அரங்கத்தை அதிரவைக்க காத்திருக்கும் “பவர் ஹவுஸ்” பாடல்...! அனிரூத் கச்சேரியில் கூலி படத்தின் அடுத்த பாடல் வெளியாகிறதாம்..!
அனிரூத் கச்சேரியில் கூலி படத்தின் அடுத்த பாடலான “பவர் ஹவுஸ்” பாடல் அதிரடியாக வெளியாக உள்ளது.
இந்திய சினிமாவில் யாரும் அசைக்கமுடியாத இடத்தை பெற்றுள்ள ஒரே நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தான், இவர் தற்பொழுது தமிழ் சினிமாவில் ஹிட் கொடுக்கும் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் இயக்கும் ஆக்ஷன் கலந்த அதிரடி திரைப்படமான "கூலி" திரைப்பத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். அனைவரது மனதிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் அறிவிப்பு ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலகில் உள்ளவர்கள் மற்றும் திரைப்பட விமர்சகர்களும் இந்த படம் எப்படி இருக்கும் என்பதை காண ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இப்படிப்பட்ட, 'கூலி' திரைப்படத்தின் இசையை அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்து இருக்கிறார். இதுவரை லோகேஷ் கனகராஜ் இயக்கிய பல திரைப்படங்களுக்கு இசை அமைத்த பெருமை அனிருத் அவர்களையே சேரும். அந்த வரிசையில் ‘கூலி’ படத்திலும் தனது இசை மந்திரத்தை அருமையாக பயன்படுத்தி இருக்கிறார். இந்த சூழலில் படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியாகும் பொழுதெல்லாம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இந்தப் படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து, இந்திய சினிமாவின் பல பிரபலமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அவர்களில் அமீர் கான், சத்யராஜ், தெலுங்கு சூப்பர்ஸ்டார் நாகர்ஜுனா, மலையாள நடிகர் சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் கன்னட நடிகர் உபேந்திரா ஆகிய அனைவரும் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களைத் தாங்கி நடித்து உள்ளனர். இப்படி பல நட்சத்திரங்களை வைத்து உருவாகியுள்ள இந்த ‘கூலி’ திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி உலகம் முழுவதும் உள்ள அனைத்து திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளது. இந்த சூழலில், ஏற்கனவே வெளியான பாடல்கள் படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளன. அதன்படி முதலில் வெளியான ‘சிக்கிடு’ பாடல், பிறகு வெளியான ‘மோனிக்கா’ பாடல் முதலானவை, ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றன.
குறிப்பாக மோனிக்கா பாடலுக்காக படக்குழு வெளியிட்ட வீடியோ, யூடியூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. பாடலின் திரைக்காட்சிகள், ரஜினியின் ஸ்டைலிஷ் நடனம், அனிருத் இசை என இவை அனைத்தும் சேர்ந்து ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மேலும் வலு சேர்த்துள்ளது. இந்த நிலையில், ‘கூலி’ படத்தின் மூன்றாவது பாடலான “பவர் ஹவுஸ்” பாடல் குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. சமீபத்தில் இப்படக்குழு வெளியிட்ட வீடியோவின் மூலம், 'பவர் ஹவுஸ்' பாடல் வெளியீட்டுக்கான தேதி மற்றும் நேரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஜூலை 22-ம் தேதி, இரவு 9.30 மணிக்கு, ஐதராபாத்தில் நடைபெறும் அனிருத் இசை நிகழ்ச்சியில் 'பவர் ஹவுஸ்' பாடல் வெளியிடப்படுகிறது.
இதையும் படிங்க: இணையத்தில் லீக்-ஆன ரஜினியின் ‘கூலி’ படத்தின் கதை...! படக்குழுவை பதறவைத்த அதிர்ச்சி சம்பவம்..!
https://x.com/sunpictures/status/1945823298732032471
ஏற்கனவே அனிருத் இசை நிகழ்ச்சிகள் மிகவும் பிரபலமாகவும், ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் நிகழ்வுகளாகவும் இருந்து வருகின்றன. ஆகையால், அந்த நிகழ்ச்சியில் 'பவர் ஹவுஸ்' பாடலின் வெளியீடு மேலும் சிறப்பூட்டும். “பவர் ஹவுஸ்” என்ற பெயரிலேயே பெரும் பவர் உள்ளடக்கியது போல உள்ளது. இந்த பாடல் ரஜினியின் கேரக்டரின் சக்தி, கம்பீரம், ஸ்டைல் மற்றும் ஆட்டத்தை வெளிக்கொண்டு வரும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். பாடலின் லிரிக்ஸ் மற்றும் பீட் அனிருத் தனிச்சிறப்பாக அமைத்திருக்கலாம் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கூறிவருகின்றனர். மேலும், ‘கூலி’ திரைப்படத்தின் போஸ்டர்கள், டீசர், என தொடர்ந்து வெளியாகும் ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களிடையே ஆர்வத்தை எகிற செய்து வருகிறது. லோகேஷ் கனகராஜ் மற்றும் ரஜினிகாந்த் கூட்டணியின் முதல் படம் என்பதால்,
இதில் இருக்கும் ஸ்டைலான காட்சிகளும், கடுமையான மோதல்களும் ரசிகர்களை திரையரங்கில் உற்சாகத்தில் ஆழ்த்தும் என்பதில் துளிகூட சந்தேகமில்லை. எனவே 'பவர் ஹவுஸ்' பாடல் வெளியாகும் ஜூலை 22ம் தேதி இரவு 9.30 மணியளவில் ஐதராபாத் அனிரூத் இசையில் அதிரப்போகிறது.
இதையும் படிங்க: கமல்ஹாசனின் 'மநீம-வில்' இணைந்தாரா ரஜினி காந்த்..? புகைப்படத்தால் கலக்கத்தில் ரசிகர்கள்..!
 by
 by
                                    