×
 

இயக்குநர் அட்லீ படத்தில் கேமியோ பண்ணுறது இவராம்-ல..! ஆனா இது புதுசா இருக்கண்ணே..!

நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து இயக்குநர் அட்லீ இயக்கும் புதிய படத்தின் கேமியோ ரோலில் பிரபல நடிகர் ஒருவர் இடம்பெற்று இருக்கிறார்.

புஷ்பா 2 திரைப்படத்தின் மெகா வெற்றிக்குப் பிறகு, தெலுங்கு சினிமாவின் ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன் தனது அடுத்த படத்திற்காக தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான அட்லீயுடன் கை கோர்த்துள்ளார். இந்த கூட்டணி அறிவிக்கப்பட்ட தருணம் முதலே தெற்காசிய சினிமா உலகமே பரபரப்பாக உள்ளது. இப்படம் இந்திய சினிமாவின் மிகப்பெரிய ப்ராஜெக்டுகளுள் ஒன்றாக அமைந்து வருகிறது என்பதற்கான அறிகுறிகள் நாளுக்கு நாள் வலுத்து வருகின்றன. இப்படி இருக்க ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த 'ஜவான்' திரைப்படம், இந்திய பாக்ஸ் ஆஃபிஸ் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக இருந்தது.

குறிப்பாக ரூ.1,100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த அந்தப் படம், அட்லீயின் இயக்கத்திறனையும், ஹிந்தி சினிமாவில் அவரின் மார்க்கெட்டையும் உறுதிப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, அவர் இயக்கும் அடுத்த ப்ராஜெக்ட் பற்றி மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது. அதற்கான பதில் தற்போது வெளியாகியுள்ளது..இந்த மாஸ் கூட்டணிக்குப் பின்னால் நிற்கும் நிறுவனம் என்றால் சன் பிக்சர்ஸ் தான். 'பேட்ட', 'அண்ணாத்த', 'ஜெய் பீம்', 'லியோ','கூலி','ஜெயிலர்' போன்ற ஹிட் படங்களை தயாரித்த இந்த நிறுவனம், தற்போது அல்லு அர்ஜுன் மற்றும் அட்லீ கூட்டணியில் உருவாகும் புதிய படத்திற்காக ரூ.600 கோடி பட்ஜெட்டை ஒதுக்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம், இது இந்திய சினிமாவின் உயர்பட்ஜெட் திரைப்படங்களில் ஒன்றாக அமையும். இது ஒரு பான்-இந்திய திரைப்படமாக மட்டுமல்ல, பான்-வேர்ல்ட் ரீச்சுடன் உருவாக்கப்படும் படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த படத்தின் ஹீரோயின் தேர்வு இப்போது மிகப்பெரிய விவாதமாக உள்ளது. முதலில், தீபிகா படுகோனே இந்தப் படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியானது. அதனைத் தொடர்ந்து, மிருணாள் தாகூர், ஜான்வி கபூர், ராஷ்மிகா மந்தனா, மற்றும் பாக்யஸ்ரீ ப்ரோஸ் ஆகியோர் உட்பட பல முன்னணி நடிகைகளுடன் இயக்குநர் தரப்பில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக ஒவ்வொரு நடிகையும் நேரில் சந்தித்து, கதையின் தாக்கம் மற்றும் வேடத்தின் முக்கியத்துவம் பற்றி விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. மல்டிபிள் ஹீரோயின்கள் உள்ள படமாக இது உருவாகக்கூடும் என்கிற அபாயங்களும், சந்தோஷங்களும் ரசிகர்கள் மத்தியில் ஒரே நேரத்தில் இருக்கின்றன.

