழங்கும் ரொமாண்டிக் எண்டர்டெய்னர் திரைப்படம் தான் 'ஓஹோ எந்தன் பேபி' இன் அசோசியேஷன் வித் குட் ஷோ. இப்படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கி இருக்க நடிகரும், தயாரிப்பாளருமான விஷ்ணு விஷாலின் இளைய சகோதரர் ருத்ரா கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்த படம் ஜூலை 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
தேசிங்குராஜா 2: ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘பூவேல்லாம் உன் வாசம்’, ‘தீபாவளி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய எழில் இயக்கத்தில் கடந்த 2013-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது நடிகர் விமலின் ‘தேசிங்கு ராஜா’. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. இந்தப் படத்தையும் எழிலே இயக்கியுள்ளார். விமல், பூஜிதா, விமல், ரவி மரியா, சிங்கம் பூலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் ஜூலை 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
மாயக்கூத்து: அறிமுக இயக்குனர் ஏ.ஆர்.ராகவேந்திரா இயக்கத்தில் நாகராஜன் கண்ணன், காயத்ரி, ஐஸ்வர்யா ரகுபதி உட்பட பலர் நடித்த படம் 'மாயக்கூத்து'. ஒரு எழுத்தாளர் தொடர்கதை எழுதுகிறார். அந்த கதையில் வரும் கதாபாத்திரங்கள் திடீரென உயிர் பெற்று, அந்த எழுத்தாளரின் வீடு தேடி வருகின்றன. தொடர்ந்து அந்த கற்பனை கதை கேரக்டர்கள், எழுத்தாளரை துரத்துகின்றன. அடுத்து என்ன நடக்கிறது என்பது மாயக்கூத்து கதை. மேலும் இந்த படத்தில் மறைந்த நடிகர் டில்லிகணேஷ் பத்திரிகை எடிட்டர், பப்ளிஷர் ஆக வருகிறார். இந்த படம் ஜூலை 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
ஓ பாமா அய்யோ ராமா: பிரபல தெலுங்கு நடிகரான சுஹாஸ், தற்போது "ஓ பாமா அய்யோ ராமா" என்ற படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குனர் ராம் கோதலா இயக்கும் இப்படத்தில் மாளவிகா மனோஜ் கதாநாயகியாக நடிக்கிறார். இவர் தமிழில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான 'ஜோ' படத்தில் நடித்து பிரபலமானவர். "ஓ பாமா அய்யோ ராமா" படத்தின் மூலம் மாளவிகா தெலுங்கில் அறிமுகமாகிறார். வி ஆர்ட்ஸ் பேனரில் ஹரிஷ் நல்லா தயாரித்துள்ள இப்படத்தை ராணா டகுபதியின் ஸ்பிரிட் மீடியா விநியோகம் செய்கிறது. இந்த படம் ஜூலை 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர்: ஜூலை 11ந் தேதி வெளியாக உள்ள மற்றொரு திரைப்படம் Mrs and Mr. இப்படத்தை பிக்பாஸ் பிரபலம் ஜோவிகா தயாரிக்க, வனிதா விஜயகுமார் தான் இயக்கி உள்ளார். இப்படத்தில் கதாநாயகனாக ராபர்ட் மாஸ்டரும், கதாநாயகியாக வனிதா விஜயகுமாரும் நடித்துள்ளனர். மேலும் கிரண் ரத்தோடு, ஸ்ரீமன், ஷகீலா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்து உள்ளார். இப்படத்திற்கு சென்சாரில் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. இப்படத்தில் முன்னாள் காதலர்களான வனிதாவும், ராபர்ட் மாஸ்டரும் இணைந்து நடித்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
சூத்ரவாக்யம்: மலையாள திரையுலகில் பிரபல வில்லன் நடிகராக நடித்து வருபவர் நடிகர் ஷைன் டாம் சாக்கோ. தமிழில் 'பீஸ்ட், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் ஷைன் டாம் சாக்கோ உடன் வின்சி அலாசியஸ் நடித்த ‘சூத்ரவாக்யம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது. யூஜின் ஜோஸ் சிரம்மள் இயக்கியுள்ள இப்படம் வரும் 11ஆம் தேதியன்று தியேட்டர்களில் வெளியாகிறது.
இதையும் படிங்க: மஞ்சும்மல் பாய்ஸ் நடிகர் அதிரடி கைது.. என்ன செய்தார் தெரியுமா? வெளியான முக்கிய தகவல்!!