×
 

தமிழ்-ல தான் ஜெயிக்கல.. ஆனா இங்கு விடமாட்டேன்...! தெலுங்கு பிக்பாஸில் அடியெடுத்து வைத்த நடிகை ஆயிஷா..!

நடிகை ஆயிஷா, தமிழை தொடர்ந்து தெலுங்கு பிக்பாஸில் அடியெடுத்து வைத்துள்ளார்.

இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோவாக திகழ்வது “பிக் பாஸ்”. இதன் கான்செப்ட் - ஒரு வீட்டில் சிலர் அடைக்கப்பட்டு, வெளி உலகத்துடன் எந்த தொடர்பும் இல்லாமல் 100 நாட்கள் வாழ வேண்டும் என்பது தான். அந்த வீட்டில் போட்டியாளர்களின் நடத்தை, உறவு, மனஅழுத்தம், வாக்குவாதம், நட்பு மற்றும் நிஜ மனிதப் பழக்கங்கள் ஆகியவை பார்வையாளர்களுக்கு முன் வெளிப்படுகின்றன. இந்த நிகழ்ச்சி முதலில் ஹிந்தியில் தொடங்கி, பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் பிரபலமானது.

இப்படி இருக்க பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, நடிகை ஆயிஷா பெரும் ரசிகர் ஆதரவைப் பெற்றார். தொடக்கத்தில் மெதுவாக இருந்தாலும், அவரின் சாமர்த்தியமான பேச்சு, உண்மையான வெளிப்பாடு, அழகான மனநிலை ஆகியவை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. அவர் சீரியல் நடிகையாக இருந்தபோதும், பிக் பாஸ் வீட்டில் தன்னுடைய தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியவர். பலரும் அவரை “கலர் ஆயிஷா” என்று அன்புடன் அழைத்தனர். அவர் பிக் பாஸ் வீட்டில் காட்டிய தெளிவான சிந்தனை, உண்மையான உணர்வு, எதையும் நேர்மையாக சொல்லும் குணம் அவரை ரசிகர்களிடையே பிரபலமாக்கியது. இப்படியாக தெலுங்கு பிக் பாஸ் தற்போது தனது 9வது சீசனில் வெகுவாக ஒளிபரப்பாகி வருகிறது. இதை வழக்கம்போல நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்குகிறார். மொத்தம் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசன், பல திருப்பங்களால் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்நிலையில், நிகழ்ச்சிக்கு மேலும் ஒரு சுவாரசியமான மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், புதிய வைல்ட் கார்டு போட்டியாளர்கள் வீட்டிற்குள் நுழைகின்றனர்.

சமீபத்திய எபிசோடில், ஆயிஷா தெலுங்கு பிக் பாஸ் 9 வீட்டுக்குள் நுழைந்தார். அவர் இந்த சீசனின் ஐந்தாவது வைல்ட் கார்டு எண்ட்ரி போட்டியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரது நுழைவுடன் வீட்டு உறுப்பினர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். பலரும் அவரை வரவேற்று, “நீங்கள் தமிழ் பிக் பாஸ் ஆயிஷாவா?” என்று ஆர்வமாக கேட்டனர். அவர் நுழைந்த தருணம் முதல் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பெரும் உற்சாகத்துடன் பதிவுகளைப் பகிர்ந்தனர். வீட்டுக்குள் நுழைந்தபோது பேசிய ஆயிஷா, “நான் பிக் பாஸ் குடும்பத்தை மிகவும் நேசிக்கிறேன். தமிழ் பிக் பாஸில் இருந்த அனுபவம் என்னை பலமாக்கியது.

இதையும் படிங்க: மிரளவைக்கும் விமலின் 'மகாசேனா'..! அதிரடியாக வெளியானது படத்தின் பர்ஸ்ட் லுக்..!

இப்போது தெலுங்கு பிக் பாஸில் ஒரு புதிய பயணம் ஆரம்பிக்கிறேன். நான் என் இயல்பாகவே இருப்பேன். எதையும் போலியாகச் செய்ய மாட்டேன்” என்றார். இந்த வீட்டில் இருந்த போட்டியாளர்கள் ஆயிஷாவை ஆர்வத்துடன் வரவேற்றனர். இப்படி இருக்க தமிழ் ரசிகர்களும், தெலுங்கு ரசிகர்களும் இணைந்து சமூக வலைதளங்களில் ஆயிஷாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். தெலுங்கு தொலைக்காட்சி வட்டாரங்களில் வரும் தகவலின்படி, ஆயிஷா பிக் பாஸ் வீட்டில் நுழைந்தவுடன், ஷோவின் ரேட்டிங் உயர்ந்துள்ளது. புதிய போட்டியாளராக அவர் வருவது நிகழ்ச்சிக்கு புதிய உயிர் அளிக்கிறது என்று தயாரிப்புக் குழுவினர் கூறியுள்ளனர். தெலுங்கு பிக் பாஸ் 9 நிகழ்ச்சியில் இதுவரை பல சண்டைகள், வாக்குவாதங்கள், கூட்டணிகள் நடந்துள்ளன.

ஆயிஷாவின் நுழைவு இதனை சமநிலைப்படுத்தும் என தயாரிப்பு குழு நம்புகிறது. அவர் ஒரு மெச்சூர் மற்றும் அனுபவமிக்க பிக் பாஸ் பங்கேற்பாளர் என்பதால், வீட்டுக்குள் புதிய அமைதியை உருவாக்குவார் என்று கூறப்படுகிறது. ஆயிஷா முதலில் விஜய் டிவியின் “சவுந்தர்யா” மற்றும் “சவால் சம்பத்” போன்ற தொடர்களில் நடித்தவர். பின்னர் “சத்யா” என்ற தொடர் அவருக்கு மிகப்பெரிய புகழைத் தந்தது. அந்த தொடரில் அவர் ஒரு வலுவான பெண்ணாக நடித்ததற்காக பல விருதுகளும் பெற்றார். அதன் பின் அவர் பிக் பாஸ் தமிழ் சீசன் 6-ல் பங்கேற்றார் பின் அதுவே அவரை மக்களின் மனதில் அறிமுகப்படுத்திய முக்கிய திருப்பமாக அமைந்தது. மேலும் அவரது நுழைவுடன் வீட்டில் புதிய மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னணி போட்டியாளர்கள் சிலர் இதை ஒரு சவாலாக எடுத்துள்ளனர்.

ஆகவே தமிழ் பிக் பாஸில் ரசிகர்களின் இதயத்தை வென்ற ஆயிஷா, இப்போது தெலுங்கு பிக் பாஸ் 9-ல் நுழைந்து இரு மொழி ரசிகர்களையும் ஒன்றிணைத்திருக்கிறார். அவரது இயல்பான குணம், உண்மையான வெளிப்பாடு, மனஅழுத்தத்தை சமாளிக்கும் திறன் ஆகியவை, இந்த சீசனில் அவரை முன்னணி போட்டியாளராக உயர்த்தும் என்பதில் ரசிகர்களுக்கு நம்பிக்கை அதிகம். நிச்சயமாக, ஆயிஷாவின் இந்த புதிய பயணம், தென்னிந்திய பிக் பாஸ் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாகப் போகிறது.

இதையும் படிங்க: உழைப்பெல்லாம் வீனா போச்சே..! “காந்தாரா” படக்காட்சியில் சிக்கிய தண்ணீர் கேன்..கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share