பாலிவுட் உலகில் பரபரப்பை ஏற்படுத்திய மிருணாள் தாகூர்..! பதிலடி கொடுத்த நடிகை பிபாஷா பாசு..!
நடிகை பிபாஷா பாசுவின் உடலமைப்பை தவறாக பேசிய மிருணாள் தாகூருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இந்தி மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக திகழும் மிருணாள் தாகூர், சமீப காலங்களில் தமிழ்த் திரையுலகிலும் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளார். குறிப்பாக, நடிகர் தனுஷ் உடன் நடித்துள்ள புதிய காதல் திரைப்படம் மற்றும் அவரைச் சுற்றியுள்ள ரூமர்கள் மூலம், அவரது பெயர் தற்போது நாடெங்கும் பிரபலமாகியுள்ளது. ஆனால் இப்போது, மிருணாள் தாகூர் பேசாமல் இருந்தால் சரி என்ற நிலையில் உள்ளார். காரணம், சமூகவலைதளத்தில் வைரலாகி வரும் ஒரு பழைய வீடியோ மூலம், அவர் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இந்த விவகாரம், மிருணாள் தாகூர் பேசியதாக கூறப்படும் ஒரு வீடியோவை சுற்றித்தான் உருவானது. அந்த வீடியோவில், மிருணாள், முன்னணி பாலிவுட் நடிகையுமான பிபாஷா பாசுவின் உடலமைப்பை பற்றி பேசும் விதமாக இருக்கிறது. அதில் "பிபாஷா பாசு ஆண்களைப் போல தசைகளைக் கொண்டிருக்கிறார். அவரைவிட நான் மென்மையான பெண். நான் தான் நல்லவள், அழகாகவும் இருக்கிறேன்"என பேசி இருக்கிறார். இது தனிப்பட்ட பேச்சு வாயிலாகவே பதிவாகியிருந்தாலும், சமீபத்தில் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு, வைரலானது. இதைத் தொடர்ந்து, மிருணாள் தாகூர் மீது சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் எழ ஆரம்பித்தன. இந்த வீடியோ இணையத்தில் பரவியதும், பல பாலிவுட் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். பிபாஷா பாசு, தனது திட உடற்கட்டும், ஃபிட்னஸ் அடிப்படையிலான வாழ்க்கை முறையால் பலருக்கு இன்ஸபிரேஷன் அளித்தவர். குறிப்பாக பெண்களுக்கு உடற்திறன் வளர்ச்சி குறித்து நெகட்டிவாகப் பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாது என்று பலரும் கருத்து தெரிவித்தனர். இதற்கிடையில், பிபாஷா பாசு தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். இதில் அவர் நேரடியாக பெயர் குறிப்பிடாமல், ஆனால் அனைவருக்கும் புரிந்துவிடும் வகையில், மிகப் பொருத்தமான பதிலைத் தந்துள்ளார்.
அதன்படி அதில், "வலிமையான பெண்கள் மற்றவர்களை உயர்த்திச் செல்பவர்கள். அழகான பெண்களே, உங்கள் தசைகளை உறுதியாக்குங்கள். உங்கள் வலிமை உங்கள் பெண்மையை குறைக்கும் அழகல்ல. பெண்கள் உடல் ரீதியாக வலிமையாக இருக்கக் கூடாது என்ற முட்டாள் தனமான சிந்தனையை மாற்றி விடுங்கள்" என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. வாழ்த்தும், ஆதரிக்கும், உற்சாகப்படுத்தும் கருத்துக்களுடன் பிபாஷாவின் இந்த பதில் திரைப் பிரபலங்கள் மத்தியில் பெரும் பரவலுக்கு உள்ளாகியுள்ளது. மேலும், பல பெண்கள் இந்த கருத்துக்களை தங்களுடைய பக்கங்களிலும் ஷேர் செய்து, “உண்மையான பெண் பவர்லை பேசுகிறார்” என பேசியிருக்கிறார். இந்த நிலையில், மிருணாள் தாகூர் இந்நிகழ்வை பற்றியெதும் அதிகாரபூர்வமான விளக்கத்தைக் கொடுத்திருக்கவில்லை. அவரது பேச்சு எப்போதும், எந்த சூழ்நிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது, அது உண்மையா இல்லையா என்பது பற்றியும் அவர் எந்த விதமான பதிலும் அளிக்கவில்லை. இதனால் அவரது மௌனம் இன்னும் குற்றச்சாட்டை உறுதி செய்வதுபோல் சமூகத்தில் தோன்றுகிறது. இந்த விவகாரம் ஒரு தனிப்பட்ட கருத்து சர்ச்சையாக தோன்றினாலும், பாலிவுட் வட்டாரத்தில் இது பெண்கள் உடற்திறன், அழகு மீதான பார்வை மற்றும் பெண்ணியம் தொடர்பான முக்கியமான விவாதத்துக்கான வாசல் ஆக மாறியுள்ளது. பல பிரபல நடிகைகள், மாடல்ஸ் மற்றும் ஃபிட்னஸ் இன்ஃப்ளூயன்சர்கள் பிபாஷா பாசுவின் பதிவை பகிர்ந்து அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கல்யாணம் செய்ய தடையாக இருப்பது இது தான்..! நடிகை மிருணாள் தாகூரின் பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
அதன்படி தியா மிர்ஸா,“பெண்கள் தங்கள் உடலை எப்படி வடிவமைக்கிறார்கள் என்பது அவர்களது சொந்த விருப்பம். அதை விமர்சிக்கும் உரிமை யாருக்கும் இல்லை” என பதிவிட்டு இருகிறார். இந்த நிலையில் மிருணாள் தாகூர் பேசியதாக கூறப்படும் வீடியோ தற்போது பாலிவுட் திரைத்துறையில் ஒரு வலுக்கும் விவாதமாக மாறியுள்ளது. பிபாஷா பாசு தனது பதிலில் தன்னை உயர்த்தியும், மற்ற பெண்களுக்கும் ஒளி காட்டியும் நடித்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றாலும், மிருணாளின் மௌனம் சந்தேகங்களை அதிகரிக்கிறது. இன்னும் இது தொடர்பான மேலதிக விளக்கங்கள் வரும் நாள்களில் வெளியாகுமா, அல்லது ஒரு வார்த்தையில்லாமல் இந்த விவகாரம் அடங்கி விடுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.
ஆனால் ஒன்று உறுதி.. பாலிவுட் நடிகைகளின் இடையே அழகு மற்றும் வலிமையைப் பற்றிய கருத்துப்போர்கள் இன்னும் நீடிக்கப் போகின்றன.
இதையும் படிங்க: கல்யாணம் செய்ய தடையாக இருப்பது இது தான்..! நடிகை மிருணாள் தாகூரின் பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!