இப்படி இருக்க 'ஜவான்' படத்தில் வில்லனாக மாபெரும் அசத்தலுடன் நடித்த விஜய் சேதுபதி, இப்போது அல்லு அர்ஜுன் மற்றும் அட்லீ கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் கேமியோ ரோல் ஒன்றில் நடிக்கவுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவுகின்றன. அதிகாரபூர்வ உறுதி இல்லை என்றாலும், ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரங்களில் இந்த செய்தி காட்டுதீ போல பரவியுள்ளது. விஜய் சேதுபதி மற்றும் அட்லீ கூட்டணி மீண்டும் இணைவது, அதுவும் அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடிப்பது, ஒரு சக்திவாய்ந்த மாஸ் காம்போவாக இருக்கும். இந்த படத்தின் கதைக்களம் பற்றி தற்போது வரை முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால், இந்திய சினிமாவில் இதுபோன்ற கதைக்களம் வந்ததே இல்லையென்கிறார்கள். ஹாலிவுட் நுணுக்கங்களை அடிப்படையாக வைத்து, மிகபெரிய அளவில் சமூக அரசியல், வான்வழிப் போக்குவரத்து, ரோபோடிக்ஸ், க்ரைம் சைக்காலஜி ஆகியவற்றை இணைக்கும் வகையில் ஸ்கிரிப்ட் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்துக்காக ஹாலிவுட் தொழில்நுட்பக் கலைஞர்களை அட்லீ நேரில் சந்தித்து, ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளதாக சில தகவல்கள் உறுதி செய்கின்றன. இதில் VFX, Action Design, Motion Capture Technology உள்ளிட்டவை இடம் பெறும் எனக் கூறப்படுகிறது. இப்படியாக இது ஒரு பான்-வேர்ல்ட் ரிலீஸ் என கூறப்படுகிறது. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் ஒரே நேரத்தில் 12 மொழிகளில் இப்படம் வெளியாகும். இதில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், மராத்தி, ஆங்கிலம், சீனம், ஜப்பானீஸ், ரஷ்யன் உள்ளிட்ட மொழிகளில் இப்படம் டப் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: பைக்கு பறக்குது.. சண்டை காட்சிகள் தெறிக்கிது..! அனுஷ்காவின் 'காதி' படத்தின் செகண்ட் சிங்கிள் கலக்குது போங்க..!

இப்படியாக 2026 மே அல்லது ஆகஸ்ட் மாதத்தில் படம் ரிலீஸாவதற்கான திட்டம் தயாரிப்பு தரப்பில் வகுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு 2025 டிசம்பர் மாதத்தில் துவங்கும் என தகவல். மேலும் சன் பிக்சர்ஸ் மற்றும் அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் புதிய படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு, செப்டம்பர் மாதம், அல்லு அர்ஜுனின் பிறந்த நாளுக்கே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான டீசர் அல்லது மோஷன் போஸ்டர் வெளியீடு வரும் வாரங்களில் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. ஆகவே இந்திய சினிமாவில் மிகப்பெரிய கூட்டணிகளும், மிகப்பெரிய பட்ஜெட்டுகளும் புதிதல்ல. ஆனால், இதில் உள்ள பட்ஜெட், ஹீரோக்கள், ஹீரோயின்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், ரிலீஸ் திட்டம் உள்ளிட்ட அனைத்தும் சேர்ந்து, இது ஒரு பான்-இந்தியாவை தாண்டிய பான்-ஹிஸ்டரி திரைப்படமாக மாறும் என பலரும் நம்புகின்றனர்.

அதிலும் அல்லு அர்ஜுனின் மாஸ் மற்றும் கிரேஸ், அட்லீயின் எமோஷனல் மற்றும் ஆக்ஷன் பிளேனிங், சன் பிக்சர்ஸின் தனிப்பட்ட ஹவுஸ் ஸ்டைல், ஹாலிவுட் டெக் டீமின் வெளிச்சம் என இவை எல்லாம் சேர்ந்தால், இது இந்திய சினிமாவின் Game Changer ஆக மாறும் என்பது நிச்சயம் உறுதி.

இதையும் படிங்க: நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ.. ட்ரீட்மெண்ட் ஓவர்.. இனி ஃபுல்லா சினிமா தான்.. காம்பேக் கொடுத்த மம்முட்டி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share