×
 

சினிமா விமர்சகர்களுக்கு தடை விதிங்க..! ஆத்திரத்தில் தயாரிப்பாளர் சங்கம்..அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்..!

சினிமா விமர்சகர்களுக்கு எதிராக  தயாரிப்பாளர் சங்கத்தினர் தொடர்ந்த வழக்கிற்கு நீதிபதி தீர்ப்பு வழங்கியிருக்கிறார்.

சமீப காலமாக தமிழ் மட்டுமல்லாது அனைத்து திரை உலகிலும் வருகின்ற படங்கள் அனைத்தும் ஃப்ளாப் ஆகி வருகிறது. மேலும் தியேட்டரில் தோல்வி அடைகின்ற திரைப்படங்கள் அனைத்தும் ஓடிடியில் வெளியாகும் பொழுது பார்க்கும் மக்கள் இந்தப் படத்தையா நாம் நன்றாக இல்லை என்று சொன்னோம்... என வருத்தப்படும் அளவிற்கு மக்களையே கொண்டு போய் சேர்த்து வருகின்றனர் திரைப்பட விமர்சகர்கள்.

முன்பெல்லாம் திரைப்படங்கள் வெளியானால் அதனைப் பார்க்கும் ரசிகர்கள் படம் மிகவும் அருமையாக இருக்கிறது என்றாலும்... இல்லை என்றாலும் தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என அனைவரிடமும் மகிழ்ச்சி பொங்க தெரிவித்து வருவர். சில நேரங்களில் டீக்கடையில் அமர்ந்து பேசும்பொழுது கூட அந்த படத்தில் காட்சிகள் எப்படி இருந்தது தெரியுமா? அடி.. தூள் கிளப்பி இருக்கிறார் இந்த நடிகர் என பேசும் பொழுது படத்தை பார்க்க வேண்டும் என்ற அதிகமான ஆர்வத்தால் திரைப்படங்களைக் காணச் சென்ற கூட்டங்கள் அதிகம்.

இதையும் படிங்க: அஜித்தின் அடுத்த படத்தில் ஹீரோயினி யார் தெரியுமா..! கண்டிப்பாக பிளாக்பஸ்டர் தான் போல..!

இப்படி இருக்க என்று இணையதளங்கள் அதிகமாக வளர தொடங்கியதோ அன்றில் இருந்து திரைப்படங்களை விமர்சனம் செய்பவர்களும் அதிகரித்து இருக்கின்றனர். குறிப்பாக சமீபத்தில் வெளியான நடிகர் சந்தானத்தின் "டிடி நெக்லஸ் லெவல்" திரைப்படத்தை குறித்து பார்த்தால் அந்தத் திரைப்படத்தில் திரைப்படங்களை விமர்சனம் செய்து, படம் ஓடுகிறதா ஓடவில்லையா என ஒருவர் சொல்வதால் எவ்வளவு பிரச்சனைகள் வருகிறது என்பதை நகைச்சுவையாக காண்பித்து இருப்பார் இயக்குனர். இப்படி ஒரு காலத்தில் அக்கம் பக்கத்தில் சொல்வதைக் கேட்டு படங்களை பார்க்கச் சென்ற காலம் போய் தற்பொழுது ரிவியூவர்கள் சொல்வதை வைத்து தான் படம் எப்படி உள்ளது என மக்கள் கணிக்கின்றனர்.

குறிப்பாக சமீபத்தில் வெளியான நடிகர் சூர்யாவின் திரைப்படங்கள் முதல் பல திரைப்படங்கள் வரை ஆன்லைன் ரிவியூவர்களால் தான் ஃபிளாப் ஆனது என பலரும் தங்களது ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர். இப்படி இருக்க, உங்களுக்கு என்னப்பா.. நீங்க படத்தை பார்த்துவிட்டு படம் நன்றாக இருக்கிறதா..? இல்லையா..? என உங்கள் வாய்க்கு வந்தபடி சொல்லிவிட்டு செல்வீர்கள். ஆனால் இந்த படத்தில் உழைத்தவர்கள், படத்தில் நடித்தவர்கள், படத்தை தயாரித்தவர்கள் என அனைவரது உழைப்பும் இந்த திரைப்படத்தில் இருக்கிறது என்பதை ஏன்? ஒருவரும் பேச மாட்டேங்கிறீர்கள் என பல சினிமா பிரபலங்கள் முதல் தயாரிப்பாளர்கள் வரை தங்களது வேதனைகளை குமரிக் கொண்டுதான் இருக்கின்றனர். 

தற்பொழுது சினிமா ரிவீவர் என்ற லிஸ்டில் முதலில் இருப்பவர் யார் என்றால் அவர் தான் 'ப்ளூ சட்டை மாறன்'. அவரது பதிவுகளையும் பார்த்து பலரும் அவரை வசை பாடி வருகின்றனர். படம் வெளியாகும் பொழுது இவர்கள் கொடுக்கும் ரிவ்யூவால் படத்தை பார்க்க யாரும் வருவதில்லை என்பதால் படம் வெளியான மூன்று நாட்களுக்கு எந்த ரிவியூவரும் படத்தைக் குறித்து எந்த விதமான விமர்சனங்களையும் இணையதளங்களில் பதிவிட கூடாது என உத்தரவிடுமாறு சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினர் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், " நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான்.. ஆனால், ஆன்லைன் விமர்சனத்தை தடை செய்வது என்பது பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமையில் தலையிடுவதற்கு சமம். சமூக வலைத்தளங்களில் நீதிபதிகளையே பலரும் விமர்சிக்கும் காலத்தில் நாம் இருக்கிறோம்.

இப்படி இருக்க சமூக வலைத்தளயுகத்தில் தனிநபரோ அல்லது நாடோ.. யாருமே தப்பிக்க முடியாது. அதுமட்டுமல்லாமல் ஆரம்பத்தில் பல விமர்சனங்களை சந்திக்கும் திரைப்படங்கள் கூட பின்பாக வெற்றி பெறும் வரலாறும் நாம் கண்டிருக்கிறோம். ஆதலால் நீங்கள் முன் வைத்திருக்கும் இந்த மனுவை எங்களால் ஏற்க முடியாது அது சாத்தியமும் அற்றது. ஆகவே புதுப்பட ஆன்லைன் விமர்சனத்தை இங்கே நீங்கள் தடுக்க நினைத்தால் அஜர்பை ஜானில் மற்றொருவர் அதையே செய்வார். அப்பொழுது அங்கு போய் என்ன செய்வீர்கள் வழக்குத் தொடுப்பீர்களா?  எனவே நேர்மறையான விமர்சனங்களை மட்டுமே என்றைக்கும் தயாரிப்பாளர்கள் எதிர்பார்க்கக் கூடாது. மேலும் புதிதாக வெளியாக கூடிய திரைப்படங்களை தற்போது பலரும் தங்கள் வீடுகளில் இருந்தபடியே பார்ப்பதற்கு ஏற்றபடி ஓடிடி தளங்களும் வந்துவிட்டது.

ஆதலால் இதில் திரையரங்கு நிறுவனங்களே பல சவால்களை சந்தித்து வருகிறது என்பதை தயாரிப்பாளர்கள் நீங்களும் மறந்து விடக்கூடாது" என தெரிவித்ததுடன் இந்த வழக்கையும் தள்ளுபடி செய்தார்.

இதையும் படிங்க: தேவயானியை பிரிய காரணம் எனது மனைவி தான்..! மனம் திறந்த நடிகர் நகுல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share