×
 

கல்யாணம் செய்ய தடையாக இருப்பது இது தான்..! நடிகை மிருணாள் தாகூரின் பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

நடிகை மிருணாள் தாகூர் திருமணம் குறித்த தனது ஆசைகளை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இந்திய சினிமாவில் பல மொழிகளில் வெளியான படங்களில் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர் தான் நடிகை மிருணாள் தாகூர். ஆரம்பத்தில் ஹிந்தி சீரியல்கள் வழியாக திரைத்துறையில் அறிமுகமான இவர், பின்னர் பாலிவுட் மற்றும் தெலுங்கு திரையுலகில் மிகுந்த வரவேற்பைப் பெற்றவர். இன்று, அவர் இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். பாலிவுட்டில் பல வெற்றிப்படங்களில் நடித்த மிருணாள், தெலுங்கு திரையுலகில் "சீதாராமம்" படம் மூலம் ரசிகர்களின் மனதில் ஒரு தனி இடத்தை பிடித்தார்.

அதில், சீதா மகாலட்சுமியாக தனது மென்மையான, உணர்வுப்பூர்வமான நடிப்பால் பாராட்டுகள் பெற்றார். அதன் பிறகு, "ஹாய் நன்னா", "பேமிலி ஸ்டார்" போன்ற வெற்றிப் படங்கள் அவரை தெலுங்கு ரசிகர்களிடையே அதிகமான கவனத்தை பெற செய்தது. இப்படி இருக்க, தற்போது மிருணாள் தாகூர், அதிவி சேஷ் ஹீரோவாக நடித்துவரும் "டகோயிட்" படத்தில் முக்கிய கதாபாத்திரர்த்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்தப் படம், திரில்லர் மற்றும் ஆக்‌ஷன் கலந்த ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்படுகிறது என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அதோடு, இவர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அஜய் தேவ்கன் உடன் இணைந்து நடித்துள்ள "சன் ஆப் சர்தார் 2" படமும் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் வெளியீட்டிற்கு முன்பாக, படக்குழுவினர் மிகுந்த பிரமாண்ட அளவிலான ப்ரமோஷன் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

இந்நிகழ்வுகளில் ஒன்று சமீபத்தில் நடைபெற்றது, அதில் கலந்துகொண்ட நடிகை மிருணாள் தாகூர், ரசிகர்களுடன் பேசும் போது தனது தனிப்பட்ட வாழ்க்கை, திருமணம் மற்றும் குடும்பம் குறித்த சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதன்படி அவர் பேசுகையில், " நான் சிறுவயதில் இருந்தே திருமணம் செய்து கொண்டு தாயாக மாற வேண்டும் என்ற கனவுடன் இருந்தவள். ஒரு குடும்பம், ஒரு குழந்தை எனும் எண்ணம் எனக்குள் நீண்ட நாட்களாக இருந்து வந்தது. ஆனால் இப்போது, என் முழு கவனமும் என் சினிமா வாழ்க்கையிலும், எனது காதாபாத்திரங்களிலும் தான் அதிகம் உள்ளது. நான் செய்ய வேண்டிய பல வேலைகள் இன்னும் உள்ளன. எனது திறமையை முழுமையாக வெளிப்படுத்த விரும்புகிறேன்.. அதுமட்டுமல்லாமல் நான் திருமணம் செய்யும் அந்த நாள் எப்போது வரும் என்று தெரியவில்லை, ஆனால் அந்த நிகழ்வு கண்டிப்பாக ஒருநாள் வரும். ஆனால் இப்போதைக்கு என் வேலை, என் வளர்ச்சி, என் பயணம் என்பன மீது தான் என் முழு அக்கறையும் கவனத்தையும் செலுத்தி வருகிறேன்.. பார்க்கலாம்" என்று அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'ராமாயணம்' படத்தில் ஊர்மிளாவாக களமிறங்கும் சுரபிதாஸ்..! படப்பிடிப்பு அனுபவித்தை பகிர்ந்து உற்சாகம்..!

மேலும் மிருணாள் தாகூரின் இந்த நேர்மையான பேச்சு, அவரின் ரசிகர்களிடையே அவர் மீதான மரியாதையை மேலும் உயர்த்தி உள்ளது. அதிலும், இவரது இந்த பேச்சு பல இளம் பெண்களுக்கு ஊக்கம் அளிக்கக்கூடியதாகவும், வாழ்க்கையில் தங்களை முதலில் வலுப்படுத்திக்கொள்ள வேண்டியது எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தக்கூடியதாகவும் அமைந்துள்ளது.  இந்த நிலையில், மிருணாள் தாகூர் நடித்த "டகோயிட்" மற்றும் "சன் ஆப் சர்தார் 2" திரைப்படங்கள் விரைவில் திரைக்கு வரவுள்ளதால், அவரது ரசிகர்கள் மற்றும் சினிமா உலகமே இப்போது அவரைத் தொடர்ந்து கவனித்து வருகிறார்கள்.

வெறும் அழகு, நடிப்பு மட்டுமல்லாமல், உணர்வும், நல்ல மனநிலையும் இணைந்த ஒரு கலைஞர் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார் மிருணாள் தாகூர் எனலாம்.

இதையும் படிங்க: அழகாக ஆசைப்பட்டு உதடு வீங்கிய நிலையில் நடிகை...! தனது லிப் பில்லர் அனுபவத்தை பகிர்ந்த உர்பி ஜாவத்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share