திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த நடிகை பிந்து மாதவி..! ரீ-என்ட்ரி கொடுப்பதால் உற்ச்சாகத்தில் ரசிகர்கள்..!
பிளாக்மெயில் படம் மூலமாக மீண்டும் தமிழ் சினிமாவில் நடிகை பிந்து மாதவி களமிறங்குகிறார்.
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிய நடிகை என்றால் அவர் தான் பிந்து மாதவி. ஆரம்பத்தில் தொடர் படங்களில் நடித்து வந்த போதிலும், பின்னாளில் ஆண்டுக்கு ஒரு சில படங்களில் மட்டுமே தோன்றி வந்தார். பல முன்னணி நடிகைகளுடன் இணைந்து நடித்திருந்தாலும், நீண்ட காலமாக பிந்து மாதவி சரியான கதாபாத்திரத்துக்காக காத்திருந்தார் என்பதே உண்மை. அதற்கிடையில், சில வருட இடைவெளிக்கு பிறகு, அவர் நடித்த ‘கழுகு 2’ படம் திரைக்கு வந்தது. அதன் பின், கடந்த ஆண்டு வெளியான ‘மாயன்’ திரைப்படத்தில் அவர் மீண்டும் நடிப்பின் மூலமாக ரசிகர்களை சந்தித்திருந்தார்.
தற்போது அவர் ‘யாருக்கும் அஞ்சேல்’ மற்றும் ‘பகைவனுக்கு அருள்வாய்’ எனும் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், பிந்து மாதவி நடித்திருக்கும் அடுத்த திரைப்படமாக ‘பிளாக்மெயில்’ திரைக்கதை ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இதில் அவர், கதாநாயக இல்லாமல் இருந்தாலும், ஒரு முக்கியமான அனைவரும் எதிர்ப்பார்த்த சவாலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், தேஜு அஸ்வினி ஆகியோர் கதாநாயகன் மற்றும் கதாநாயகியாக நடித்துள்ளனர். படத்தை மு.மாறன் இயக்கியுள்ளார். முன்னதாக ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘கண்ணை நம்பாதே’ போன்ற சஸ்பென்ஸ் திரில்லர் படங்களை இயக்கிய மு.மாறன் இந்த படத்தையும் பயங்கரமாக இயக்கி இருக்கிறார்.
இப்படி இருக்க ‘பிளாக்மெயில்’ படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து பேசிய பிந்து மாதவி, " பெண்கள் தங்களுக்குரிய தனிப்பட்ட இடத்தைப் பெறுவது என்பது எப்போதுமே ஒரு சவாலான விஷயம் தான். இன்றும் அந்தப் போராட்டம் தொடர்கிறது. ஆனால் இயக்குநர் மு.மாறன், பிளாக்மெயில் படத்தின் கதையை எனக்கு முதன் முறையாக விவரித்த போது, அது என் மனதோடு உடனடியாக ஒரு இணைப்பை ஏற்படுத்தியது. இந்த கதாபாத்திரம் நிச்சயமாக எனக்காகவே காத்திருந்தது என நான் உணர்ந்தேன். உணர்வும் ஆழமும் கலந்த அந்த பாத்திரம் எனக்கு பெரும் பொறுப்பையும் தந்தது" என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கதாநாயகனாக அறிமுகமாகும் அபிஷன் ஜீவிந்த்..! 'டூரிஸ்ட் ஃபேமிலி' பட இயக்குநருக்கு அடித்த ஜாக்பாட்..!
மேலும் ‘பிளாக்மெயில்’ படத்தின் மையக் கதையில் பிந்து மாதவி நடிக்கும் கதாப்பாத்திரம் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இதில் அவர் மட்டும் அல்லாமல் பல முக்கியமான நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள காட்சிகள், கதையின் தன்மையை மேலும் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் " ஜி.வி.பிரகாஷ் குமார் போன்ற அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகருடன் பணியாற்றிய அனுபவம் எனக்குப் பெரிய பாடமாக இருந்தது. அவருடைய நடிப்புத்திறமை, ஒவ்வொரு காட்சியிலும் என்னை மேலும் சிறந்து நடிக்க தூண்டியது. தேஜு அஸ்வினி, ஸ்ரீகாந்த் மற்றும் மற்ற நடிகர்களுடன் பணியாற்றிய அனுபவமும் இனிமையானது" என்றும் பிந்து மாதவி தெரிவித்தார். இப்படி இருக்க ‘பிளாக்மெயில்’ திரைப்படம் பெண்கள் எதிர்கொள்ளும் உண்மையான சவால்கள், சமூக கட்டுப்பாடுகள், மற்றும் நவீன வாழ்க்கையின் ஒழுங்கற்ற சூழலில் ஒரு பெண்ணின் உணர்வுப் பயணம் என அனைத்தையும் வெளிப்படுத்தும் படமாக உருவாகியுள்ளதாகத் தெரிகிறது. இப்படம் வெறும் ஒரு சஸ்பென்ஸ் அல்லது திரில்லர் கதையல்ல, உணர்ச்சிகரமான சமூகக் கோணங்களையும் உள்ளடக்கிய படமாக தெரிகிறது. மொத்தத்தில் ‘பிளாக்மெயில்’ படத்தில் பிந்து மாதவி நடித்துள்ள கதாபாத்திரம், பெண்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் ஒரு முக்கியக் கோணமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஒரு அழுத்தமான சமூக கருத்துடன் கூடிய கதையில் முக்கிய பங்காற்றும் வாய்ப்பு, பிந்து மாதவிக்கு மீண்டும் கிடைத்துள்ளது. அவருடைய நடிப்பு இந்த படத்தின் மூலம் மேலும் பேசப்படும் என்பதற்கான எல்லா அடையாளங்களும் இப்பொழுதுதே தெரிகிறது.
இதையும் படிங்க: ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவான ‘பிளாக்மெயில்’..! வெளியீட்டை தள்ளிப்போட்ட படக்குழு..!